அண்ணாத்த படத்தில் குஷ்பு, மீனா இந்த கேரக்டரிலா... செம தகவலா இருக்கே

சென்னை : அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருப்பது ரஜினியின் அண்ணாத்த படம். தீபாவளிக்கு ரிலீசாக நவம்பர் 4 ம் தேதி இந்த படம் ரிலீசாக உள்ளது. இதற்கான ப்ரோமோஷன் வேலைகளை படக்குழு ஏற்கனவே துவங்கி விட்டது.

அண்ணாத்த படத்தில் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் என நான்கு டாப் ஹீரோயின்கள் நடித்துள்ளனர். இவர்களில் யார் ரஜினிக்கு ஜோடியாக இருக்கும் என்ற கேள்வி படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டது முதலே கேட்கப்பட்டு வருகிறது. படத்தின் கதை என்ன என்பதும் யூகிக்க முடியாததாகவே இருந்தது.

ரஜினிக்கு ஜோடி யார்

ரஜினிக்கு ஜோடி யார்

குஷ்பு அல்லது மீனா ரஜினிக்கு ஜோடியாக இருக்கலாம். நயன்தாரா இருப்பதால் குஷ்பு அல்லது மீனா வரும் சீன்கள் பிளாஷ்பேக் சீன்களாக இருக்கலாம் என கூறப்பட்டது. குஷ்புவும், மீனாவும் ரஜினிக்கு ஜோடியாக பல படங்களில் நடத்துள்ளனர். நயன்தாராவும் சந்திரமுகி, தர்பார் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதனால் யார் ஹீரோயின் என்ற குழப்பம் இருந்து வந்தது.

நயன்தாரா தான் ஹீரோயின்

நயன்தாரா தான் ஹீரோயின்

கீர்த்தி சுரேஷ், ரஜினிக்கு தங்கை ரோலில் நடித்துள்ளதாக ஏற்கனவே கூறப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் வெளியிடப்பட்ட அண்ணாத்த செகண்ட் சிங்கிள் பாடல் நயன்தாரா தான் ஹீரோயின் என்பதை உறுதிப்படுத்தி விட்டது. ரஜினியும், நயன்தாராவும் வரும் காதல், ரொமான்ஸ் காட்சிகள் அனைவரையும் கவர்ந்து விட்டது. அப்படியானால் குஷ்பு, மீனா என்ன ரோலில் நடித்துள்ளனர் என்பது சஸ்பென்சாகவே இருந்து வந்தது.

என்னது இந்த ரோலிலா

என்னது இந்த ரோலிலா

லேட்டஸ்ட் தகவலின் படி, பல சூப்பர் ஹிட் படங்களில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த குஷ்புவும், மீனாவும் இந்த படத்தில் ரஜினியின் சகோதரிகள் கேரக்டரில் நடித்துள்ளார்களாம். கீர்த்தி சுரேஷ் உடன் ரஜினியின் தங்கை ரோலில் தான் குஷ்புவும், மீனாவும் நடித்துள்ளார்களாம். இந்த தகவல் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இவ்வளவு இருக்கா படத்தில்

இவ்வளவு இருக்கா படத்தில்

அண்ணாத்த படம் கிராமத்து சப்ஜக்ட் படம் மட்டும் இல்லையாம். பாசமுள்ள அண்ணன் - தங்கைகள் கதையும் தானாம். ரஜினியை வித்தியாசமாக காட்ட நினைத்துள்ள டைரக்டர் சிறுத்தை சிவா, தீபாவளிக்கு செம ட்ரீட் கொடுக்க போகிறார் என்பது மட்டும் உறுதி. காமெடி, ரொமான்ஸ், ஆக்ஷன், சென்டிமென்ட் அனைத்தும் சரியாக கலந்த கலவையாக அண்ணாத்த இருக்கும் என்றும், இது ரசிகர்கள் மனதை நிச்சயம் கவரும் என்றும் படக்குழு எதிர்பார்க்கிறது.

ஆயுத பூஜையில் டீசர்

ஆயுத பூஜையில் டீசர்


அண்ணாத்த படத்தை மிக பிரம்மாண்டமாக தியேட்டரில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நிறைவடையும் நிலையில் உள்ளதால், ஆயுத பூஜைக்கு படத்தின் டீசரையும், அதைத் தொடர்ந்து படத்தின் டிரைலரையும் ரிலீஸ் செய்து, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கவும் படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X