பீஸ்ட் போட்டோஸ் லீக் ஆச்சா? இல்லையா?...தீயாய் பரவும் தகவலால் அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்
சென்னை : விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் போட்டோக்கள் ரிலீஸ் ஆகி விட்டதாக சோஷியல் மீடியாவில் வேகமாக தகவல் ஒன்று பரவி வருகிறது. ஆனால் இது உண்மையா, வெறும் வதந்தியா என தெரியாமல் விஜய் ரசிகர்கள் குழப்பம் கலந்த அதிர்ச்சியில் உள்ளனர்.
டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பூஜா ஹெக்டே, செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கும் பீஸ்ட் படத்தை ஏப்ரல் 14 ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

சாதனை படைத்த அரபிக்குத்து
ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வந்ததால் காதல் தின ஸ்பெஷலாக பீஸ்ட் படத்தின் ஃபஸ்ட் சிங்கிளாக அரபிக்குத்து பாடல் வெளியிடப்பட்டது. சிவகார்த்திகேயன் வரிகளில் அனிருத் இசையமைத்து, பாடிய இந்த பாடலுக்கு பிரபலங்கள் அனைவரும் ஆட்டம் போட்டுள்ளனர். அனைவரின் ஃபேவரைட் பாடலாக மாறி உள்ள அரபிக்குத்து, யூட்யூப்பிலும் வெளியிடப்பட்ட 12 நாட்களில் 100 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. உலக அளவில் அதிகமானவர்களால் பார்க்கப்பட்ட 200 பாடல்களின் பட்டியலிலும் அரபிக்குத்து இடம்பிடித்துள்ளது.

பீஸ்ட் டீசர் எப்போ
ஃபஸ்ட் சிங்கிளின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து பீஸ்ட் படத்தின் டீசரை வெளியிட் படக்குழு தயாராகி வருகிறது. டீசர் தயாரிக்கும் பணிகள் முடிந்து விட்டதாம். மார்ச் முதல் வாரத்தில் டீசர் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து டிரைலர், செகண்ட் சிங்கிள் போன்றவைகளும் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

என்னது போட்டோ லீக் ஆகிடுச்சா
இந்நிலையில் பீஸ்ட் படத்தின் போட்டோக்கள் லீக் ஆகி விட்டதாக சோஷியல் மீடியாவில் தகவல் பரவி வருகிறது. வெறும் தகவல் மட்டுமே கூறப்படுகிறதே தவிர அப்படி எந்த போட்டோவும் வெளியாகவில்லை. பீஸ்ட் டப்பிங்கின் போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் தான் தற்போது லீக் ஆகி உள்ளது. பீஸ்ட் படத்தின் டப்பிங் பணிகள் சமீபத்தில் தான் நிறைவடைந்துள்ளது. அதனால் ரசிகர்கள் பதற வேண்டாம் என சிலர் கூறி வருகின்றனர்.

லீக் ஆச்சா? இல்லையா?
அதே சமயம் இந்த போட்டோக்கள் ஜார்ஜியாவில் ஷுட்டிங் நடத்தப்பட்ட போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் என இன்னும் சிலர் கூறி வருகின்றனர். ஆனால் நிஜமாக பீஸ்ட் போட்டோக்கள் லீக் ஆனதா, இல்லையா என தெரியவில்லை. எப்படி இருந்தாலும் அந்த போட்டோக்களை பகிர வேண்டாம். அது ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் உழைப்பு என விஜய் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். ஏற்கனவே சென்னையில் மால் போன்று செட் அமைக்கப்பட்டு எடுக்கப்பட்ட பீஸ்ட் படத்தின் சண்டை காட்சிகளின் போட்டோக்கள், வீடியோக்கள் லீக் ஆகி பரபரப்பை கிளப்பியது.


Click it and Unblock the Notifications