50 நாட்களை கடந்த பிக்பாஸ் சீசன் 5...என்ன இருக்கு, என்ன இல்லை...ஒரு சுவாரஸ்ய அலசல்

சென்னை : ரசிகர்களின் அதிக எதிர்பார்ப்புக்களுடன், பிரம்மாண்டமாக அக்டோபர் 3 ம் தேதி துவங்கப்பட்டது பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி. முந்தைய நான்கு சீசன்களைப் போல் இந்த சீசனையும் கமல் தான் தொகுத்து வழங்கி வருகிறார். 100 நாட்களைக் கொண்ட இந்த நிகழ்ச்சி துவங்கப்பட்டு, திங்கள்கிழமையுடன் 50 நாட்கள் நிறைவடைந்து விட்டது.

18 பாட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் முதல் வார இறுதியில் மருத்துவ காரணங்களால் நமிதா மாரிமுத்து வெளியேறினார். அதற்கு பிறகு நாமினேஷன் மூலம் நாடியா சாங், சின்ன பொண்ணு, சுருதி, மதுமிதா, இசைவாணி ஆகியோர் வெளியேறி உள்ளனர். அபிஷேக் ராஜா எவிக்ஷன் மூலம் வெளியேற்றப்பட்டு, வைல்ட் கார்டு என்ட்ரியாக மீண்டும் உள்ளே வந்துள்ளார்.

முந்தைய சீசன்களை விட இந்த சீசன் சற்று வித்தியாசமானது என உலக நாயகன் கமலே கூறி உள்ளார். அப்படி கடந்த நான்கு சீசன்களுடன் ஒப்பிடுகையில் இந்த சீசனின் என்னவெல்லாம் இருக்கு, என்னவெல்லாம் மிஸ்ஸிங் என்பது பற்றிய தான் இங்கு பார்க்க உள்ளோம்.

பலதுறை போட்டியாளர்கள்

பலதுறை போட்டியாளர்கள்

முந்தைய நான்கு சீசன்களிலும் சினிமா மற்றும் டிவி பிரபலங்கள் தான் போட்டியாளர்களாக இருந்தனர். இவர்களுடன் ஒன்று, இரண்டு பேர் மாடலிங் துறையை சேர்ந்தவர்கள் போட்டியாளர்களாக தேர்வு செய்வார்கள். ஆனால் பிக்பாஸ் சீசன் 5 ல் மாடலிங், ராப் பாடகர், சின்னத்திரை பிரபலம், நாட்டுப்புற பாடகர், மேடை நாடக கலைஞர், சோஷியல் மீடியா பிரபலம், கானா பாடகர் என பல துறைகளை சேர்ந்த அதிகம் பிரபலம் இல்லாத நபர்கள் போட்டியாளர்களாக தேர்வாகி உள்ளனர். முதல் முறையாக அதிகமானவர்கள் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளதும் இந்த சீசனில் தான்.

காதல் இல்லாத சீசன்

காதல் இல்லாத சீசன்

முதல் சீசனின் ஓவியா -ஆரவ் காதல், 2வது சீசனில் மகத் - ஐஸ்வர்யா காதல், மூன்றாவது சீசனில் கவின் - லாஸ்லியா காதல், நான்காவது சீசனில் பாலாஜி - ஷிவானி காதல் என பரபரத்தது. ஆனால் இந்த சீசனில் காதல் என்ற பேச்சுக்கே இடமில்லை. அதே சமயம் சகோதர, நட்பு உறவு மட்டுமே போட்டியாளர்களிடம் உள்ளது. அதற்கு காரணம் சீசன் போட்டியாளர்களில் நிரூப் தவிர ஆண் போட்டியாளர்கள் அனைவருமே திருமணமானவர்கள். பெண் போட்டியாளர்களில் அக்ஷரா, ஐக்கி போன்றவர்கள் மட்டும் திருமணமாகாதவர்கள். மற்றவர்கள் கணவன் அல்லது மனைவியை பிரிந்து அல்லது இழந்து வாழ்பவர்கள். ஆரம்பத்தில் அபினய் -பாவ்னி இடையே காதல் மலர்வதாக ஒரு சில நாட்கள் காட்டப்பட்டது. ஆனால் பிறகு அது நட்பாக மட்டுமே சென்று கொண்டிருக்கிறது.

குரூப்பிசம் இருக்கு; ஆனா இல்ல

குரூப்பிசம் இருக்கு; ஆனா இல்ல

பிரியங்கா, அபிஷேக், நிரூப் ஆகியோர் ஆரம்பத்தில் குரூப்பாக இருந்தனர். ஆனால் அபிஷேக் வெளியேற்றப்பட்ட பிறகு அது காணாமல் போனது. கடந்த சீசனின் அர்ச்சனா, நிஷா, ரியோ போன்றோர் அமைத்த குரூப் அமைத்து, மற்றவர்களை நாமினேட் செய்து, பிடிக்காதவர்களை வெளியேற்ற திட்டமிடுவது போல் இல்லாமல் குரூபிசம் என்ற பேச்சிற்கு பெரிய அளவில் இடம் இல்லாமல் உள்ளது.

தினமும் கண்ணீர் காட்சி

தினமும் கண்ணீர் காட்சி

முந்தைய சீசன்களில் சண்டை, பிரச்சனை என்றால் தான் அழுதார்கள். ஆனால் இந்த சீசனின் தினம் ஒருவர் அழுகும் காட்சி உள்ளது. ஒன்று மற்றவர்கள் காயப்படுத்தியதாக அழுகிறார்கள். இல்லையென்றால் சென்டிமென்டில் உருகி அழுகிறார்கள். இந்த சீசனின் இதுவரை அதிகம் அழுதது அக்ஷரா, பாவ்னி, இசைவாணி தான். சில சமயங்களில் சிலர் காரணமே இல்லாமல் கூட அழுகிறார்கள்.

சுவாரஸ்யம் இல்லாத டாஸ்குகள்

சுவாரஸ்யம் இல்லாத டாஸ்குகள்

முந்தைய சீசன்களில் டாஸ்க் என்றாலே விறுவிறுப்பாக இருக்கும். உடல் வலிமையை பரிசோதிக்கும் டாஸ்க்காக அதிகம் இருக்கும். ஆனால் இந்த சீசனில் சின்ன பிள்ளைகள் விளையாடும் விளையாட்டுகளே அதிகம் டாஸ்காக கொடுக்கப்படுகிறது. பெரும்பாலான டாஸ்குகள் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இருப்பதை போல் உணர வைப்பதாக ரசிகர்களே கலாய்த்து விட்டனர். அதே போல் டாஸ்க் என்றாலே, அடுத்த சண்டை, மோதல் என்றாகி உள்ளது.

முதல் முறையாக பீப் சவுண்ட்

முதல் முறையாக பீப் சவுண்ட்

தமிழ் பிக்பாஸ் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு முதல் முறையாக போட்டியாளர்கள் கெட்ட வார்த்தை பயன்படுத்தி, அதற்காக பிக்பாஸ் பீப் சவுண்ட் பயன்படுத்தியது இந்த சீசனில் தான். முந்தைய சீசன்களில் குழாயடி ரேஞ்சுக்கு இறங்கி சண்டை போட்டாலும் கெட்ட வார்த்தை இதுவரை பயன்படுத்தப்பட்டதில்லை. இன்று இவர்கள் என்பது போல் தினம் ஒருவர் காரசாரமாக சண்டை போடும் காட்சி இடம்பெறுகிறது.

தினமும் என்டர்டெய்மென்ட்

தினமும் என்டர்டெய்மென்ட்

முந்தைய சீசன்களை போல் இல்லாமல் இந்த சீசனில் இமான் அண்ணாச்சி, ராஜு, பிரியங்கா, தாமரை ஆகியோர் மாறி மாறி வீட்டில் உள்ளவர்களை சிரிக்க வைத்து வருகின்றனர். சீரியசான சண்டை போய் கொண்டிருந்தால் கூட அதற்கு இடையிலும் கவுன்ட்டர் கொடுத்து சிரிக்க வைத்து வருகின்றனர். சில சமயங்களில் இவர்கள் மொத்தமாக சேர்ந்து செய்யும் காமெடிகள் ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X