twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜெ ஆதரவு யாருக்கு... எஸ்ஏசிக்கா? ராவுத்தருக்கா?

    By Shankar
    |

    Ibrahim ravuthar and SA Chandrasekaran
    குழம்பம், மோதல், பரபரப்பின் உச்சத்திலிருக்கிறது தயாரிப்பாளர் சங்கம்.

    பெப்சி Vs தயாரிப்பாளர்கள் என்று ஆரம்பித்த பிரச்சினை, இப்போது தயாரிப்பாளர்கள் Vs தயாரிப்பாளர்கள் என்று முட்டிக் கொண்டு நிற்கிறது. ஒருவேளை பெப்சியுடன் பேசுவைத் தவிர்க்க பேசி வைத்துக் கொண்டு மோதுகிறார்களோ என கமெண்ட் அடிக்கும் அளவுக்கு அரசியல் வாடை!

    சினிமா தொழிலாளர் சம்பள விவகாரம் குறித்து பேசுவதில் பெப்சிக்கும் தயாரிப்பாளர்களுக்கும் ஏற்பட்ட மோதல், புதிய தொழிலாளர் அமைப்பு ஒன்றை உருவாக்கும் அளவுக்குப் போனது. இதில் பெப்சியின் பக்கம் நின்ற அமீரைத்தான் முதலில் குறி வைத்தது தயாரிப்பாளர் சங்கம். அமீரும் பெப்சியும் அம்மாவிடம் முழுமையாக சரணடைந்து, நடந்த அனைத்தையும் கூறி காப்பாற்றுமாறு உருக, இந்தப் பிரச்சினையை கையாள தொழிலாளர் நலத்துறை மற்றும் அதன் அமைச்சருக்கு உத்தரவிட்டுவிட்டார்.

    தொழிலாளர்களுக்கு விரோதமான தீர்வை ஆதரிக்க முடியாது என்று ஆரம்பத்திலேயே தமிழக அரசு உறுதியாக இருந்ததால், பெப்சியுடன் பேச தயாரிப்பாளர்கள் தயாராக இல்லை. தமிழக அரசையும் பகைத்துக் கொள்ள முடியவில்லை.

    அதுவரை, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ் ஏ சந்திரசேகரனுக்கு இருந்த இமேஜ், அதிமுக அபிமானி, முதல்வருக்கு வேண்டப்பட்டவர் என்பது.

    ஆனால் இவர் சங்கத் தலைவரானதிலிருந்து ஜெயலலிதாவைப் பார்க்க ஒருமுறை கூட அனுமதி கிடைக்கவில்லை. அட, ரூ 25 லட்சத்தை தானே புயல் நிவாரண நிதிக்குக் கொடுக்க நேரம் கேட்டு தவம் கிடந்து பார்த்தார்கள். ஜெயலலிதா கண்டு கொள்ளவே இல்லை. பெப்சி பிரச்சினை குறித்து பேச ஜெயலலிதாவிடம் அப்பாயின்ட்மெண்ட் கேட்டனர் தயாரிப்பாளர்கள். ம்ஹூம்... அந்த நேரத்தில் ரஜினி, கமல், சூர்யா குடும்பம் என்று வரவழைத்துப் பார்த்துப் பேசினார்.

    இதையெல்லாம் கவனித்து வந்த எதிர்த் தரப்புக்கு, எஸ் ஏ சந்திரசேகரன், அம்மா ஆட்சிக்கு வேண்டப்பட்டவர் அல்ல என்பது புரிந்துவிட்டது.

    அப்போதுதான் அதிமுகவில் சேர்ந்தார் விஜயகாந்தின் முன்னாள் நண்பர் இப்ராகிம் ராவுத்தர். நேரடி கட்சிக்காரர் என்பதால் ராவுத்தருக்குதான் இப்போது முதல்வரின் ஆதரவு என்பதால், பெரும்பாலான தயாரிப்பாளர்கள் ராவுத்தர் அணிக்குப் போய்விட்டதாகக் கூறப்படுகிறது.

    ராவுத்தர் அணி சட்டவிரோதம் என்று எஸ்ஏ சந்திரசேகரன் கூறினாலும், அவர் பின்னால் எவ்வளவு தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள், என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. முதல்வர் மனநிலை புரிந்து நடந்து கொண்டால்தான் சினிமா தொழில் சிக்கலின்றிப் போகும் என்பதால், மற்ற தயாரிப்பாளர்களும் தயங்குகிறார்களாம்.

    இப்போது எஸ்ஏ சந்திரசேகரன் பொதுக்குழு கூட்டுவதாக அறிவித்துள்ள நிலையில், எத்தனை தயாரிப்பாளர்கள் வருவார்கள், போலீஸ் பாதுகாப்பு கிடைக்குமா போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.

    English summary
    The chaos in the powerful producer council is still not settled. Now it is cleared that Ibrahim Ravuthar, the Ad-hock committee president has won the support from government side. So the suspended president S A Chandrasekar is in confusion and trying to woo the attention of the ruling side.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X