யாரும் பணப்பெட்டியை எடுக்க மாட்டாங்க...பளீச்சென சொன்ன அமீர்
சென்னை : பிக்பாஸில் நேற்று சரத்குமார், ரூ.3 லட்சம் பணம் இருக்கும் பெட்டியை கொண்டு வந்து வைத்தார். போட்டியாளர்களிடம் ஜாலியாக பேசிய சரத்குமார், யாராவது ஒருவர் தான் வெற்றி பெற போகிறீர்கள். அதனால் அனைவரும் சிந்தித்து முடிவெடுங்கள் என அட்வைஸ் செய்து விட்டு போனார்.
இதனால் பணப் பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேற போவது யார் என்ற கேள்வியும், ஆராய்ச்சியும் அனைவரின் மனதிலும் ஓட துவங்கியது. இவர் தான் போவார், அவர் தான் போவார் என சோஷியல் மீடியாக்களில் பலரின் பெயர்களும் அடிபடுகிறது.

பெட்டி மட்டும் கொடுப்பாங்களா
இந்நிலையில் கற்கள் பதிக்கப்பட்ட அந்த பெட்டி நன்றாக உள்ளது. அதை மட்டும் என்னிடம் கொடுத்து விடுங்கள் என சரத்குமாரிடமே கேட்டார் நிரூப். சரத்குமார் சென்ற பிறகும், அந்த பெட்டியை மட்டும் தருவார்களா என சிபியும், நிரூப்பும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, நான் கூட அந்த பணத்தை எடுக்கலாம். சொல்ல முடியாது என ஓப்பனாகவே சொல்கிறார் நிரூப்.

யாருமே எடுக்க மாட்டாங்க
அதே சமயம் கார்டன் ஏரியாவில் பணப்பெட்டி அருகே நின்று பேசிக் கொண்டிருக்கும் அமீர் மற்றும் பாவனியும், பணப்பெட்டியை யார் எடுக்க போகிறார்கள் என்றே பேசுகிறார்கள். அப்போது சொல்லும் அமீர், எனக்கு தெரிந்து யாரும் எடுக்க மாட்டார்கள். நானும் எடுக்க மாட்டேன். நீயும் எடுக்க மாட்டாய். நம்மை தவிர்த்து இங்குள்ள 5 பேரும் எடுக்க மாட்டார்கள் என்கிறார்.

எனக்காக நீ இருக்கனும்
அதற்கு பாவனி, நான் எடுக்க மாட்டேன் என நீ எப்படி சொல்லலாம். நான் கூட பணத்தை எடுத்துக் கொண்டு போகலாம் என்கிறார். அமீரும் நீ போகக் கூடாது. எனக்காக நீ இருக்கனும் என்கிறார். இதனால் சிரித்தபடி, நான் என்ன உனக்காகவா இங்க வந்தேன் என கேட்கிறார்.

நான் இருக்கும் வரை இரு
நிரூப் நான் பணத்தை எடுத்துக் கொண்டு போகலாம் என சிபியிடம் பேசிக் கொண்டிருக்கும் போது, நீ போகக் கூடாது. நான் இருக்கும் வரை நீ இருக்க வேண்டும் என்கிறார் தாமரை. நீ போய் விட்டால் நான் என்ன செய்வது. எனக்கு சப்போர்ட் இல்லாமல் போய்விடும். நான் போன பிறகு நீ போ என சொல்கிறார் தாமரை.
Recommended Video

இப்ப கூட பாசமாடா
இவர்களின் இந்த உரையாடல்களை பார்த்து விட்டு ரசிகர்கள், இங்க என்ன டாஸ்க் போய்கிட்டு இருக்கு. இவர்களின் பாசத்தை காட்டுற நேரமா இது. இப்போது கூட கூட்டு சேர்ந்து தான் விளையாடுறாங்க. தனியா முடிவெடுக்க மாட்டாங்களா என கேட்க துவங்கி விட்டனர். எதிர்பாராததை எதிர்பாருங்கள் என பிக்பாஸ் சொல்வதை போல் யாரும் எதிர்பார்க்காத ஒருவர் தான் பணப் பெட்டியை எடுத்துக் கொண்டு போக போகிறார் என்றும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











