»   »  'அடுத்த பஜனை' என்ற அறிவிப்புடன் தொடங்கிய 'இருட்டு அறையில் முரட்டுக் குத்து!' #IAMK

'அடுத்த பஜனை' என்ற அறிவிப்புடன் தொடங்கிய 'இருட்டு அறையில் முரட்டுக் குத்து!' #IAMK

Posted By:
Subscribe to Oneindia Tamil

முன்பெல்லாம் அடல்ட் ஒன்லி படங்களில், காமம் என்பது இரட்டை அர்த்த வசனங்களோடு இருந்தது. ஷகிலா படங்கள் வேறு ரகம்.

இப்போது அப்படி இல்லை. நேரடியாகவே வசனங்கள், காட்சிகளில் செக்ஸ் வழியும் அளவுக்கு எடுக்க ஆரம்பித்துவிட்டனர்.

Iruttu Araiyil Murattu Kuththu, another adult movie starts

முன்பு த்ரிஷா இல்லன்னா நயன்தாரா, இப்போது ஹரஹர மகா தேவகி. அடுத்து இதே பாணியில் மேலும் நான்கைந்து படங்கள் தயாரிப்பில் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் இருட்டு அறையில் முரட்டுக் குத்து. அடுத்த பஜனை ஆரம்பம் என்ற அறிவிப்போடுதான் இன்று படப்பிடிப்புக்கான பூஜையே ஆரம்பித்துள்ளது.

படத்தின் தலைப்பு டிசைனிலேயே ஆபாசம் பொங்கி வழிகிறது. ஆண்குறி, நிர்வாணப் பெண், பெண்ணின் உள்ளாடை, காண்டம் என எல்லாவற்றையும் ஓப்பனாகவே காட்டி விடுகிறது அந்த தலைப்பு டிசைன்.

Iruttu Araiyil Murattu Kuththu, another adult movie starts

ப்ளு கோஸ்ட் பிக்சர்ஸ் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா இந்தப் படத்தைத் தயாரித்து வழங்குகிறார்.

கவுதம் கார்த்திக், ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், கருணாகரன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். ஓவியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சந்தோஷ் பி ஜெயகுமார். ஹரஹர மகாதேவ்கி இயக்குநர் இவர்தான்.

Iruttu Araiyil Murattu Kuththu, another adult movie starts

இப்படத்தைப் பற்றி இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் கூறுகையில், 'இது ஒரு அடல்ட் ஹாரர் காமெடி படம். படப்பிடிப்பு முழுவதும் வெளிநாடுகளில் நடைபெறுகிறது. நாயகியாக நடிப்பதற்கு முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இறுதியானவுடன் விரைவில் அறிவிப்போம். படத்தின் சிங்கிள் ட்ராக் விரைவில் வெளியாகும்,' என்றார்.

English summary
The pooja of adult comedy movie Iruttu Araiyil Murattu Kuthu has been held today

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil