Don't Miss!
- Automobiles
இன்சூரன்ஸை கிளைம் செய்ய முடியாமல் அவதிக்குள்ளாகும் கியா ஹூண்டாய் கார் உரிமையாளர்கள்... இதற்கான காரணம் என்ன?
- News
பாஜகவுக்கு ‘ஐடியா’வே இல்ல.. ஓபிஎஸ் இழுத்து விடுறார்.. மூல காரணமே அவர் தானாம்.. மாஜி சொல்லும் சேதி!
- Lifestyle
Today Rasi Palan 31 January 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள நேரிடலாம்...
- Finance
LIC மட்டும் அல்ல, PNB-யும் அதானி குழுமத்தில் மிகப்பெரிய அளவில் முதலீடு.. அச்சத்தில் முதலீட்டாளர்கள்!
- Sports
சுப்மன் கில் டி20 போட்டியில் வேண்டாம்..தயவு செய்து U19 கேப்டனுக்கு வாய்ப்பு தாங்க..பாக் வீரர் பேட்டி
- Technology
Oppo: வெயிட்டான கேமரா செட்டப்.. கதகளி ஆடப்போகும் புதிய ஒப்போ போன்.. பிப்.3-ல் அறிமுகம்!
- Travel
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சுவையான உணவுகளுடன் திருத்தப்பட்ட IRCTCயின் மெனு!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
அகி மியூசிக் உரிமையாளர் மீது இளையராஜா ரசிகர்கள் கமிஷனர் அலுவலகத்தில் புகார்!
சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவின் புகழுக்கும் சாதனைக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் இணையத்தில் படங்கள் வெளியிட்டு வருவதாக, அகி மியூசிக் நிறுவன உரிமையாளர் அகிலன் மீது சென்னை மாநகர காவல் துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இளையராஜா நற்பணி மன்றத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் இந்தப் புகாரைக் கொடுத்துள்ளார்.
தனது புகாரில், "இசைஞானி இளையராஜா, உலகம் போற்றும் மாபெரும் இசை மேதை. பலருக்கும் வழிகாட்டியாக, ஞானத் தந்தையாகத் திகழ்கிறார்.
வரும் ஜூன் 2-ம் தேதி இளையராஜாவின் பிறந்த நாள். இது இசை ரசிகர்களுக்கு புனிதமான நாளாகும்.
இவரது இசையில் வந்த பாடல்களை சில ஆண்டுகளுக்கு வெளியிடும் உரிமை பெற்றதாகக் கூறிக் கொள்ளும் அகி மியூசிக் நிறுவனத்தின் அகிலன் என்பவர் வேண்டுமென்றே இளையராஜாவை அவமானப்படுத்தும் வகையில் அவர் பிறந்த நாளன்று ஆபாச, அறுவருக்கத்தக்க தலைப்புகளில் இசைக் குறுந்தகடுகளை வெளியிடுவதாக அறிவித்துள்ளார்.
இசைக்கும் பாடலுக்கும் உரியவரான இசைஞானி இளையராவிடம் இதுபற்றி எந்த முன் அனுமதியும் பெறாமல் தன்னிச்சையாக இந்த சிடிக்களை வெளியிடத் தயாராகி வருகிறார் அகிலன்.
இளையராஜாவின் பாடல்களை தொடர்ந்து வெளியிடும் உரிமையை அகிலனிடமிருந்து ரத்து செய்வதற்கான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் அவர் இளையராஜாவின் பாடல்களை வெளியிடுவது தவறு.
மேலும் ஒரு மாபெரும் சாதனைக் கலைஞரான இளையராஜா பிறந்த நாளில், அவரை அவமானப்படுத்தும் வகையிலும் சில இசை ஆல்பங்களை அவர் பெயர், படம் பொறித்து, வெளியிடும் முயற்சியில் உள்ளார் அகிலன்.
இந்த சிடிக்கள் வெளிவராமல் தடுத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பேஸ்புக், அகிமியூசிக்.காம் உள்ளிட்ட தளங்களில் அகிலன் பதிந்துள்ள இந்த சிடிக்களின் கவர் படங்களை நீக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் புகாரை ஏற்றுக் கொண்ட கமிஷனர், இது தொடர்பான விசாரணைக்கு சைபர் க்ரைம் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கெனவே இளையராஜாவுக்கு ராயல்டி தொகை கொடுக்காமல் ஏமாற்றுவதாக அகிலன் மீது இளையராஜா சார்பில் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக ஒரு வழக்கும் நிலுவையில் உள்ளது.