மூகாம்பிகை அம்மனுக்கு வைரத்தில் காணிக்கை செலுத்திய இசைஞானி.. தங்க வாளும் கொடுத்திருக்கிறாரே!

சென்னை: இசைஞானி இளையராஜா கடவுள் பக்தி நிறைந்தவர். தனது இசைக் கச்சேரியை எங்கு நடத்தினாலும் அவர் பாடும் முதல் பாடல் ஜனனி ஜனனி பாடல் தான். காரணம் அந்த பாடலை அவர் தனது இஷட தெய்வமாக இருக்க கூடிய மூகாம்பிகை அம்மனை தொழுதுவிட்டு தான் இசைக்கச்சேரியை தொடங்குவார். இப்படி இருக்கையில், இசைஞானி இளையராஜா கர்நாடகா மாநிலத்தில் உள்ள மூகாம்பிகை அம்மன் மற்றும் வீரபத்ர சாமிக்கு வைரத்தில் கிரீடங்களையும் தங்க வாளையும் காணிக்கையாக செலுத்தி உள்ளார்.

இசைஞானி இளையராஜா திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாவதற்கு முன்னர் அவர் தன்ராஜ் மாஸ்டரிடம் உதவியாளராக இருந்தார். அந்த காலகட்டத்தில் அவர் கச்சேரி நடத்தும் இடங்களுக்கு இவரும் உடன் செல்வார். அப்படி அவர் மைசூருக்கு சென்றபோது, கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஹோட்டல் அறையிலேயே முடங்கிப் படுத்திருந்துள்ளார். தனது நண்பர்கள் அழைத்ததால் மூகாம்பிகை கோவிலுக்கு சென்றுள்ளார். மேலும் காய்ச்சலால் அவதிப்பட்டு சாவதற்கு பதிலாக, போகிற உயிர் கோவில் வாசலில் போகட்டும் என்ற எண்ணத்தில் மூகாம்பிகை கோவிலுக்குச் சென்றுள்ளார். கோவில் வாசலை மிதித்ததும், இளையராஜாவின் காய்ச்சல் காணாமல் போய்விட்டது. இது மட்டும் இல்லாமல், அங்கிருந்து சென்னை திரும்பிய பின்னர், இசையமைப்பாளர் ஆகும் தருவாயில் கோயிலுக்குச் செல்லலாம் என்று நினைத்துக் கொண்டு இருந்தார் இசைஞானி.

ஆனால் கோவிலுக்குப் போக முடியவில்லை. அப்படியான நிலையில் அவர் தங்கியிருந்த அறையை யாரோ தட்டுகிறார்கள். கதவைத் திறந்து பார்த்தால் யாரோ ஒருவர் மிகவும் இளையராஜா கையில் பிரசாதத்தை கொடுத்துவிட்டு, தான் மூகாம்பிகை அம்மன் கோவிலில் இருந்து வருவதாகவும், அம்மன் தான் தன்னை அனுப்பியதாகவும் கூறியுள்ளார். எதிரில் நிற்பவர் அப்படிச் சொன்னதும் இளையராஜாவுக்கு தலைகால் புரியாத நிலை. ஆனால் அடுத்த சில விநாடிகளிலேயே அவர் அங்கிருந்து சென்றுவிட்டார் என்று இசைஞானி பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.

Ilayaraja Gave as present Diamond Crowns And Golden Knife To Kolluru Shri Mookambika Devi Temple
Photo Credit:

பக்தி: இதன் காரணமாகவே, மூகாம்பிகை அம்மன் என்றால் இசைஞானிக்கு அவ்வளவு பிரியம், அவ்வளவு பக்தி. அப்படியான தனது இஷ்ட தெய்வத்திற்கு இசைஞானி இளையராஜா, வைரத்தில் கீரிடமும், தங்கத்தால் ஆன வாளும் காணிக்கையாக செலுத்தி உள்ளார். திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததை அடுத்து அம்மனுக்கு காணிக்கை செலுத்தியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அப்போது அவருடன் இசையமைப்பாளரும் இசைஞானியின் மகனுமான கார்த்திக் ராஜா இருந்தார்.

பாராட்டு விழா: வரும் 13ஆம் தேதி அதாவது நாளை மறுநாள், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இசைஞானிக்கு தமிழ்நாடு அரசு சார்பில், பாராட்டு விழா நடைபெறவுள்ளது. இப்படி இருக்கையில் அதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இந்த பாராட்டு விழா நடைபெறவுள்ளது. திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததையொட்டி இசைஞானிக்கு இந்த பாராட்டு விழா தமிழ்நாடு அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது மட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரைத்துறையைச் சேர்ந்தவர்களும் கலந்து கொள்ள உள்ளார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் இசைஞானி இளையராஜா குறித்து சிறப்புரை ஆற்ற உள்ளார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X