நயன்தாரா திருமணத்தை விட எங்க திருமணத்தால் நிறைய பேர் சம்பாதித்தாங்க.. ரவீந்தர் ஓப்பன் டாக்!
சென்னை: குல தெய்வம் கோயிலுக்குச் சென்று விட்டு திரும்பிய நிலையில், ரவீந்தர் மற்றும் மகாலக்ஷ்மி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி டிரெண்டாகி வருகிறது.
லிப்ரா புரொடக்ச்ஷன் தயாரிப்பாளர் ரவீந்தருடன் 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் விஜேவான மகாலக்ஷ்மி திருமணம் செய்து கொண்டது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
பணத்துக்காகத்தான் தயாரிப்பாளரை இரண்டாம் தாரமாக மடக்கி மகாலக்ஷ்மி திருமணம் செய்து கொண்டார் என மோசமான ட்ரோல்களும் சோஷியல் மீடியாவில் பரவின.

இரண்டாவது திருமணம்
சன் மியூசிக்கின் முன்னாள் விஜேவும் சன் டிவி சீரியல் நடிகையுமான மகாலக்ஷ்மிக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகனும் உள்ள நிலையில், கடந்த செப்டம்பர் 1ம் தேதி லிப்ரா புரொடக்ஷன் தயாரிப்பாளர் ரவீந்தரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களது திடீர் திருமணம் ரசிகர்களையும் சினிமா பிரபலங்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

நயன்தாரா நினைத்தது
இயக்குநர் விக்னேஷ் சிவன் உடன் திருப்பதியில் தனது திருமணத்தை நடத்த வேண்டும் என நயன்தாரா நினைத்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார். ஆனால், கடைசி நேரத்தில் சில பல காரணங்களால் அவரால் அங்கு திருமணம் செய்ய முடியவில்லை. ஆனால், செப்டம்பர் 1ம் தேதி நடிகை மகாலக்ஷ்மி - ரவீந்தர் திருமணம் திருப்பதியில் நடைபெற்றது.

உருவ கேலி
நடிகை மகாலக்ஷ்மி இரண்டாவது திருமணம் செய்து கொண்டதற்கு எதிராக சில திரை பிரபலங்களே நெகட்டிவ் கமெண்ட்டுகளை போட்டிருந்தனர். வாட்டர் பெட் என ரவீந்தரை உருவ கேலி செய்து ஏகப்பட்ட ட்ரோல்களும் சோஷியல் மீடியாவில் வலம் வந்தன. ஆனால், அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தனது மனைவியுடன் தேனிலவு, இன்ப சுற்றுலா, குல தெய்வம் கோயிலுக்கு செல்வது என ரவீந்தர் திருமண வாழ்க்கையை என்ஜாய் செய்து வருகிறார்.

கன்னித்தீவுக்கு போறீங்களா
இந்நிலையில் குல தெய்வம் கோயிலுக்கு சாமி கும்பிட்டுவிட்டு திரும்பிய தயாரிப்பாளர் ரவிந்தர் சந்திரசேகர் மற்றும் மகாலக்ஷ்மியிடம் செய்தியாளர்கள் கன்னித்தீவுக்கு போறீங்கன்னு சொல்றாங்களே, உண்மையா என ஜாலியாக கேட்க, ஏங்க நீங்க வேற நாங்களே குல தெய்வம் கோயிலுக்கு போயிட்டு சாமி கும்பிட்டுட்டு வருகிறோம் என சிரித்தபடி பதில் அளித்தார் ரவீந்தர்.

நயன்தாரா திருமணத்தை விட
சமீபத்தில் உச்ச நடிகைக்கு நடந்த திருமணத்தை விட உருவ கேலி காரணமாக எங்கள் திருமணம் பிரபலமாகி விட்டது. ஓடிடியில் எல்லாம் அந்த நடிகை திருமண வீடியோவை வெளியிட திட்டமிட்டுள்ளார் என நயன்தாராவை மறைமுகமாக குறிப்பிட்டு பேசியிருந்தார் ரவீந்தர். உருவ கேலி செய்து ஏகப்பட்ட பேர் எங்களை வைத்து நிறைய சம்பாதிச்சிட்டாங்க என்றும் சிரித்துக் கொண்டே கூறி விட்டு ஆளை விடுங்கடா சாமி என அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.


Click it and Unblock the Notifications











