அப்போ விக்ரம் படத்தில் அவர் இல்லையா...லோகேஷ் பெருசா பிளான் பண்ணிருக்கார் போலவே
சென்னை : விக்ரம் ஃபர்ஸ்ட் சிங்கிளை ரசிகர்கள் கொண்டாடி முடிப்பதற்குள்ளாகவே படம் பற்றி புதிய அப்டேட் ஒன்று வெளியாகி அனைவரையும் திகைக்க வைத்துள்ளது. விக்ரம் படத்தில் லோகேஷ் கனகராஜ் வேற லெவலில் பெருசா பிளான் பண்ணிருக்கார் போலவே என ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர்.
டைக்ரடர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் விக்ரம். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர் நேஷனல் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் வேலைகள் முழுவதுமாக முடிந்து ஜுன் 3 ம் தேதி படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

பட்டையை கிளப்பிய கமல்
விக்ரம் படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா மே 15 ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இதற்கு முன் இன்று படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியிடப்பட்டது. அனிருத் இசையில் கமலே எழுதி, பாடிய பத்தல பத்தல பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு கமலின் டான்ஸ், சொந்த குரலில் பாடியதை கேட்டு ரசிகர்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

என்ன ரோலில் நடிக்கிறார்
படத்தின் ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க பல அப்டேட்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்து வருகின்றனர் படக்குழுவினர். லேட்டஸ்ட் அப்டேட்டாக விக்ரம் படத்தில் நடிகர் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்துள்ளாராம். இதனால் சூர்யா என்ன ரோலில் நடித்துள்ளார் என தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அட இவங்களும் இருக்காங்களா
ஏற்கனவே விக்ரம் படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் கெஸ்ட் ரோலில் நடிப்பதாக கூறப்பட்டது. தற்போது சூர்யாவும் கெஸ்ட் ரோலில் நடிப்பதாக கூறுகிறார்கள். சத்தமே இல்லாமல் நடத்தி முடிக்கப்பட்ட சூர்யா நடித்த காட்சிகள் எண்ணூர் துறைமுகத்தில் படமாக்கப்பட்டதாம். சூர்யா நடித்துள்ள சீனில் அர்ஜுன் தாஸ், ஹரிஷ் உத்தமன் ஆகியோரும் நடித்துள்ளார்களாம்.

அப்போ அவர் இல்லையா
விக்ரம் படத்தில் சூர்யா மிக முக்கியமான ரோலில் நடித்திருக்கிறாராம். அமிதாப் பச்சன் முதலில் நடிப்பதாக ஒப்புக் கொண்ட சீன்களில் தான் சூர்யா நடித்துள்ளாராம். அமிதாப் பச்சனுக்கு பதில் தான் கெஸ்ட் ரோலில் சூர்யா நடித்திருக்கிறார் என்ற தகவல் அனைவரையும் வாயடைத்து நிற்க வைத்துள்ளது. கமல் - சூர்யா இணைந்து நடித்துள்ள சீன்கள் தீயாய் இருக்குமாம்.

பெருசா பிளான் போட்டிருக்காரோ
விக்ரம் படத்தில் சூர்யா நடித்துள்ள தகவலை விரைவில் வீடியோ மூலமாக படக்குழு அறிவிக்க உள்ளதாம். டிரைலர் அல்லது ப்ரோமோ வீடியோவில் சூர்யா நடித்த காட்சிகள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விக்ரம் படத்தில் லோகேஷ் கனகராஜ் வேற லெவலில் பெருசா பிளான் பண்ணிருக்கார் போலவே என அனைவரும் ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர். தெரிந்த விஷயங்களே இந்த அளவில் இப்படி இருக்கிறது என்றால், இன்னும் தெரியாமல் சஸ்பென்சாக இன்னும் என்னென்ன விஷயங்களை படத்தில் வைத்திருப்பார்கள் என கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











