Just In
- 2 hrs ago
எனக்கு இப்பவே அந்த மாதிரி ஃபீலிங்கா இருக்கே... ஈஸ்வரன் பட நடிகை லொள்ளு !
- 2 hrs ago
ரெட் சில்லி ஆண்ட்ரியா … இது செம காரம் மச்சி!
- 2 hrs ago
அருண் விஜயின் 31வது படத்தின் படப்பிடிப்பு நிறைவு... டப்பிங் பணி ஆரம்பம்!
- 3 hrs ago
பார்த்ததுமே குப்புன்னு வியர்க்கும்.. கேஜிஎப்-பை தூக்கி சாப்பிடறோம்.. தளபதி 65 லேட்டஸ்ட் அப்டேட்
Don't Miss!
- News
'இது சர்தார் படேலுக்கு நேர்ந்த அவமானம்' - நரேந்திர மோடி ஸ்டேடியத்தை பிரித்து மேயும் காங்கிரஸ்
- Automobiles
மாருதி, டாடா மோட்டார்ஸை போல் சிஎன்ஜி கார்களை விற்பனைக்கு கொண்டுவரும் ஃபோர்டு!! சென்னையில் சோதனை ஓட்டம்...
- Sports
போற போக்கை பார்த்தா 3வது போட்டியிலயே 400 விக்கெட் சாதனையை செஞ்சுடுவாரோ.. அஸ்வின் கெத்து!
- Finance
1030 புள்ளிகள் வரையில் சென்செக்ஸ் உயர்வு.. குமுதா ஹேப்பி அண்ணாச்சி..!
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்களுக்கு லீடரா இருக்க கொஞ்சம்கூட தகுதி இருக்காதாம்... உங்க ராசிக்கு அது இருக்கா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை.!! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
'மாஸ்டர்' படத்துக்குப் பிறகு நடிகர் விஜய்யை அந்த இயக்குனர்தான் மீண்டும் இயக்கப் போறாராமே?
சென்னை: நடிகர் விஜய்யின் அடுத்தப் படத்தை யார் இயக்கப் போகிறார் என்கிற தகவல் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'மாஸ்டர்' படத்தில், இப்போது நடித்து வருகிறார் விஜய். இதில் அவர் ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். சேவியர் ப்ரிட்டோவின் எக்ஸ் பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இதை அடுத்து விஜய் நடிக்கும் படத்தை மகிழ் திருமேனி இயக்குவதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், தளபதி 65 படம் பற்றி புதிய தகவல்கள் இணையத்தில் வைரலாகின.
என்ன சர்ப்ரைஸ்.. ஆரத்யாவுக்கு தம்பி பாப்பா வரபோறாங்களா? அபிஷேக் டிவிட்டால் கன்ஃபியூஸான நெட்டிசன்ஸ்!

சன் பிக்சர்ஸ்
இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாகவும் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வைரலாகின. அனிருத் இசை அமைக்க இருப்பதாகவும் டிவிட்டரில் ரசிகர்கள் தெரிவித்தனர். இதற்கு ஆதாரமாக, சினிமா மானேஜரான ஜெகதீஷ் அனுப்பிய வாட்ஸப் மெசேஜையும் பதிவிட்டிருந்தனர். இந்நிலையில், தான் அனுப்பியதாக சொல்லப்பட்ட வாட்ஸ் அப் மெசேஜை மறுத்திருந்தார் ஜெகதீஷ்.

ரூ.100 கோடி சம்பளம்
இந்நிலையில், தளபதி 65 படத்துக்காக, நடிகர் விஜய்-க்கு 100 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் அதைக் கொடுக்க தயாரிப்பு நிறுவனம் முன் வந்துள்ளதாகவும் கோலிவுட்டில் பரபரப்பு பேச்சு நிலவியது. இதனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சம்பள விஷயத்தில் விஜய் முந்தியுள்ளார் என்றும் கூறப்பட்டது. ஆனால், இது உறுதிப் படுத்தப்படவில்லை.

மீண்டும் அட்லீ
இந்நிலையில், நடிகர் விஜய்யின் அடுத்த படத்தை, அட்லீயே மீண்டும் இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. அட்லீ, விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் படங்களை இயக்கி இருக்கிறார். இந்த மூன்று படங்களுமே வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது என்பதால், அவரே மீண்டும் இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஷாரூக்கான் படம்
இதற்கிடையே அவர் பிரபல இந்தி ஹீரோ ஷாரூக்கான் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், இதுபற்றி ஷாரூக் கான் தரப்பில் இருந்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. அந்தப் படம் தள்ளிப்போனால் விஜய் படத்தை அட்லீ இயக்குவார் என்றும் கோலிவுட்டில் தகவல் உலவுகிறது.