twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிரம்மிப்பூட்டுகிறது ‘இரவின் நிழல்‘…படத்தில் அப்படி என்னத்தான் இருக்கு !

    |

    சென்னை : பார்த்திபனின் இரவின் நிழல் படத்தைப்பார்த்து புகழ்வதற்கு வார்த்தைகளே இல்லை என இசையமைப்பாளர் அகம் மகிழ்ந்து கூறியுள்ளார்.

    50 வருட கதைக்களம் கொண்ட உலகின் முதல் நான்-லீனியர் சிங்கிள் ஷாட் படத்தை கொடுத்து இருக்கிறார் பார்த்திபன்.

    கதையோட்டத்திற்கு ஏற்ப 64 ஏக்கரில் 59 அரங்குகளில் பிரமாண்டமான செட், 300 நடிகர்கள், 150 தொழில்நுட்ப வல்லுநர்களுடன் இப்படி ஒரு படத்தை எப்படி எடுத்தார் என்பதை நினைக்கும் போதே பிரம்மிப்படைவதாக கூறியுள்ளார்.

    இரவின் நிழல் படத்தில் ஆபாச வசனங்கள் கொட்டிக் கிடக்கின்றனவா? பரபரக்கும் தகவல்கள்.. என்ன ஆகப் போகுதோ?இரவின் நிழல் படத்தில் ஆபாச வசனங்கள் கொட்டிக் கிடக்கின்றனவா? பரபரக்கும் தகவல்கள்.. என்ன ஆகப் போகுதோ?

    ஆண்டு ஒத்த செருப்பு சைஸ் 7

    ஆண்டு ஒத்த செருப்பு சைஸ் 7

    நடிகர் பார்த்திபன் இயக்கத்தில் கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு ஒத்த செருப்பு சைஸ் 7 வெளியாகி விமர்சன ரீதியில் வரவேற்பையும் பாராட்டுக்களையும் குவித்தது. ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே ஒட்டுமொத்த திரைப்படத்திலும் தோன்றும் வகையிலான திரைக்கதையை அமைத்து நடித்தது மட்டுமல்லாமல், அந்தப் படத்தை பார்த்திபனே இயக்கியும் தயாரித்தும் இருந்தார். இந்த படம் இரு தேசிய விருதுகளை வென்றது.

    இரவின் நிழல்

    இரவின் நிழல்

    இப்படத்தினைத் தொடர்ந்து தற்போது இரவின் நிழல் படத்தை இயக்கி வருகிறார் பார்த்திபன். இந்தப்படம், ஆசியாவிலேயே முதன்முதலாக சிங்கிள் ஷாட்டில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். சமீபத்தில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பாடல்கள் வெளியாகின.

    நான் லீனியர் சிங்கிள் ஷாட்

    நான் லீனியர் சிங்கிள் ஷாட்

    இந்த திரைப்படத்தை சிங்கிள் ஷாட்டில் படமாக்கி சாதனையாக திட்டமிட்ட பார்த்திபன் அதற்காக, பல நாட்கள் பயிற்சி எடுத்து அரங்குகள் அமைத்து 250 தொழிலாளர்களுடன் படமாக்கி உள்ளார். ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட் அமைப்புகள் 'இரவின் நிழல்' படத்தை முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படம் என அங்கீகரித்துள்ளது.

    சிறப்பு காட்சி

    சிறப்பு காட்சி

    இந்நிலையில், இரவின் நிழல் படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சற்றுமுன் தான் இந்த படத்தை பார்த்தேன் பார்த்ததும் என்னால் ஆர்வத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் இந்த வீடியோவை எந்தவித திட்டமிடலும் இல்லாமல் உடனடியாக பதிவு செய்கிறேன். இரவின் நிழல் படத்தை பார்த்து பிரம்மித்து போனேன்.

    பிரம்மிப்பூட்டுகிறது

    பிரம்மிப்பூட்டுகிறது

    நான் லீனியர் சிங்கிள் ஷாட்டில் இப்படி ஒரு படத்தை எப்படி எடுத்தார் இந்த மனுஷன் என்று தோன்றுகிறது. காட்சிக்கு காட்சி பிரம்மிப்பூட்டும் வகையில் இருக்கிறது. அதேபோல சாதாரணமாக ஒரு படத்திற்கு இசை அமைப்பது போல இந்த படத்திற்கு இசையமைக்க முடியாது, முதலில் படத்தின் கதை என்ன என்பதை புரிந்து கொண்டால் மட்டுமே இசை அமைக்க முடியும் அதை அழகாக செய்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.

    English summary
    Iravin Nizhal : பார்த்திபனின் இரவின் நிழல் படத்தைப்பார்த்து பார்த்து திகைத்துப்போனேன் என்று ஜேம்ஸ் வசந்த் கூறியுள்ளார்.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X