twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வழக்கறிஞர் நந்தினிக்காக நடிகை ரோகிணி கேட்ட ஒற்றைக் கேள்வி... உண்மையிலேயே கெத்து தான்!

    மது என்ன உணவு பொருளா? என நடிகை ரோகிணி கேள்வி எழுப்பியுள்ளார்.

    |

    சென்னை: வழக்கறிஞர் நந்தினிக்கு ஆதரவு அளிக்கும் வகையில் நடிகை ரோகிணி தனது டிவிட்டர் பக்கத்தில் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.

    டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வருபவர் வழக்கறிஞர் நந்தினி. கல்லூரியில் படிக்கும் போதிருந்தே மதுவுக்கு எதிராக அவர் போராடி வருகிறார். பலமுறை சிறை சென்றுள்ளார். நந்தினியின் போராட்டத்திற்கு அவரது தந்தையும் ஆதரவாக துணை நின்று வருகிறார். இருவர் மீதும் பல வழக்குகள் உள்ளன.

    Is alchohol a food product, asks actress Rohini

    இந்நிலையில் ஒரு வழக்கில் ஆஜரானபோது, ஐபிசி பரிவு 328ன் படி டாஸ்மாக் மூலமாக போதைப் பொருள் விற்கப்படுவது அல்லது விநியோகிப்பது குற்றமில்லையா? என நந்தின கேள்வி எழுப்பினார். இதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். இது போன்ற கேள்விகளை எழுப்பமாட்டோம் என எழுதிக்கொடுக்க நந்தினி மறுத்ததைத் தொடர்ந்து, அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    வரும் ஜூலை 5ம் தேதி நந்தினிக்கு திருமணம் நடக்க இருந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. நந்தினியை விடுவிக்க வேண்டும் என பலர் கோரிக்கை வைத்து வருகிறார்கள். டிவிட்டரில் #releasenandhi எனும் ஹேஷ்டேக் இந்தியளவில் டிரெண்டிங்காகியுள்ளது.

    இந்நிலையில் நந்தினி எழுப்பிய கேள்வி சரியானது தான் என்பதை உணர்த்து வகையில், 'மது உணவு பொருளா?' என நடிகை ரோகிணி தனது டிவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். அவருடைய இந்த கேள்விக்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    'ஸ்ஸ்ஸ் ஸ்ஸ்ஸ்ஸ் மெதுவா உள்ள தூக்கி போட்ற போறாங்க' என ஒருவர் ரோகிணியை எச்சரித்துள்ளார். மது உணவலல உயிர்கொல்லி என சிலர் பதில் அளித்துள்ளனர். நந்தினி விவகாரத்தில் முக்கிய நடிகர், நடிகைகள் வாய்த்திறக்காமல் மௌனம் சாதிக்கும் வேளையில், ரோகிணியின் துணிச்சலை பலரும் பாராட்டியுள்ளனர்.

    English summary
    In her twitter page actress Rohini raised a qustion that whether alchohol a food product.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X