எங்களின் அடுத்த படைப்பு இதுதான்...காதலர்களை கவர நயன்தாரா–விக்னேஷ் சிவனின் புது ட்ரிக்
சென்னை : பலரின் மனம் கவர்ந்த காதல் ஜோடியாக வலம் வரும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் காதல் ஜோடி இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். . இவர்கள் தயாரித்த பல படங்கள் வெற்றி அடைந்துள்ளன.
நயன்தாரா, படம் தயாரிப்பதுடன் நெற்றிக்கண், காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். புதுமுக இயக்குனர் வினோத்ராஜ் இயக்கிய கூழாங்கல் படம் சமீபத்தில் சர்வதேச விருது வென்றது. அருண் மாதேஸ்வரன் இயக்கும் ராக்கி படத்தையும் தயாரித்து வருகின்றனர். தற்போது தங்களின் அடுத்த தயாரிப்பு குறித்த அறிவிப்பை நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி வெளியிட்டுள்ளது.

இந்த படத்திற்கு வாக்கிங் டாக்கிங் ஸ்டாபெர்ரி ஐஸ்க்ரீம் என க்யூட்டாக பெயர் வைத்துள்ளனர். புதுமுக இயக்குனர் விநாயக் இப்படத்தை இயக்குகிறார். இசையமைப்பாளர் இந்த படத்தின் போஸ்டரை வெளியிட்டு, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அத்துடன், மிகவும் க்யூட்டான காதல் படமான வாக்கிங் டாக்கிங் ஸ்டாபெர்ரி ஐஸ்க்ரீம் படத்தின் போஸ்டரை வெளியிடுவதில் மகிழ்ச்சி. நயன்தாரா எப்போதும் சூப்பர் வாசகத்தை தேர்வு செய்யக் கூடியவர். மீண்டும் ஒரு வெற்றி படமாக அமைய வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.
இதை ரீட்வீட் செய்துள்ள விக்னேஷ் சிவனும், மிகவும் நன்றி. இதை தயாரிப்பதில் ரவுடி பிக்சர்ஸ் மகிழ்ச்சி அடைகிறது. முதல் படம் வெற்றி படமாக அமைய விநாயக்கிற்கு வாழ்த்துக்கள். பல வெற்றி படங்களை இயக்கவும் வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.
அனிருத்தின் இந்த போஸ்டர் பதிவை விஜய் சேதுபதி, டைரக்டர் கவுதம் மேனன் போன்ற பிரபலங்கள் பலரும் ரீட்வீட் செய்து, படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











