பீஸ்ட் பார்ட் 2 க்கு பிளான் பண்ணுறாரா நெல்சன்...விஜய் ஓகே சொல்வாரா?

சென்னை : 2022 ம் ஆண்டில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று விஜய் நடித்த பீஸ்ட். இந்த படம் ஏப்ரல் 13 ம் தேதி ரிலீசானது. விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்பார்த்த இந்த படம், கடைசியில் ஏமாற்றத்தையே கொடுத்தது. கலவையான விமர்சனங்களை பெற்றது. விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி பொதுவான ஆடியன்சும் பீஸ்ட் படத்தை பார்த்து விட்டு அப்செட் ஆகி விட்டனர். பீஸ்ட் டிரைலர் ரிலீசான போதே இது பல படங்களின் காப்பி என்ற விமர்சனம் எழுந்தது.

நெல்சன் எழுதவில்லையா?

நெல்சன் எழுதவில்லையா?

பீஸ்ட் படத்தை பார்த்தவர்கள் முதல் அரை மணி நேரத்திலேயே விஜய் ஏன் இவ்வளவு மோசமாக நடித்துள்ளார் என கேட்க துவங்கி விட்டனர். பீஸ்ட் படத்திற்கு கதை, திரைக்கதையை நெல்சன் எழுதாதது தான் படத்தின் தோல்விக்கு காரணம், படத்தில் விஜய்யின் தலையீடு அதிகம் இருந்ததால் தான் படம் தோல்வி அடைந்தது என பீஸ்ட் படத்தின் தோல்விக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டு வருகிறது.

பீஸ்ட் சாதனையா? ஃபிளாப்பா?

பீஸ்ட் சாதனையா? ஃபிளாப்பா?

வீக்கான திரைக்கதை என விஜய் ரசிகர்களே சொன்னாலும், மற்றொரு புறம் விஜய்யின் நடிப்பை அவர்கள் கொண்டாடி வருகின்றனர். பீஸ்ட் வசூல் சாதனை படைத்துள்ளதாகவும், வலிமை, அண்ணாத்த படங்களின் வசூல் சாதனையை இரண்டே நாட்களில் முறியடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் பீஸ்ட் படம் வெற்றியா அல்லது ஃபிளாப்பா என தெரியாமல் பலர் குழம்பிப் போய் உள்ளனர்.

இன்னும் ப்ரொமோஷன் இருக்கா

இன்னும் ப்ரொமோஷன் இருக்கா

பெரிய அளவில் ரசிகர்களை ஈர்க்க பீஸ்ட் படத்திற்காக பெரிய அளவில் ப்ரொமோஷனை தொடர சன் பிக்சர்ஸ் முடிவு செய்துள்ளது. இதற்காக 10 ஆண்டுகள் கழித்து விஜய் சன் டிவியில் பேட்டி அளித்தார். விஜய் உள்ளிட்ட பீஸ்ட் படக்குழுவினர் பங்கேற்ற பேட்டி மொத்தம் 4 பாகங்களாக எடுக்கப்பட்டது. அதில் விஜய்யுடன் நெல்சன் நடத்திய நேருக்கு நேர் நிகழ்ச்சி மட்டும் தான் சமீபத்தில் சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. மீதமுள்ள 3 பாகங்கள், படக்குழுவினர் பங்கேற்ற பேட்டி வரும் வாரங்களில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

பீஸ்ட் பார்ட் 2 எடுப்பீங்களா

பீஸ்ட் பார்ட் 2 எடுப்பீங்களா

இதில் நெல்சன் திலீப்குமார் அளித்த பேட்டியில், ஒருவேளை சூழல்நிலை சரியாக அமைந்து, சான்ஸ் கிடைத்தால், பீஸ்ட் பார்ட் 2 எடுப்பீர்களா என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த நெல்சன், நிச்சயமாக. வீரராகவன் ரோலில் நடிக்க விஜய் ஒப்புக் கொண்டால், கண்டிப்பாக பீஸ்ட் 2 எடுப்பேன் என கூறி உள்ளார். தற்போதைய சூழலில் இதற்கு விஜய் ஓகே சொல்வாரா என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

நெல்சனுக்கு யார் மேல கோபம்

நெல்சனுக்கு யார் மேல கோபம்

இதை கேட்டு ரசிகர்கள் பலர் கடுப்பாகி, பீஸ்ட் முதல் பார்ட்டே தாங்க முடியல. இதுல செகண்ட் பார்ட் வேறயா. விஜய்யை காலி பண்ணாமல் விட மாட்டீர்கள் போல. முதல் பார்ட்டை நீங்க ஏன் எடுத்தீங்கன்னு நாங்க யோசிச்சுகிட்டு இருக்கோம் ப்ரோ. உங்களுக்கு விஜய் மேல கோவமா இல்ல ஆடியன்ஸ் மேல கோவமா. ஏன் ஜி இப்படி பழிவாங்கிடீங்கன்னு கண்டபடி கலாய்த்து வருகின்றனர்.

விஜய் ஓகே சொல்வாரா

விஜய் ஓகே சொல்வாரா

ஆனால் பீஸ்ட் படத்தை முடித்த கையோடு தளபதி 66 படத்தின் ஷுட்டிங்கிற்கு தயாராகி விட்டார் விஜய். இந்த படத்தின் ஷுட்டிங் ஏற்கனவே துவங்கப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தளபதி 66, தளபதி 67 என வரிசையாக படங்களில் கமிட்டாகி வருகிறார்கள் விஜய். தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் அல்லது அட்லி இயக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பீஸ்ட் படம் கொடுத்த விமர்சனங்களை முறியடிக்க, ஹிட் கொடுத்தே ஆக வேண்டிய நிலையில் இருக்கும் விஜய், தற்போதைய சூழலில் மீண்டும் நெல்சனுக்கு ஓகே சொல்வாரா என்பது சந்தேகம் தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X