For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  என்னப்பா சொல்றீங்க...பொன்னியின் செல்வன் செட்டிற்கு ஸ்பைடர் மேன் வந்தாரா ?

  |

  ஐதராபாத் : டைரக்டர் மணிரத்னம் இயக்கும் வரலாற்று படம் பொன்னியின் செல்வன். எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அதே பெயரில் படமாக்கி வருகிறார் மணிரத்னம்.

  லைகா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து, சுமார் ரூ.500 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்ட படமாக தயாராகி வருகிறது பொன்னியின் செல்வன். இரண்டு பாகங்களாக தயாரிக்கப்பட்டு வரும் இந்த படத்தின் முதல் பாகம் 2022 ம் ஆண்டின் துவக்கத்தில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

   2021ம் ஆண்டு பாதி கிணத்தை தாண்டிய தமிழ் சினிமா.. ஆனால் இத்தனை ஃபிளாப் படங்கள் கொடுத்தா எப்படி? 2021ம் ஆண்டு பாதி கிணத்தை தாண்டிய தமிழ் சினிமா.. ஆனால் இத்தனை ஃபிளாப் படங்கள் கொடுத்தா எப்படி?

  விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம், பிரபு, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி, நிழல்கள் ரவி, த்ரிஷா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், லால், பார்த்திபன் உள்ளிட்ட ஏராளமான நடிகர், நடிகைகள் நடிக்கும் இந்த படத்திற்கு மணிரத்னத்தின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

  இரட்டை வேடத்தில் ஐஸ்வர்யா

  இரட்டை வேடத்தில் ஐஸ்வர்யா

  பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய், இரட்டை வேடத்தில் நடிக்கிறாராம். இதில் ஒன்று சரத்குமாரின் மனைவியாக, நந்தினி என்ற ரோலில் நடிக்கிறார். இதனை இந்த படத்தில் இளம் வயது பாண்டிய மன்னனாக நடிக்கும் ராகவன் முருகன் உறுதி செய்துள்ளார். நந்தினி ரோல், வில்லி கேரக்டர் என கூறப்படுகிறது.

  சுறுசுறுப்பாக பொன்னியின் செல்வன் ஷுட்டிங்

  சுறுசுறுப்பாக பொன்னியின் செல்வன் ஷுட்டிங்

  சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் ஷுட்டிங் புதுச்சேரியில் துவங்கப்பட்டது. கொரோனா காரணமாக ஷுட்டிங் தாமதமானதால், முன்பே திட்டமிட்ட காலத்திற்குள் படத்தை முடிக்க வேண்டும் என்பதற்காக படக்குழுவினர் பரம்பரம் போல் சுழன்று பணியாற்றி வருகின்றனர்.

  ஐதராபாத் சென்ற படக்குழு

  ஐதராபாத் சென்ற படக்குழு

  புதுச்சேரியில் ஷுட்டிங்கை முடித்த பொன்னியின் செல்வன் படக்குழு ஐதராபாத் சென்றுள்ளது. இறுதிக்கட்ட ஷுட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் சமயத்தில், மணிரத்னத்தின் மனைவியும் நடிகையுமான சுகாசினி, பொன்னியின் செல்வன் ஷுட்டிங் நடக்கும் ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

  என்னது ஸ்பைடர்மேன் வந்தாரா

  என்னது ஸ்பைடர்மேன் வந்தாரா

  அதில் செட்டில் இருக்கும் இரண்டு பேர் தலை முதல் பாதம் வரை முழுவதும் நீல நிற துணியால் கவர் செய்திருப்பது போல் ஆடை அணிந்திருந்தனர். திடீரென பார்த்தவர்களுக்கு ஸ்பைடர் மேன் தான் பொன்னியின் செல்வன் ஷுட்டிங் பார்க்க வந்து விட்டாரா என நினைக்க தோன்றியது. சோஷியல் மீடியாவில் பரவிய இந்த ஃபோட்டோக்கள் பலரையும் ஆச்சரியப்பட வைத்தது.

  அட இவங்க தான் இப்படி வந்தாங்களா

  அட இவங்க தான் இப்படி வந்தாங்களா

  இது பற்றி சுகாசினி பதிவிட்டுள்ள கேப்ஷனில், அவர்கள் ஸ்பைடர் மென்னோ அல்லது சூப்பர் மென்னோ அல்ல. கேமிரா டெக்னீசியன்கள் என விளக்கம் அளித்துள்ளனர். டெக்னிக்கல் காரணங்களுக்காக தான் அவர்கள் இப்படி உடை அணிந்து வந்தனராம். போர் காட்சி ஒன்றை படமாக்கும் போது இந்த ஃபோட்டோ எடுக்கப்பட்டுள்ளதாக பலரும் கமெண்ட் செய்துள்ளனர். சுகாசினி பகிர்ந்துள்ள இந்த வேடிக்கையான ஃபோட்டோ, பலரையும் கவர்ந்துள்ளது.

  ஐஸ்வர்யா ஃபோட்டோவால் விவாதம்

  ஐஸ்வர்யா ஃபோட்டோவால் விவாதம்

  2 நாட்களுக்கு முன்பு தான் வரலட்சுமி சரத்குமார் வெளியிட்ட ஐஸ்வர்யா ராயின் ஃபோட்டோக்களை வைத்து அவர் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறாரா, இல்லையா என நெட்டிசன்கள் ஒரு பட்டிமன்றமே நடத்தி முடித்தனர். இது ஒரு முடிவுக்கு வருவதற்குள், புதிய பரபரப்பாக ஸ்பைடர்மேன், பொன்னியின் செல்வன் ஷுட்டிங் ஸ்பாட்டிற்கு வந்தார் என்பது போன்று கிளப்பி விட்டுள்ளனர்.

  இன்னும் படம் ரிலீசாவதற்குள் எத்தனை ஃபோட்டோக்களை வெளியிட்டு, என்னென்ன பிரச்சனைகளை கிளப்ப போகிறார்களோ தெரியவில்லை.

  English summary
  Suhasini maniratnam has shared some funny photos of ponniyin selvan shooting spot. The two men in the set were dressed as if they were covered with a blue cloth all over from head to toe. Suddenly onlookers seemed to wonder if Spider-Man had just come to see Ponnyin Selvan's rich shooting. These photos spread on social media and surprised many.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X