»   »  அன்னக்கிளி ரசம், நாயகன் அல்வா... ஹோட்டலில் வாழும் இளையராஜா!

அன்னக்கிளி ரசம், நாயகன் அல்வா... ஹோட்டலில் வாழும் இளையராஜா!

Posted By:
Subscribe to Oneindia Tamil
இளையராஜாவுக்கு பத்மவிபூஷன்

சான்பிரான்சிஸ்கோ : இசைஞானி இளையராஜாவின் தீவிர ரசிகர் ஒருவர் சான் பிரான்சிஸ்கோ நகரில் பாடல் (Baadal) என்ற பெயரில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தனது ஹோட்டலின் மெனு வகைகளுக்கு வித்தியாசமான முறையில் பெயர் சூட்டியுள்ளார்.

இளையராஜா இசையமைத்து ஹிட்டான படங்களின் பெயர்களில் தனது ஹோட்டலில் தயாராகும் உணவு வகைகளுக்கு பெயர் வைத்துள்ளார். வாடிக்கையாளர்கள் இதனை ஆச்சரியமாக பார்த்து அதிகமாக வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

 Ilayaraja special menu in a hotel

இளையராஜா இசையமைத்த படங்களின் பெயரிலான ஸ்பெஷல் உணவுகளை ருசித்து சாப்பிட அதிகளவில் வாடிக்கையாளர்கள் வருவதாகவும், இது அமெரிக்காவிலும் இளையராஜா ரசிகர்கள் அதிகம் இருப்பதை காட்டுவதாகவும் அந்த ஹோட்டலின் பணியாளர்கள் கூறியுள்ளனர்.

அன்னக்கிளி: பூண்டு ரசம்
நான் கடவுள்: கீரை மசால்
மூடுபனி: அரிசி சாதம்
தாரை தப்பட்டை: புளிசாதம்
நாச்சியார்: பன்னீர் மிளகு மசாலா
தளபதி: பூசணி கூட்டு
நாயகன்: ஓட்ஸ் அல்வா

இவையெல்லாம் அந்த ஹோட்டலில் இருக்கும் உணவு வகைகள். இசையோடு இனிமையாக சாப்பிடத்தான் இந்த ஏற்பாடாம்.

English summary
A fan of Ilayaraja is running a hotel in San Francisco City. He named ilayaraja music composed films for different types of foods.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X