நீங்க தான் வைல்ட்கார்ட் என்ட்ரியா... நமிதா மாரிமுத்து என்ன சொல்கிறார் ?
சென்னை : பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. அக்டோபர் 3 ம் தேதி துவங்கிய இந்நிகழ்ச்சி தற்போது 37 வது நாளை எட்டி உள்ளது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த 18 பேர் போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.
Recommended Video
இவர்களில் இதுவரை 5 பேர் வெளியேறி உள்ளனர். முதல் வார இறுதியிலேயே நமிதா மாரிமுத்து, சில தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியேறியதாக பிக்பாஸ் அறிவித்தார். அவர் வெளியேறிய பிறகு முதல் வார இறுதி எபிசோட்டில் வந்த கமல், நமிதாவின் கதை தனது நெஞ்சை தொட்டு விட்டதாக கூறினார்.

மனதை கவர்ந்த நமிதா
முதல் டாஸ்க்கான ஒரு கதை சொல்லட்டுமா டாஸ்க்கில் வாழ்க்கையில் தான் பட்ட கஷ்டங்கள், சோதனைகளை சொல்லி கதறி அழுதார் நமிதா மாரிமுத்து. இது ஹவுஸ்மேட்களை மட்டுமல்ல பார்த்த அனைவரின் மனதையும் உருக்கியது. அனைவரின் மனதையும் கவர்ந்தார் நமிதா. அவர் மீண்டும் வர வேண்டும் என ரசிகர்கள் பலர் விருப்பம் தெரிவித்தனர்.

ஃபோட்டோ பகிர்ந்த நமிதா
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சில நாட்களில், பிக்பாஸ் வீட்டிற்குள் தான் சென்ற போது எடுத்த ஃபோட்டோக்களை நமிதா சோஷியல் மீடியாவில் பகிர்ந்தார். அதோடு, அனைவரின் அன்பும், ஆதரவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இன்னும் பல அற்புதங்கள் நடந்து உங்கள் மனங்களை கவருவேன் என்றார். பல சமூக சேவை ஆற்றிய ஃபோட்டோக்கள், வீடியோக்களையும் நமிதா பகிர்ந்தார்.

வைல்ட்கார்ட் என்ட்ரி யார்
இந்நிலையில் முதல் முறையாக Ask me anything மூலம் ரசிகர்களிடம் பேசிய நமிதாவிடம் ரசிகர் ஒருவர், வைல்ட்கார்ட் என்ட்ரி மூலம் நீங்கள் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வீர்களா என கேட்டார். அதற்கு பதிலளித்த நமிதா, ஆமாம். இல்லை. இருக்கலாம். பார்க்கலாம் என அனைத்தும் கலந்து பதிலளித்தார். இதனால் ரசிகர்கள் குழப்பமடைந்தனர்.

யார் டைட்டில் வெல்வார்
இருந்தாலும் விடாமல், இந்த சீசனில் யார் டைட்டில் வெல்வார் என நீங்கள் நினைக்கிறீர்கள் என ரசிகர் ஒருவர் கேட்டார். அதற்கு பதிலளித்த நமிதா, சிபி சந்திரன் அல்லது இசைவாணி வெற்றி பெற வாய்ப்புள்ளது என்றார்.

தாமரையுடன் என்ன பிரச்சனை
தாமரையுடன் ஏற்பட்ட பிரச்சனையால் தான் நீங்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினீர்களா என கேட்டதற்கு, அவருடன் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவர் நிஜத்தில் எப்படிப்பட்ட கேரக்டர் என எனக்கு தெரியவில்லை. ஆனால் இந்த கேமில் அவர் ஸ்டிராங் கிடையாது என்றார் நமிதா மாரிமுத்து.

வைல்ட்கார்ட் என்ட்ரி யார்
நிகழ்ச்சியின் 15 அல்லது 17 வது நாளில் வைல்ட்கார்ட் என்ட்ரி நடைபெறும் என தகவல் கூறப்பட்டது. ஆனால் ஒரு மாதத்தை கடந்தும் இதுவரை வைல்ட்கார்ட் என்ட்ரி நடைபெறவில்லை. அதே சமயம் வைல்ட்கார்ட் என்ட்ரியாக நமிதா மாரிமுத்து அல்லது ஷாலு ஷம்மு பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளதாக ஏற்கனவே கூறப்பட்டு வந்தது.


Click it and Unblock the Notifications











