twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினிக்கு ஐஸ்வர்யா ராய் ஜோடியா?அமிதாப் கேட்க மாட்டாரா? கோபப்பட்ட முதியவர்..ரஜினி சொன்ன சுவாரஸ்ய கதை

    |

    2010 ஆம் ஆண்டு வெளியான எந்திரன் படத்தில் ஐஸ்வர்யா ராய் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்தியில் ரோபோ என டப் செய்யப்பட்டது.

    2010 ஆம் ஆண்டு ரோபோ விழாவில் ரஜினி பேசிய விஷயம் தற்போது வைரல் ஆகி வருகிறது. ஐஸ்வர்யாவுடன் தான் நடித்தது குறித்து சுவாரஸ்யமாக ரஜினிகாந்த் பேசியுள்ளது ட்ரெண்டாகி வருகிறது.

    இந்த நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராய் தனக்கு ஜோடியாக நடித்தது பற்றி குறிப்பிட்டு தனக்கு நேர்ந்த அனுபவம் குறித்து நகைச்சுவையாக ரஜினி குறிப்பிட்டு பேசியது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

    தனுஷுக்கு டோலிவுட்டில் இப்படியொரு ஃபேன் பேஸா.. 200 காட்சிகளுக்கு மேல் ஹவுஸ்ஃபுல்லான '3’ திரைப்படம்! தனுஷுக்கு டோலிவுட்டில் இப்படியொரு ஃபேன் பேஸா.. 200 காட்சிகளுக்கு மேல் ஹவுஸ்ஃபுல்லான '3’ திரைப்படம்!

     பொன்னியின் செல்வனில் ரஜினியின் டாப் பேச்சு

    பொன்னியின் செல்வனில் ரஜினியின் டாப் பேச்சு

    நடிகர் ரஜினிகாந்த் மிகவும் வெளிப்படையானவர் தன்னுடைய இமேஜ் பற்றி என்றுமே கவலைப்படாதவர் என்பது அனைவரும் அறிந்ததே. இரண்டு நாட்களுக்கு முன் பொன்னியின் செல்வன் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசியதுதான் ஹைலைட்டானது. கமலை அருகில் வைத்துக்கொண்டு தளபதி படத்தில் தான் 10 டேக்குகளுக்கு மேல் வாங்கி, மணிரத்னத்தை திருப்தி படுத்த முடியாமல் கமல்ஹாசனின் ஆலோசனையை கேட்டதாக நகைச்சுவையாக பேசியதால் அரங்கமே அதிர்ந்தது. அவர் தன் இமேஜ் பற்றி கவலைப்படாமல் நகைச்சுவையாக பேசியது அவருடைய பெருந்தன்மையை காட்டியது.

     2010 ஆம் ஆண்டு விழாவில் ரஜினிகாந்த் பேச்சு

    2010 ஆம் ஆண்டு விழாவில் ரஜினிகாந்த் பேச்சு

    இது ரஜினிக்கு சாதாரண விஷயம் இதேபோல் மேடையில் பல முறை வெகு சாதாரணமாக பேசியுள்ளார் ரஜினிகாந்த். இதேபோல் 2010 ஆம் ஆண்டு ரோபோ பட விழாவில் மேடையில் அமிதாப் பச்சன், ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் அமர்ந்திருக்க விழாவில் ரஜினிகாந்த ரோபோ படம் நடிக்கும் போது தனக்கு நேர்ந்த அனுபவத்தை நகைச்சுவையாக குறிப்பிட அரங்கமே அதிர்ந்தது. நடிகர் ரஜினிகாந்த் சங்கர் இயக்கத்தில் நடித்த படம் எந்திரன். ரஜினிகாந்த் ரோபோவாகவும், விஞ்ஞானியாகவும் நடித்திருப்பார். இந்தப்படம் இந்தியிலும் ரோபோ என்கிற பெயரில் வெளியானது.

     ரஜினியின் கலக்கல் பேச்சு

    ரஜினியின் கலக்கல் பேச்சு

    ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் முதன்முதலாக நடித்தார். படத்திற்கு இதுவும் ஒரு பிளஸ் பாயிண்டாக அமைந்தது. இந்த படத்தின் வெற்றி விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது, "ஐஸ்வர்யா ஜி என்னுடன் நடித்ததற்கு நன்றி, எந்திரன் படம் நடிக்கும் நேரத்தில் பெங்களூருவில் உள்ள எங்கள் அண்ணன் வீட்டிற்கு சென்றிருந்தேன். என் அண்ணன் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் ராஜஸ்தானை சேர்ந்த ஒரு குடும்பம் வசித்து வந்தது. நான் வந்ததை கேள்விப்பட்டு அந்த குடும்பத்தினர் என் வீட்டுக்கு வந்திருந்தனர். அந்த குடும்பத்தில் 60 வயது மதிக்கத்தக்க நபர் இருந்தார். அவர் பெயர் நந்துலால். அவர் எனக்கு நல்ல பழக்கம். என்னை பார்த்த அவர் "ரஜினி எப்படி இருக்கே என்ன தலையில முடியே இல்லை என்று கேட்டார். நான் 'ஆமா கொட்டி போயிடுச்சு, அந்த பேச்சை விடுங்க என்றேன். பரவால்ல ரிடையர்மெண்ட் காலத்தை நல்லா eஞாய் பண்றீங்களா என்று கேட்டார்.

     ஐஸ்வர்யா ராய் ஹீரோயினா? அப்ப ஹீரோ யாரு ரஜினியிடம் கேட்ட நண்பர்

    ஐஸ்வர்யா ராய் ஹீரோயினா? அப்ப ஹீரோ யாரு ரஜினியிடம் கேட்ட நண்பர்

    "இல்ல நான் இப்போ படம் நடித்துக்கொண்டு இருக்கிறேன் என்றேன். படமா என்ன படம் என அவர் கேட்க ரோபோட் என்கிற பட என்றேன். ஓஹ் ரோபோட்டா நல்ல விஷயம் என்றார். அந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் ஹீரோயினாக நடிக்கிறார் என்று சொன்னேன். ஐஸ்வர்யா ராயா என்ற அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்துடன் கேட்டவர், மிகப்பெரிய நடிகை, அருமை என்றவர் அடுத்து கேட்ட கேள்வி ஹீரோ யார்? என்று கேட்டார் இதை ரஜினி சொல்லி நிறுத்திய உடன் அரங்கமே சிரிப்பாலையில் அதிர்ந்தது. ஹீரோ நான் தான் என்று சொன்னேன், ஹீரோ நீயா என திரும்பத் திரும்ப என்கிட்ட கேட்டுட்டு இருந்தாரு. அவர் மகன் அவரிடம் அப்பா அவர்தான் ஹீரோ என அவரை அடக்கிக்கொண்டிருந்தார். சுமார் 10 நிமிடமா அவர்கிட்ட பேச்சே இல்ல.

    ஐஸ்வர்யா ராய் ஹீரோயினா அமிதாப் இதை எப்படி அனுமதித்தார்

    ஐஸ்வர்யா ராய் ஹீரோயினா அமிதாப் இதை எப்படி அனுமதித்தார்

    அவரால ஜீரணிக்க முடியல கொஞ்ச நேரம் பொறுத்து நான் கிளம்பின உடன் அவர் அவரது மகனிடம் ஏம்பா ஐஸ்வர்யாராய்க்கு என்ன ஆச்சு, அட இந்த அபிஷேக் பச்சனுக்கு என்ன ஆச்சு? அமிதாப்பச்சனுக்கு என்ன ஆச்சு இவர்கூட ஹீரோயினா என கோபமாக மகனிடம் கேட்டுக் கொண்டிருந்தார்" என்று சொல்லி முடித்துவிட்டு," நன்றி ஐஸ்வர்யா ஜி" என ஐஸ்வர்யா பார்த்து சொல்ல அவர் சிரித்தபடி போங்க சார் நீங்க வேற என்கிற தொனியில் கையாட்ட அரங்கம் மீண்டும் சிரிப்பலையில் மூழ்கியது. ரஜினிகாந்த் தன்னுடைய இமேஜ் பற்றி எப்பொழுதுமே கவலைப்படாதவர், வெளிப்படையாக பேசக்கூடியவர் ஆனால் இந்த அளவுக்கு வெளிப்படையாக பேசுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

     சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகும் ரஜினியின் பேச்சு

    சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகும் ரஜினியின் பேச்சு

    தன் பேச்சை ஆரம்பிப்பதற்கு முன்பே ரஜினிகாந்த் என்னுடன் கதாநாயகியாக நடிக்க ஒப்புக்கொண்டு ஐஸ்வர்யாராய்க்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று தான் பேச்சை ஆரம்பித்தார் அதற்கு எல்லோரும் லேசாக சிரித்தபடி ஏதோ சொல்ல வருகிறார் ரஜினிகாந்த் என்று நினைத்தபொழுது இவ்வளவு பெரிய விஷயம் இதற்கு பின்னால் இருக்கும் அதை சுவாரஸ்யமாக ரஜினி குறிப்பிடுவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. தற்போது இந்த பேச்சை ப்ரூட் இணையதளம் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டது அது சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

    English summary
    Aishwarya Rai acted opposite Rajinikanth in the 2010 film Enthiran. Dubbed as Robot in Hindi. Rajini's speech at the Robot Festival in 2010 is now going viral. Rajinikanth's interesting talk about his acting with Aishwarya is trending.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X