பீஸ்ட் டிரைலர் அந்த படத்தின் காப்பியா... புதிதாக கொளுத்தி போடும் நெட்டிசன்கள்

சென்னை : விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் பிரபல ஹாலிவுட் படம் ஒன்றின் காப்பி என புதிய பிரச்சனையை கொளுத்தி போட்டுள்ளனர் நெட்டிசன்கள். இதனால் சோஷியல் மீடியாவே பரபரத்து போய் உள்ளது.

சமீப காலமாக பெரிய நடிகர் மற்றும் பெரிய பட்ஜெட் படங்களின் மீது கதை திருட்டு குற்றச்சாட்டு முன் வைக்கப்படுவதும், அந்த படத்தில் வரும் ஏதாவது ஒரு விஷயத்தை வைத்து பிரச்சனையை கிளப்புவது லேட்டஸ்ட் டிரெண்ட் ஆகி வருகிறது. சமீபத்தில் தமிழில் ரிலீசான வலிமை, எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட பல படங்களும் இதே பிரச்சனையை சந்தித்துள்ளன. இவை அந்த படங்களுக்கு விளம்பரமாகவும் அமைந்து விடுகிறது.

வலிமைக்கு வந்த அதே பிரச்சனை

வலிமைக்கு வந்த அதே பிரச்சனை

வலிமை படத்தில் வரும் சில சீன்களும் மெட்ரோ படத்தில் வரும் சீன்களும் ஒரே மாதிரியாக இருப்பதாக நெட்டிசன்கள் போற போக்கில் கொளுத்தி போட்டு விட்டு போனார்கள். இது பெரிய பிரச்சவையாகவே ஓடி, கடைசியில் கோர்ட் வரை போய் தான் முடிவுக்கு வந்தது. அந்த வரிசையில் தற்போது பீஸ்ட் படத்தின் டிரைலர் ரிலீசிற்கு முன்பே அப்படி ஒரு பிரச்சனையை கிளப்பி விட்டுள்ளனர்.

பீஸ்ட் டிரைலர் ரிலீஸ் அப்டேட்

பீஸ்ட் டிரைலர் ரிலீஸ் அப்டேட்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ம் தேதி ரிலீசாக உள்ளது. ரசிகர்கள் விடாமல் அப்டேட் கேட்ட பிறகு ஒரு வழியாக நேற்று தான் ஏப்ரல் 2 ம் தேதி மாலை 6 மணிக்கு பீஸ்ட் டிரைலர் வெளியிடப்பட உள்ளதாக சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. இதற்காக ஒரு நிமிட வீடியோ ஒன்றை வெளியிட்டனர். இதில் விஜய் ஆக்சிஜன் மாஸ்க் அணிந்து கொண்டு ஜெட்டை இயக்குவது போல் காட்டப்பட்டுள்ளது.

பீஸ்ட் டிரைலர் காப்பியா

பீஸ்ட் டிரைலர் காப்பியா

இந்த ஸ்டில்லும், பிரபல ஹாவுட் படமான Top Gun :Maverick படத்தின் ஸ்டில்லும் ஒரே மாதிரி இருக்கே. அந்த படத்தில் இருந்து தான் பீஸ்ட் டிரைலரை காப்பி அடித்துள்ளார்களா என நெட்டிசன்கள் சந்தேகத்தை கிளப்பி விட்டுள்ளனர். 1986 ம் ஆண்டு வெளிவந்த Top Gun படத்தின் இரண்டாம் பாகமாக எடுக்கப்பட்டுள்ள Top Gun: Maverick படத்தில் ஹாலிவுட்டின் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவரான Tom Cruise நடித்துள்ளார். இந்த படம் மே 27 ம் தேதி தான் ரிலீசாகிறது.

நல்ல கிளப்புறீங்கயா பீதிய

நல்ல கிளப்புறீங்கயா பீதிய

பீஸ்ட் படமும் ரிலீசாகவில்லை, Top Gun: Maverick படமும் இன்னும் ரிலீசாகவில்லை. அதற்குள் ஒரு போஸ்டரை வைத்து பீஸ்ட் படத்தின் டிரைலரையே காப்பியா என கேட்டு சந்தேகத்தை கிளப்பி விட்டுள்ளனர். இன்னும் படம் ரிலீசானால் என்னவெல்லாம் பிரச்சனையை கிளப்ப போகிறார்களோ என பலர் நொந்து கொண்டுள்ளனர். ஏற்கனவே அனைத்து விழாக்களும் நடக்கும் போது பீஸ்ட் படத்திற்கு மட்டும் ஏன் ஆடியோ வெளியீட்டு விழா நடத்தவில்லை, டிரைலர் வெளியீட்டு விழா, ப்ரொமோஷன் விழா என எதுவும் நடத்தாமல் தள்ளிப் போடுகிறார்கள். அப்டேட் வெளியிடவே தாமதப்படுத்துகிறார்கள். விஜய் மீது சன் பிக்சர்சிற்கு என்ன கோபம் என பலர் கேட்டு வருகின்றனர். இதில் காப்பி பிரச்சனையை வேறு கிளப்பி விட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X