»   »  'கபாலி 2' வருகிறதோ?: அப்போ தாணு ஏன் அப்படி செய்தார்?

'கபாலி 2' வருகிறதோ?: அப்போ தாணு ஏன் அப்படி செய்தார்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு கபாலி 2 என்ற தலைப்பை பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பா. ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படம் கபாலி. இந்நிலையில் ரஞ்சித் மற்றும் ரஜினி மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளனர். அந்த படத்தை தனுஷ் தயாரிக்கிறார்.

Is 'Kabali 2' on cards?

தனுஷ் ரஜினியை வைத்து தயாரிக்கும் படம் கபாலி படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என்ற பேச்சு கிளம்பியது. இல்லை இல்லை நான் கபாலி 2 எடுக்கவிலல்லை இது புதுக்கதை என்று ரஞ்சித் கூறினார்.

இந்நிலையில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு கபாலி 2 என்ற தலைப்பை பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கபாலி படத்தை தயாரித்த தாணுவின் இந்த செயலால் கபாலி 2 நிச்சயம் வரும் என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு வந்துள்ளது.

இதற்கிடையே ரஞ்சித் ரஜினியை மீண்டும் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடக்க உள்ளதாம். மும்பை என்ற பெயரை கேட்டதுமே ரஜினி ரசிகர்களுக்கு பாட்ஷா படம் தான் நினைவுக்கு வருகிறது.

English summary
According to reports, producer Kalaipuli S Thanu has registered Kabali 2 title.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil