நான் மட்டும் என்ன இளிச்சவாயா...நடுராத்திரியில் பிக்பாசை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய ஐக்கி பெர்ரி

சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் 51 வது நாளில் லக்சுரி பட்ஜெட் டாஸ்க் நடத்தப்பட்டது. இதில் போர்டிங் ஸ்கூலாக மாறிய பிக்பாஸ் வீட்டில் ஆண் போட்டியாளர்களில் சிலர் ஆசிரியர்களாகவும், மற்ற போட்டியாளர்கள் அனைவரும் மாணவர்களாகவும் மாற வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டது.

முதல் நாளில் கண்டிப்பான வார்டனான சிபியின் பேச்சை கேட்காமல் அடம் பிடித்து சேட்டை செய்தார் பிரியங்கா. இது ரசிக்கும் படியாக ஜாலியாக இருந்தாலும், பிரியங்காவிற்கு தண்டனை கொடுத்து இரவு முழுவதும் வெளியிலேயே தூங்க வைத்தார் சிபி.

கலரிங் பண்ண சென்ன பிக்பாஸ்

கலரிங் பண்ண சென்ன பிக்பாஸ்

போர்டிங் ஸ்கூலில் ஹேர் கலரிங் அனுமதிக்கப்படுவதில்லை என கூறி அக்ஷரா மற்றும் ஐக்கியின் தலை முடியை கருப்பாக மாற்றக் கூறினார் பிக்பாஸ். வருணிடம் தாடியை டிரிம் பண்ண வேண்டும் என்றும், அபினய்யிடம் தலையை எண்ணெய் வைத்து படி வாரும்படி கூறினார் வார்டனாக இருக்கும் சிபி. பிக்பாஸ் சொன்னதன் பேரில் சிபி இந்த உத்தரவை பிறப்பித்தார்.

நள்ளிரவில் ஐக்கியின் சேட்டை

நள்ளிரவில் ஐக்கியின் சேட்டை

இந்நிலையில் 51 வது நாளின் நள்ளிரவு 3.35 மணியளவில் அனைவரும் தூங்கிக் கொண்டிருக்கையில், வார்டன் அறை, விதிகள் என ஒட்டிப்பிடிருந்த பலகைகள் மீது மார்க்கரால் கிரிக்கி வைத்தார் ஐக்கி பெர்ரி. ராஜு மற்றும் சிபியின் முகங்களிலும் மார்க்கரை வைத்து கிரிக்கி வைத்தார். பிறகு டிராயிங் வரைந்த காகிதங்கள் இருந்த போர்டிலும் கிரிக்கி வைத்தார்.

 என்னை கேட்டீங்களா

என்னை கேட்டீங்களா

பிறகு அங்கிருந்த பிக்பாஸ் கண் இருக்கும் டிராயிங்கை எடுத்து, எனக்கு அந்த கலர் ரொம்ப பிடிக்கும் என தெரிந்தும் இரண்டும் முறை என்னை கருப்பு நிற கலரிங் மாற்ற வைத்தார். சரி பண்ண வைத்தீர்கள். நான் அதை செய்த பிறகு நன்றாக பண்ணியிருக்கிறார். நான் சாப்பிட்டேன், நீங்க சாப்பிட்டீங்களா ஐக்கி என ஒருமுறையாவது கேட்டீங்களா.

நிரூப்பை ஏன் சொல்லல

நிரூப்பை ஏன் சொல்லல

இந்த வீட்டில் உள்ள யாரிடமாவது ஒரு நாளாவது சிரித்து பேசி உள்ளீர்களா. எப்போதும் உர்ருன்னு பேசுறீங்க. ஐக்கி ஹேர் கலர் மாற்றணும் என சொல்லிய மாதிரி, நிரூப்பை மொட்டை அடிக்கவோ, டிரிம் பண்ணவோ சொல்லிருக்க வேண்டியது தான. தாமரை அக்காவிற்கு சுடிதான் கம்ஃபர்டபிளாக இருக்க மாதிரி எனக்கு இப்படி இருக்க பிடிச்சிருக்கு.

நான் என்ன இளிச்சவாயா

நான் என்ன இளிச்சவாயா

இது பிக்பாஸ் வீடாக இருந்த வரை ஓகே. ஆனால் போர்டிங் ஸ்கூலாக மாறிய பிறகு எல்லாம் மாறிடுச்சு. எனக்கு மட்டும் எப்பவும் இப்படி தான் நடக்குது. நான் மட்டும் என்ன இளிச்சவாயா பிக்பாஸ் என லெஃப்ட் அண்ட் ரைட் வாங்குகிறார் ஐக்கி. இவர் பேசியதை கேட்ட பிறகு ரசிகர்களும், ஆமாம் இவர் கேட்பது சரி தானே. டாஸ்க்கில் ஒன்றை மாற்ற சொல்லும் போது சிலரை மட்டும் குறிவைத்து ஏன் செய்ய சொல்ல வேண்டும். நிரூப்பை மட்டும் முடியை எதுவும் செய்ய சொல்லாதது ஏன் என பலர் கேட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X