»   »  இப்படி ஒரு இசை மேதை இனி பிறக்கமாட்டார் ... - பாலமுரளிகிருஷ்ணாவுக்கு இளையராஜா அஞ்சலி!

இப்படி ஒரு இசை மேதை இனி பிறக்கமாட்டார் ... - பாலமுரளிகிருஷ்ணாவுக்கு இளையராஜா அஞ்சலி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்த இசை மேதை டாக்டர் எம் பாலமுரளிகிருஷ்ணா உடலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா நேரில் சென்று மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.

86 வயதான பாலமுரளிகிருஷ்ணா நேற்று தன் இல்லத்தில் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு நாடு முழுவதும் இரங்கல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

 Ilaiyaraaja's tribute to Balamuralikrishna

பாலமுரளிகிருஷ்ணா மீது பெரும் மரியாதையும் அன்பும் கொண்டிருந்த இசைஞானி இளையராஜா, அவர் மறைவைக் கேட்டு மிகுந்த துயருற்றார்.

மிகப் பெரிய இசைச் சரித்திரம் மறைந்துவிட்டதே என வேதனைப்பட்டார். உடனடியாக நேற்று இரவு அவர் பாலமுரளிகிருஷ்ணாவின் உடலுக்கு நேரில் போய் அஞ்சலி செலுத்தினார்.

"அண்ணா பாலமுரளிகிருஷ்ணா மிகப் பெரிய இசை மேதை. இப்படி ஒரு இசைமேதை இனி இந்தியாவில் பிறக்கமாட்டார். தாங்க முடியாத பேரிழப்பு," என்றார் இளையராஜா.

English summary
Ilaiyaraaja's tribute to Balamuralikrishna Maestro Ilaiyaraaja has paid his last respect to legend Balamurali Krishna.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil