இவர் தான் தளபதி 66 ல் விஜய்க்கு மகளா...ஆச்சரியத்தில் வாயை பிளக்கும் ரசிகர்கள்

சென்னை : தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் மகள் சித்தாரா கட்டமனேனி, தனது அப்பா நடிக்கும் மெகா பட்ஜெட் படமான சர்காரு வாரி பாட்ட படத்தின் மூலம் சினிமாவிற்குள் என்ட்ரி கொடுக்க போகிறார். டைரக்டர் பரசுராம் இயக்கும் இந்த படத்தில் வரும் பென்னி என்ற பாட்டில் தான் சித்தாரா நடிக்க உள்ளார்.

இந்த பாடல் வீடியோ சமீபத்தில் இணையத்தில் வெளியிடப்பட்டு, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மகேஷ்பாபுவிற்கு இவ்வளவு பெரிய மகளா என்றும், எவ்வளவு க்யூட்டா அழகா இருக்கார் சித்தாரா என்றும் ரசிகர்கள் புகழ்ந்து வருகிறார்கள்.

அப்பாவோடு ஆடிய மகள்

அப்பாவோடு ஆடிய மகள்

மகேஷ்பாபுவின் இளைய மகள் தான் இந்த சித்தாரா. இவருக்கு 10 வயதாகிறது. இவர் பென்னி பாடலில் மகேஷ்பாபுவுடன் சேர்ந்து நடனமாடி உள்ளார். அப்பாவுடன் சேர்ந்து நடனமாடிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள சித்தாரா அதோடு, இந்த அற்புதமான டீமுடன் இணைவது சூப்பர் சந்தோஷமாக உள்ளது. சர்காரு வாரி பாட்ட படத்தின் பென்னி பாடல். அப்பா, நான் உங்களை பெருமைப்படுத்தி விட்டேன் என நம்புகிறேன் என கேப்ஷன் பதிவிட்டுள்ளார்.

மை ராக் ஸ்டார்

மை ராக் ஸ்டார்

இதற்கு பதிலளித்துள்ள மகேஷ் பாபு, பென்னி...எனக்கு மிகவும் ஸ்பெஷலான ஒன்று. என்னை பெருமைப்படாமல் இருக்க முடியாது என்னுடைய ராக் ஸ்டார் சித்தாரா என குறிப்பிட்டுள்ளார். தமன் இசையில் மகேஷ்பாபு, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள சர்காரு வாரி பாட்ட படம் மே 12 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் விஜய்க்கு மகளா

இவர் விஜய்க்கு மகளா

இந்த க்யூட்டான பெண் சித்தாரா தான் விஜய் அடுத்து நடிக்க உள்ள தளபதி 66 படத்தில், விஜய்க்கு மகளாக நடிக்க போகிறார் என சொல்லப்படுகிறது. வம்சி பைடபள்ளி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தில் சித்தாரா நடிக்கிறாரா இல்லையா என்பது பற்றி இதுவரை உறுதியான தகவல் வெளியாகவில்லை. இருந்தாலும் விஜய் ரசிகர்கள் இப்போதே சித்தாராவின் முதல் படமான பென்னி பாடல் க்ளிம்ஸ்களை இணையத்தில் அதிகம் பகிர்ந்து வருகிறார்கள்.

என்னமா ஆடுறாருப்பா

என்னமா ஆடுறாருப்பா

தளபதி 66 படத்தில் மகேஷ் பாபுவின் மகள் சித்தாரா நடிக்கிறார் என்ற தகவல் பரவ துவங்கியதுமே, யார் அந்த சித்தாரா என கூகுளில் பலரும் தேட துவங்கி விட்டனர். தற்போது அவர் அசத்தலாக நடனம் ஆடிய வீடியோவே வெளியாகி உள்ளதால், அவரின் டான்ஸ் திறமையை பார்த்து பலரும் அசந்து போய் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X