twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஜய் 'அந்த' அமைப்பை வீட்டுக்கு அனுப்பச் சொன்னதற்கு பழி வாங்குகிறதா விலங்குகள் நல வாரியம்?

    By Siva
    |

    சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக விஜய் குரல் கொடுத்ததை மனதில் வைத்துக் கொண்டு தான் விலங்குகள் நல வாரியம் மெர்சல் படத்திற்கு இடையூறு அளிக்கிறதா என்று ரசிகர்கள் கேட்டுள்ளனர்.

    விஜய் நடித்துள்ள மெர்சல் படத்திற்கு விலங்குகள் நல வாரியம் சான்று அளிக்காமல் இடையூறு அளித்துள்ளது. படத்தில் எந்த விலங்குகளையும் துன்புறுத்தவில்லை என்று படக்குழு தெரிவித்துள்ளது.

    விலங்குகள் நல வாரியத்தில் உள்ளவர்கள் விலங்குகளை பாதுகாக்கிறோம் என்று கூறி ஜல்லிக்கட்டை எதிர்த்த அமைப்பை ஆதரிப்பவர்கள் என்று கூறப்படுகிறது.

    புரட்சி

    புரட்சி

    ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கக் கோரியும், அதற்கு தடை விதிக்கக் கோரி வழக்கு தொடர்ந்த அமைப்பை நாட்டை விட்டே வெளியேறுமாறு கூறியும் தமிழக இளைஞர்கள் புரட்சியில் ஈடுபட்டனர்.

    ஆதரவு

    ஆதரவு

    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தளபதி விஜய் ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் அவர் அந்த விலங்குகள் நல அமைப்பை வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றார்.

    இளைஞர்கள்

    இளைஞர்கள்

    ட்விட்டரில் வெளியிட்ட வீடியோவில் விஜய் கூறியிருந்ததாவது, உலகத்தில் சட்டத்தை உருவாக்கியது மக்களுடைய கலாச்சாரத்தையும், உரிமையையும் பாதுகாக்கத் தான், பறிப்பதற்கு இல்லை. தமிழனுடைய அடையாளம் ஜல்லிக்கட்டு. எதையும் எதிர்பார்க்காமல், யாருடைய தூண்டுதலும் இன்றி, கட்சி பேதமின்றி தமிழன் என்கிற ஒரே உணர்வோடு இந்த போராட்டத்தில் குதித்துள்ள அத்தனை இளைஞர்களுக்கும் நான் தலை வணங்குகிறேன். இது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களை வெளியே அனுப்பீட்டா நான் சந்தோஷப்படுவேன். இவ்வளவுக்கும் காரணமாக அமைப்பை வீட்டிற்கு அனுப்பீட்டா தமிழ்நாடு சந்தோஷப்படும் என்றார்.

    பிரச்சனை

    பிரச்சனை

    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக விஜய் குரல் கொடுத்ததை மனதில் வைத்துக் கொண்டு அவரின் மெர்சல் படத்திற்கு இடையூறு செய்கிறது விலங்குகள் நல வாரியம் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

    English summary
    Vijay fans doubt that AWBI is giving trouble to Mersal as Vijay earlier released a video supporting Jallikattu.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X