»   »  ஒரு மெல்லிய கோடு... இளையராஜாவின் 1001-வது பட இசை வெளியீடு!

ஒரு மெல்லிய கோடு... இளையராஜாவின் 1001-வது பட இசை வெளியீடு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இளையராஜாவின் 1001-வது படமான ஒரு மெல்லிய கோடு இசை வெளியீடு நேற்று பிரசாத் ஸ்டுடியோவில் நடந்தது.

அக்ஷயா கிரியேசன்ஸ் பட நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ள படம் "ஒரு மெல்லிய கோடு. இந்தப்படத்தில் அர்ஜுன், ஷாம் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக அக்ஷாபட், நேஹா சக்சேனா நடிக்கிறார்கள். மற்றும் மனிஷா கொய்ராலா, ரவிகாளே, ஜீன், அருள்மணி ஆகியோர் நடிக்கிறார்கள்.

Ilaiyaraaja's 1001 movie audio launch

இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். ஏஎம்ஆர் ரமேஷ் எழுதி இயக்கியுள்ளார்.

படம் குறித்து இயக்குநர் ஏஎம்ஆர் ரமேஷிடம் கேட்டோம்...

"நான் இயக்கிய அனைத்து படங்களுமே நிஜ சம்பவங்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டவைதான். இந்தப் படத்தின் கதை நிஜ சம்பவமா இல்லையா என்பதை படம் பார்க்கும் போது அறிவீர்கள். படத்தின் ஆரம்பம் முதல் கிளைமாக்ஸ் வரை படு வேகமான திரைக்கதை இருக்கும். ஆக்ஷன் திரில்லராக வந்துள்ளது படம்.

இந்தப் படம் தமிழ், கன்னடம் ஆகிய 2 மொழிகளில் தயாரானது. தமிழ் படத்துக்கு, ‘ஒரு மெல்லிய கோடு' என்றும், கன்னட படத்துக்கு, ‘கேம்' என்றும் பெயர் சூட்டப்பட்டது. இதில், கன்னட படமான ‘கேம்,' ‘யு ஏ' சான்றிதழுடன் கடந்த மாதம் 26-ந் தேதி வெளியானது. தமிழ் படத்தில், பல காட்சிகளை நீக்கும்படி தணிக்கை குழுவினர் கூறியதால், படம் மறு தணிக்கைக்கு அனுப்பப்பட்டது.

இது, சசிதரூர்-சுனந்தா புஷ்கர் கதை அல்ல. ஒரு கொலையையும், அதன் பின்னணி மற்றும் புலன் விசாரணையை பற்றிய கதை. மறு தணிக்கை குழுவினரிடம் இதை விளக்கமாக எடுத்துச் சொல்லி, ஒரு மாத கால போராட்டத்துக்குப்பின், ‘யு ஏ' சான்றிதழுடன் படத்தை திரைக்கு கொண்டு வர அனுமதி பெற்று இருக்கிறோம். மறு தணிக்கையில், ஒரு காட்சி கூட நீக்கப்படவில்லை.

இசைஞானி இளையராஜாவின் 1001 வது படம் இது. அவரது பின்னணி இசை படத்தின் திரைக்கதைக்கு மிகப்பெரிய பலம். அவரது இசையில் அனைத்து பாடல்களும் சிறப்பாக வந்துள்ளன," என்றார்.

படத்தின் இசை வெளியீடு இளையராஜாவின் ஒலிப்பதிவுக் கூடம் அமைந்துள்ள பிரசாத் ஸ்டுடியோவில் நேற்று நடந்தது. இசைத் தகட்டை இளையராஜா வெளியிட்டார். நடிகர்கள் அர்ஜூன், ஷாம், அக்ஷாபட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    English summary
    Ilaiyaraaja's 1001st movie Oru Melliya Kodu audio was launched at Prasad Studio.
    Please Wait while comments are loading...

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil