»   »  அதிகரித்து வரும் மல்லுவுட் விவாகரத்துகள்: லேட்டஸ்ட் அமலா பால்

அதிகரித்து வரும் மல்லுவுட் விவாகரத்துகள்: லேட்டஸ்ட் அமலா பால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: மலையாள நடிகைகள் கணவரை பிரிவது அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் கணவரை பிரிந்த நடிகைகள் பட்டியலில் லேட்டஸ்டாக சேர்ந்திருப்பவர் அமலா பால்.

மலையாள நடிகைகள் மல்லுவுட்டில் மட்டும் அல்லாமல் கோலிவுட், டோலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்கள். தமிழ் படங்களில் நடிப்பதையே முக்கிய நோக்கமாக பல மலையாள நடிகைகள் வைத்துள்ளனர்.

இந்நிலையில் மலையாள நடிகைகள் விவாகரத்து செய்வது அதிகரித்து வருகின்றது.

மஞ்சுவாரியர்

மஞ்சுவாரியர்

மஞ்சு வாரியரை கேரளாவே கொண்டாடியபோது நடிகர் திலீப்பை திருமணம் செய்து நடிப்புக்கு குட்பை சொன்னார். மஞ்சு திரும்பி நடிக்க மாட்டாரா என்று ஏங்கியவர்கள் தற்போது சந்தோஷமாக இருந்தாலும் அவர் தனது கணவரை விவாகரத்து செய்த பிறகு நடிக்க வந்ததால் கவலையில் உள்ளனர்.

ஊர்வசி

ஊர்வசி

நடிகை ஊர்வசி தான் காதலித்து திருமணம் செய்த நடிகர் மனோஜ் கே. ஜெயனிடம் இருந்து பிரிந்து விவாகரத்து பெற்றார். அதன் பிறகு இருவருமே இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டனர்.

சரிதா

சரிதா

நடிகை சரிதா காதலித்து மணந்த மலையாள நடிகர் முகேஷை விவாகரத்து செய்தார். ஒரு காலத்தில் பெரிய ஹீரோயினாக இருந்த அவர் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

லிசி

லிசி

நடிகை லிசி இயக்குனர் பிரியதர்ஷனை பிரிந்துவிட்டார். அவர்கள் பிரிய பலவகை காரணங்கள் கூறப்பட்டன. ஆனால் இனியும் ஒன்று சேர்ந்து வாழவே முடியாது என்ற முடிவுக்கு வந்துவிட்டார் லிசி.

ஜோதிர்மயி

ஜோதிர்மயி

தமிழ், மலையாள படங்களில் நடித்து வரும் ஜோதிர்மயி தனது முதல் கணவரை பிரிந்த பிறகு இயக்குனர் அமல் நீரதை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

மம்தா மோகன்தாஸ்

மம்தா மோகன்தாஸ்

நடிகையும், பாடகியுமான மம்தா மோகன்தாஸ் தான் காதலித்து மணந்த கணவரை ஓராண்டுக்குள் பிரிந்துவிட்டார். புற்றுநோயுடன் போராடி வென்றவர் மம்தா என்பது குறிப்பிடத்தக்கது.

காவ்யா மாதவன்

காவ்யா மாதவன்

மலையாள திரையுலகின் முன்னணி ஹீரோயினான காவ்யா மாதவன் திருமணம் முடிந்து கணவருடன் குவைத்தில் செட்டில் ஆனார். ஆனால் நான்கே மாதங்களில் கேரளாவுக்கு திரும்பி வந்து விவாகரத்துக்கு விண்ணப்பித்தார்.

அமலா பால்

அமலா பால்

இயக்குனர் ஏ.எல். விஜய்யை திருமணம் செய்த இரண்டே ஆண்டுகளில் அவரை பிரிந்துவிட்டார் நடிகை அமலா பால். அவர்கள் முறையே விவாகரத்து கோரி நீதிமன்றம் செல்கிறார்கள்.

English summary
Number of Malayalam actresses who get divorced has been increasing. The latest one to join the list is Amala Paul.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil