»   »  ரஜினிக்கு ஜோடி நிர்வாண சர்ச்சை ராதிகா ஆப்தேவா?

ரஜினிக்கு ஜோடி நிர்வாண சர்ச்சை ராதிகா ஆப்தேவா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினியை வைத்து ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில், கதாநாயகியாக ராதிகா ஆப்தே நடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

லிங்காவுக்குப் பிறகு ரஜினி நடிக்கும் புதிய படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.

இந்தப் படம் வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் மலேஷியாவில் படப்பிடிப்புடன் ஆரம்பமாகிறது.

புதிய குழு

புதிய குழு

ரஜினியின் இந்தப் படத்தில் முற்றிலும் புதிய தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர் நடிகைகள் இணைகிறார்கள். நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு இதுபோன்ற புதிய குழுவுடன் இணைகிறார் ரஜினி.

நாயகி

நாயகி

இந்தப் படத்தின் தலைப்பு, நாயகி போன்ற விவரங்களை வெளியிடவில்லை. படம் எப்படி இருக்கும் என்ற யூகத்துக்கும் இடம் தரவில்லை. முதலில் வித்யா பாலன் நடிப்பார் என்றார்கள். ஆனால் இப்போது ராதிகா ஆப்தே நடிக்கப் போகிறார் என்கிறார்கள்.

நிர்வாண சர்ச்சை

நிர்வாண சர்ச்சை

ராதிகா ஆப்தே தமிழில் டோனி படத்தில் அறிமுகமானார். அடுத்து ஆல் இன் ஆல் அழகுராஜாவில் நடித்தார். அதன் பிறகு ஒரு இந்திப் படத்தில் நிர்வாணக் காட்சி ஒன்றில் நடித்ததாக செய்தி வெளியானது. அந்த நிர்வாணக் காட்சியும் சில தினங்களில் சமூக வலைத் தளங்களில் வெளியாகின. மேலும் அவரது நிர்வாண செல்ஃபி என்ற பெயரில் சில புகைப்படங்களும் வெளிவந்தன.

அதிர்ச்சி

அதிர்ச்சி

இந்த நடிகைதான் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார் என்பது பலருக்கும் கொஞ்சம் அதிர்ச்சி. அதை சமூக வலைத் தளங்களில் பதிவு செய்து வருகின்றனர். ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை.

எதார்த்தமான படம்

எதார்த்தமான படம்

ரஜினி நடிக்கும் இந்தப் படம் மெட்ராஸ் போல எதார்த்தமாக இருக்கும் என்றும், ரஜினியின் பாத்திரம் முள்ளும் மலரும் காளி போல அழுத்தமாக இருக்கும் என்றும் இயக்குநர் ரஞ்சித் சமீபத்தில் கூறியுள்ளார்.

English summary
According to reports, actress Radhika Apte is going to play female lead role in Rajini's new movie directed by Ranjith.
Please Wait while comments are loading...