இந்த தைரியம் நிரூப்புக்கு முன்பே இருந்திருந்தால்.. இந்நேரம் அவர் தான் டைட்டில் வின்னர் போட்டியாளர்!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்றே அளவெடுத்து செய்தவர் நிரூப் என்பது பிரியங்கா உள்பட ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களின் கணிப்பாக ஆரம்பத்தில் சொல்லப்பட்டது.

நடந்து முடிந்த டிக்கெட் டு ஃபினாலே டின்னர் டாஸ்க்கின் போதும் நிரூப் ஒரு ஸ்ட்ராங் பிளேயர் என்று சொல்லியே பிரியங்கா நிரூப்புக்கு ஓட்டுப் போட்டார்.

இந்நிலையில், தற்போது தாமரையிடம் நிரூப் பிரியங்காவை எதிர்த்து பேச இங்கே எவனுக்கும் தைரியம் இல்லை என சொல்வதை பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள் நிரூப்புக்கும் ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

ஆரியாக மாறுகிறாரா நிரூப்

ஆரியாக மாறுகிறாரா நிரூப்

கடந்த சீசனில் அர்ச்சனாவின் அன்பு கேங்குக்கு எதிராக தனியாளாக பொங்கி எழுந்த ஆரி பிக் பாஸ் டைட்டில் வின்னராக மாறினார். அதே போல இந்த சீசனில் பிரியங்காவுக்கு எதிரான கலக குரலை தற்போது நிரூப் எடுத்துள்ளார். பல முறை ஆரி வொர்ஸ்ட் பர்ஃபார்மராக தேர்வு செய்யப்பட்டு சிறைக்குள் தள்ளப் பட்டார். இந்த சீசனிலும் நிரூப் அதிக முறை சிறைக்குள் தள்ளப் பட்டு இருக்கிறார்.

ரியோ தான் ராஜுவா

ரியோ தான் ராஜுவா

அர்ச்சனாவின் அன்பு கேங்கில் ஐக்கியமாகி வெளியே அடையாளமே தெரியாமல் காணமல் போன ரியோவின் நிலைமை தான் ராஜுவுக்கு வந்து விடுமா? நிரூப் ராஜுவை ரியோவாக முத்திரை குத்த முயற்சிக்கிறாரா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

இந்த தைரியம் அப்போதே

இந்த தைரியம் அப்போதே

80 நாட்கள் வரை பிரியங்காவின் நண்பனாக இருந்து விட்டு தற்போது பிரியங்காவை பற்றி நிரூப் பேசுவது அவருக்கு எதிராக முடியவே அதிக வாய்ப்புகள் உள்ளன. ஆனால், இதே தைரியத்துடன் பிரியங்காவை ஆரம்பத்தில் இருந்தே நிரூப் எக்ஸ்போஸ் செய்திருந்தால் இந்த சீசனின் டைட்டில் வின்னராகவே நிரூப் மாறியிருப்பார். ரசிகர்களின் ஆதரவு அதிகரித்து இருக்கும் என கூறப்படுகிறது.

இப்போ ஒண்ணும் கெட்டுப்போகல

இப்போ ஒண்ணும் கெட்டுப்போகல

டிக்கெட் ஃபினாலேவை நிரூப் வெல்ல வில்லை என்றாலும் இந்த வாரம் அதிக வாக்குகளுடன் முதல் நபராக சேவ் ஆனாலே ரசிகர்களின் அன்பை அவரால் பெற்று விட முடியும். ஆனால், அதற்கு கடைசி வரை தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து சிறப்பாக நிரூப் விளையாட வேண்டும் என்றும் தாமரையை பயன்படுத்திக் கொண்டு தன்னுடைய விஷயத்தை சாதிக்க முயற்சி செய்யாமல் நிரூப்பே நேரடியாக அநியாயம் என்று தெரிந்தால் அதற்கு எதிராக போராட வேண்டும் என பிக் பாஸ் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X