என்னது...லெஜண்ட் அண்ணாச்சி சரவணன் பட ஃபஸ்ட்லுக், மோஷன் போஸ்டர் லீக் ஆக்கிடுச்சா ?

சென்னை : லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி ஹீரோவாக அறிமுகமாகும் படத்தின் ஃபஸ்ட்லுக் மற்றும் மோஷன் போஸ்டர் இணையத்தில் லீக் உள்ளது அனைவரையும் அதிர வைத்துள்ளது. இந்த வீடியோ தற்போது வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி அருள், ஆரம்பத்தில் முன்னணி ஹீரோ, ஹீரோயின்களுடன் இணைந்து விளம்பர படங்களை தயாரித்து வந்தார். பிறகு தானே டாப் ஹீரோயின்களுடன் இணைந்து தானே விளம்பர படங்களில் நடித்து வந்தார். இந்த விளம்பர படங்களின் மூலம் மக்களிடம் பிரபலமான இவர், தானே ஹீரோவாக நடிக்க முடிவு செய்து, புதிய படம் ஒன்றை தயாரித்து வருகிறார்.

ஹீரோ கம் தயாரிப்பாளர்

ஹீரோ கம் தயாரிப்பாளர்

இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும், தயாரிப்பாளராகவும் லெஜண்ட் சரவணன் நேரடியாக அறிமுகமாகிறார். ஜேடி மற்றும் ஜெர்ரி இந்த படத்தை இயக்கி உள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த படத்தில் கீதிகா திவாரி, ஊர்வசி ரவுதேலா, பிரபு, விஜயக்குமார், நாசர், தம்பி ராமைய்யா, மயில்சாமி, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

விவேக்கின் கடைசி படம்

விவேக்கின் கடைசி படம்

நடிகர் விவேக்கின் கடைசி படம் இதுவாகும் . இந்த படத்தில் பாதி நடித்துக் கொண்டிருந்த போதே விவேக் திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். இருந்தாலும் விவேக் நடித்த காட்சிகளை வீணடிக்க விரும்பாமல், மீதி அவர் நடிக்க வேண்டிய காட்சிகளில் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, விவேக்கை படம் முழுவதும் வர வைத்துள்ளனர். ஹீரோவுடன் கடைசி வரை பயணிக்கும் கேரக்டரில் தான் விவேக் நடித்து வந்தார்.

நாளை மோஷன் போஸ்டர்

நாளை மோஷன் போஸ்டர்

இது சையின்ஸ் ஃபிக்சிங் படம் என்று சொல்லப்பட்டது. அதனால் என்ன டைட்டில், என்ன கதை என தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தில் ஃபஸ்ட்லுக் மற்றும் மோஷன் போஸ்டர் மார்ச் 4 ம் தேதி காலை 9.55 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த போஸ்டரில் கூட மடக்கிய குடையை தோளில் வைத்தபடி, அண்ணாச்சி நிற்பதை போன்ற காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

என்னது இப்பவே லீக் ஆகிடுச்சா

என்னது இப்பவே லீக் ஆகிடுச்சா

இந்நிலையில் தற்போது ட்விட்டரில் தி லெஜண்ட் என பெயருடன் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி, காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இதனால் நாளை காலை வெளியிடப்படும் என சொல்லப்பட்ட மோஷன் போஸ்டர் எப்படி இப்போதே இணையத்தில் லீக் ஆனது என அனைவரும் குழம்பிப் போய் உள்ளனர். இது தான் ஒரிஜினல் மோஷன் போஸ்டரா அல்லது வேறு யாராவது போலியாக தயாரித்து வெளியிட்ட மோஷன் போஸ்டரா என்றும் சிலர் சந்தேகம் கிளப்பி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X