என்னாது பிரியங்காவை பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே அனுப்ப போறாரா ராஜு.. பதற்றத்தில் ரசிகர்கள்!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் டாப் போட்டியாளரான பிரியங்காவை பிக் பாஸ் வீட்டில் இருந்து ராஜு வெளியேற்ற தீர்மானித்து தலையில் தண்ணி ஊற்ற அமர வைக்கும் அதிரடியான 3வது புரமோ வெளியாகி உள்ளது.
ஃபினாலே வாரத்திற்கு ஒருவரை தேர்வு செய்து அனுப்ப சொல்லி ஆப்பு அடிக்கும் டேர் கேள்வியுடன் பிக் பாஸ் சொல்ல, யாரையுமே அப்படி அனுப்ப போட்டியாளர்கள் முன் வரவில்லை.
இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து ஒருவரை வெளியே அனுப்ப சொல்லி உத்தரவிட்டு இருக்கிறார் பிக் பாஸ்.

முகமூடி
இன்னமும் பிக் பாஸ் வீட்டுக்குள் முகமூடியுடன் சுற்றித் திரியும் ஒரு நபரை அடையாளம் கண்டு அவரை நேரடியாக பிக் பாஸ் ஃபினாலே வாரத்திற்குள் அனுப்ப ஹவுஸ்மேட்களுக்கு பிக் பாஸ் ஆர்டர் போடும் புரமோ வெளியானதும் நிரூப்பை காப்பாற்றவே இப்படியொரு ஏற்பாடு என நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வந்தனர்.

யாரையும் அனுப்பல
ஆனால், உள்ளே உள்ள ஹவுஸ்மேட்கள் அனைவருமே அன்பு, பாசத்தால் கட்டுப்பட்டவர்களாக இருக்கும் நிலையில், அப்படி யாரையுமே அசிங்கப்படுத்தி இறுதி வாரத்திற்கு அனுப்ப முடிவு செய்யவில்லை என்பது 3வது புரமோவை பார்த்தாலே தெளிவாகி விடுகிறது. இதனால் கடுப்பாகும் பிக் பாஸ் இன்னொரு டேரை செய்ய சொல்லி சூப்பர் ட்விஸ்ட் கொடுத்திருக்கிறார்.

எவிக்ட் பண்ணுங்க
ஃபினாலே வாரத்திற்கு ஒருவரை கூட தேர்வு செய்து யாருமே அனுப்பாத நிலையில், ஒருவரை நீங்களே முடிவு செய்து எவிக்ட் பண்ணுங்க என பிக் பாஸ் அப்படியே பிளேட்டை திருப்பிப் போட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார். கடைசி வாரத்திற்கு அனுப்பவே யோசிக்கும் போட்டியாளர்கள் எப்படி மனசு வந்து ஒருவரை எவிக்ட் பண்ண முன் வருவார்கள் என நினைத்தால் ராஜு அதற்காக முன் வந்துள்ள காட்சிகள் புரமோவில் இடம் பெற்றுள்ளன.

பிரியங்கா எவிக்ட்டா
ராஜுவுக்கு அடுத்து அதிக ஓட்டுக்களுடன் பிக் பாஸ் வீட்டில் இத்தனை வாரங்களாக டாப் பிளேயராக இருக்கும் பிரியங்காவை அழைத்துக் கொண்டு போய் தண்ணீர் ஊற்றி ராஜு எவிக்ட் பண்ணப் போகும் காட்சிகள் 3வது புரமோவில் இடம்பெற்று ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

ஷாக்கான பிரியங்கா
தனக்கு டைட்டில் கிடைக்க எதிர்ப்பாக இருப்பது பிரியங்கா தான் என்பதை அறிந்து கொண்டே ராஜு அவரை எவிக்ட் செய்ய முடிவு செய்து விட்டார் என்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், ராஜுவை பார்த்து என்னையா வெளியே அனுப்ப போற என பார்க்கும் அந்த ரியாக்ஷன் பிரியங்கா ரசிகர்களை கொந்தளிக்க செய்துள்ளது.

பிக் பாஸ் பிராங்க்
அப்படியெல்லாம் பிரியங்காவை வெளியே அனுப்பி விட மாட்டார்கள் இது இறுதி வார சண்டையை மூட்ட பிக் பாஸ் போடும் பிராங்க் என நெட்டிசன்கள் கணித்து கமெண்ட் செய்து வருகின்றனர். ராஜு மற்றும் பிரியங்கா தொடர்ந்து நட்பாக பழகி வந்தால் இறுதிப் போட்டி சுவாரஸ்யமாக இருக்காது என்பதற்காக ராஜுவை நெகட்டிவாக காட்ட முடிவு கட்டி விட்டார்கள் என ராஜுவின் ஆர்மியினர் கடுப்பாகி உள்ளனர்.
Recommended Video

எதுவும் லீக்காகல
புரமோவை பார்த்து நம்ப வேண்டாம் நிகழ்ச்சியை பார்த்து தெளிவாகி விடுவோம் என்றும் இந்நேரம் பிரியங்கா எவிக்ட் செய்யப்பட்டிருந்தால் தகவல்களை கசிய விடுபவர்கள் முண்டியடித்துக் கொண்டு தகவலை போட்டு உடைத்திருப்பார்கள் என்றும் பிக் பாஸ் ரசிகர்கள் பயங்கர தெளிவாக உள்ளனர்.


Click it and Unblock the Notifications











