»   »  ஸ்பெக்டர்: காமசூத்ரா பிறந்த நாட்டில் முத்தக்காட்சிக்கு தடையா...டிக்கெட்டைக் கொளுத்திய ரசிகர்கள்

ஸ்பெக்டர்: காமசூத்ரா பிறந்த நாட்டில் முத்தக்காட்சிக்கு தடையா...டிக்கெட்டைக் கொளுத்திய ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: உலகம் முழுவதும் வெளியாகி பட்டையைக் கிளப்பிவரும் ஸ்பெக்டர் படத்தில் முத்தக்காட்சிகள் தடை செய்யப்பட்டதால் ஆத்திரம் கொண்ட ரசிகர்கள் படத்தின் டிக்கெட்டுகளைக் கொளுத்தி இருக்கின்றனர்.

டேனியல் கிரெய்க், மோனிகா பெல்லுச்சி மற்றும் பலர் நடிப்பில் உருவான ஸ்பெக்டர் திரைப்படம் இன்று இந்தியாவில் வெளியாகி இருக்கிறது. ஜேம்ஸ்பாண்ட் பட வரிசையில் 24 வது படமாக ஸ்பெக்டர் உருவாகி இருக்கிறது.

இந்நிலையில் இந்தியன் சென்சார் போர்டினர் படத்தில் இடம்பெற்ற பல்வேறு முத்தக்காட்சிகளையும் கத்தரித்து விட்டனர். இதனை எதிர்பாராத ரசிகர்கள் ஆத்திரத்தில் ஸ்பெக்டர் படத்தின் டிக்கெட்டுகளை கொளுத்தி இருக்கின்றனர்.

முத்தக்காட்சி கட்டான ஆத்திரம்

என்னது ஸ்பெக்டர் படத்தில முத்தக்காட்சிய தூக்கிட்டாங்களா கொளுத்துங்கடா டிக்கெட்ட என்று ரசிகர்கள் ஆத்திரத்தில் டிக்கெட் கொளுத்தும் காட்சியைப் பதிவிட்டு இருக்கிறார் ஷ்யாம் வடகர்.

காமசூத்ரா

காமசூத்ரா பிறந்த இந்திய நாட்டில் முத்தக் காட்சிகளை தடை செய்வதா என்று அபராஜித் கேட்டிருக்கிறார். உங்களுக்குத் தெரியுது அவங்களுக்கு தெரியலையே?

காதல் தனிமையில்

காதலை தனிமையில் வெளிப்படுத்தும் நாம் வெறுப்பை பொதுவாக காட்டுகிறோம் என்று இந்தியாவின் தற்போதைய நிலையை எடுத்துக் கூறியிருக்கிறார் இம்ரான்கான்.

மனசாட்சியே இல்லாம

டேய் சென்சார் போர்டு நீயெல்லாம் மனசாட்சி இல்லாதவன்டா எல்லா சீனையும் கட் பண்ணிருக்க - பிரதீப்பின் பதிவிது.

இவ்வாறு ரசிகர்கள் பலரும் சென்சார் போர்டுக்கு எதிரான தங்கள் கோபத்தினை சமூக வலைதளங்களில் கொட்டித் தீர்த்து வருகின்றனர்.

English summary
In India Fans now Burning movie tickets after hearing that censor board has cut some scenes from Spectre.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil