Don't Miss!
- News
"அந்தரங்கம்".. மோசமான வர்ணனை.. சிக்கிய 17 வயது சிறுவன்.. செல்போனை வாங்கி பார்த்தால்.. அதிர்ந்த போலீஸ்
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Sports
இந்தியா வெல்ல சூர்யகுமார் அதை செய்யனும்.. வாசிங்டன் சுந்தர் அதிரடிக்கு காரணம் -தினேஷ் கார்த்திக்
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
என்ன மேன் டான்ஸ் ஆடுறே நீ.. ரசிகர்களிடம் மொக்கை வாங்கிய அசீம்!
சென்னை : விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்றைய தினம் 59வது நாளை எட்டியுள்ளது. ரசிகர்களின் விருப்பத்திற்கும் உள்ளாகியுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் நித்தம் ஒரு நாடகம், நித்தம் ஒரு அடிதடி என போட்டியாளர்களின் வித்தியாசமான டாஸ்குகள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. விமர்சனங்களையும் பெற்று வருகிறது.
தொடர்ந்து டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரிலும் நேரலையாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப் பட்டாலும், தினந்தோறும் இரவு வரை காத்திருந்து பார்க்கவே ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பாக்கியலட்சுமி
சீரியலில்
என்ட்ரி
கொடுத்த
பிக்பாஸ்
புகழ்
அசீம்..
ரசிகர்கள்
உற்சாகம்!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி
விஜய் டிவி எப்போதுமே வித்தியாசமான நிகழ்ச்சிகளுக்கு பெயர் போனது. இதன் பிக்பாஸ், குக் வித் கோமாளி, சூப்பர் சிங்கர்ஸ் என அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது 59வது நாளை எட்டியுள்ளது. கடந்த 5 சீசன்களை போலவே இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

வித்தியாசமான டாஸ்க்குகள்
தினந்தோறும் வித்தியாசமான டாஸ்க்குகளுடன் ரசிகர்களை நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் சந்தித்து வருகின்றனர். இதன் அடுத்தடுத்த எபிசோட்கள் ரசிகர்களுக்கு சுவாரஸ்யங்களையும் சிலருக்கு எரிச்சலையும்கூட தந்து வருகின்றன. இதனால் நல்ல கமெண்ட்ஸ்களை மட்டுமில்லாமல் மோசமான கமெண்ட்ஸ்களைகூட ரசிகர்களிடம் இருந்து இந்த நிகழ்ச்சி பெற்று வருகிறது.

அடுத்தடுத்த எலிமினேஷன்கள்
20 போட்டியாளர்களுடன் களமிறங்கிய இந்த நிகழ்ச்சி அடுத்தடுத்த போட்டியாளர்களின் எலிமினேஷன், வைல்ட் கார்ட் என்ட்ரி, ஜிபி முத்துவின் வெளியேற்றம் என தொடர்ந்து வருகிறது. இந்த வாரமும் இரண்டு போட்டியாளர்கள் எலிமினேட் ஆகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவரும் கமல்ஹாசனும் நிகழ்ச்சிக்கு கூடுதல் சுவாரஸ்யத்தை தந்து வருகிறார்.

ரசிகர்களை கவரும் போட்டியாளர்கள்
இதனிடையே தினந்தோறும் இந்த நிகழ்ச்சியில் அடுத்தடுத்த டாஸ்க்குகளுடன் ரசிகர்களை போட்டியாளர்கள் கவர்ந்து வருகின்றனர். இதனிடையே தற்போது போட்டியாளர்கள் அனைவரும் வித்தியாசமான கெட்டப்புகளுடன் அடுத்தடுத்து டான்ஸ் செய்து வருகின்றனர். இந்த நடன டாஸ்கில் கதிரவனின் டான்ஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அவர் 9000 ரூபாய்களை பெற்றார்.

மொக்கையாக நடனமாடிய அசீம்
இதை தொடர்ந்து தற்போது அசீம் இந்த டான்ஸ் டாஸ்கில் நடனமாடியுள்ளார். நலந்தானா என்ற பாடலுக்கு அவர் நடனமாடியுள்ளார். இந்தப் பாடலில் அவர் ஆடிய நடினம் மிகவும் மொக்கையாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். மிகவும் எளிமையான அசைவுகளை மட்டுமே அவரால் கொடுக்க முடிந்தது. இந்தப் பாடலுக்கு ரச்சிதா உள்ளிட்டவர்கள் ஆடிய நடனமே அனைவரையும் கவர்ந்தது.

ரசிகர்களை கவராத அசீம்
அசீம் தன்னுடைய நடனத்திற்கு 3ற்கு ஒரு பாயிண்ட் மட்டுமே பெற்றுள்ளார். கண்ணாடி எல்லாம் போட்டுக் கொண்டு வழக்கறிஞர் கெட்டப்பில் அவர் ஆட்டம் போட்டார். ஆனால் அவரால் ரசிகர்களை கவர முடியவில்லை. சக போட்டியாளர்களையும் கவர முடியவில்லை. தன்னுடைய அடாவடித்தனமான செயல்பாட்டினால் நிகழ்ச்சியில் அனைவரையும் கவர்ந்து வரும் அசீமால் நடனத்தில் ஜொலிக்க முடியவில்லை.