»   »  ஜீவா - காஜல் நடித்த கவலை வேண்டாம் ரிலீஸ்... தேறுமா?

ஜீவா - காஜல் நடித்த கவலை வேண்டாம் ரிலீஸ்... தேறுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

கவலை வேண்டாம்... தலைப்பு அப்படி இருந்தாலும் படம் பார்த்தவர்கள் கூறும் கமெண்டுகள் ரொம்பவே கவலைக்குரியதாக இருக்கிறது ஜீவாவுக்கு.

ஜீவாவுக்கு அடுத்தடுத்து படங்கள் சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை. திருநாள் பரவாயில்லை எனும் அளவுக்கு அமைந்தது.


Is Kavalai Vendam gives happy to Jiiva?

நேற்று கவலை வேண்டாம் படம் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் ஜீவாவுக்கு ஜோடி காஜல் அகர்வால். பாபி சிம்ஹா, சுனைனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். எல்ரெட் குமார் தயாரித்துள்ள இந்தப் படத்தை யாமிருக்க பயமே படம் இயக்கிய ஜிகே இயக்கியுள்ளார்.


அடல்ட் காமெடி வகைப் படம் என்ற முத்திரையோடு வந்துள்ள கவலை வேண்டாம், ஓரளவு நல்ல தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது.


வழக்கமாக வெள்ளியன்று வெளியாகும் படம், ஒரு நாள் முன்பாகவே வெளியாகிவிட்டது. படம் பார்த்தவர்களோ சமூக வலைத் தளங்களில் படத்தை செம்மையாக ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதுதான் படத்தின் கவலைக்குரிய அம்சமாகிவிட்டது!

English summary
Jiiva - Kajal Agarwal starring Kavalai Vendam has released on Nov 24th that earned mixed reviews in social media.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil