ராஜமவுலியின் 'ஆர்ஆர்ஆர்' ரிலீஸ் தேதி.. அறிவித்துவிட்டு அவசரமாக டெலிட் செய்த பிரபல நடிகை!

By

சென்னை: ராஜமவுலியின் 'ஆர்ஆர்ஆர்' பட ரிலீஸ் தேதியை பதிவிட்ட பிரபல நடிகை, பின்னர் அவசரமாக அதை நீக்கினார்.

பிரபல இயக்குனர் ராஜமவுலி இப்போது இயக்கும் படம், 'ஆர்ஆர்ஆர்'. அதாவது, இரத்தம் ரணம் ரெளத்திரம்.

தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் இந்தப் படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.

ஜூனியர் என்டிஆர்

ஜூனியர் என்டிஆர்

இதில், தெலுங்கு ஹீரோக்கள் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் தேஜா ஹீரோக்களாக நடிக்கின்றனர். பாகுபலிக்குப் பிறகு ராஜமவுலி இயக்கும் படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. சுதந்திர போராட்ட வீரர்களான அல்லுரி சீத்தாராம ராஜூ, கொமரம் பீம் ஆகியோர் வாழ்க்கைக் கதையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாவதாகக் கூறப்படுகிறது.

சமுத்திரக்கனி

சமுத்திரக்கனி

இந்தி நடிகர் அஜய் தேவ்கன், இந்தி நடிகை ஆலியா பட், சமுத்திரக்கனி, ஸ்ரேயா உட்பட பலர் நடிக்கின்றனர். ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள ரேய் ஸ்டீவன்சன், ஐரிஸ் நடிகை அலிசான் டூடி ஆகியோரும் நடிக்கின்றனர். கீரவாணி இசை அமைக்கும் இந்தப் படத்துக்கு கே.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

சிறப்பு பயிற்சி

சிறப்பு பயிற்சி

இதில் ராம் சரண் மனைவியாக, சீதா என்ற கேரக்டரில் ஆலியா பட் நடிக்கிறார். அவர் நடிக்கும் முதல் தென்னிந்திய படம் இது. கடந்த சில நாட்களுக்கு முன் அவர் படப்பிடிப்பில் இணைந்தார். இதற்கிடையே, இந்தப் படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளுக்காக, ஸ்டன்ட் கலைஞர்களுக்கு 150 நாள் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

அலிசான் டூடி

அலிசான் டூடி

இந்நிலையில், இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி, இந்த வருடம் அக்டோபர் 8 என்று ஐரிஸ் நடிகை அலிசான் டூடி, தனது சமூக வலைதளப் பக்கத்தில் என்று குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில் அதை அவர் திடீரென நீக்கிவிட்டார். இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி ரகசியமாக வைக்கப்பட்டு இருந்த நிலையில், அவர் தெரிவித்துவிட்டார்.

கிளைமாக்ஸ் சண்டை

கிளைமாக்ஸ் சண்டை

இதனால் அவரிடம் அதை நீக்குமாறு படக்குழு கேட்டுக்கொண்டதை அடுத்து அவர் நீக்கியுள்ளார். இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி ஐதராபாத்தில் சில நாட்களுக்கு முன் தொடங்கி படமாக்கப்பட்டு வருகிறது. இதில் அலிசான் டூடியும் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X