தளபதி 66 ல் சரத்குமாரின் ரோல் என்ன...ஒரு போட்டாவால் தீயாய் பரவும் தகவல்
சென்னை : விஜய்யின் தளபதி 66 படத்தின் ஷுட்டிங் ஸ்பாட் ஸ்டில் ஒன்று இன்று வெளியாகி, பெரும் புயலையே கிளப்பி உள்ளது. இதனால் சரத்குமார் உண்மையில் இந்த படத்தில் என்ன ரோலில் தான் நடிக்கிறார் என ரசிகர்கள் மண்டையை உடைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
வம்சி பைடபள்ளி இயக்கும் தளபதி 66 படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். தமன் இசையமைக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷாம், பிரபு, பிரகாஷ்ராஜ், ஜெயசுதா, யோகிபாபு, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், நடிகை சங்கீதா, பிக்பாஸ் சம்யுக்தா ஷாம் உள்ளிட்ட பலர் நடிக்கிறார். படத்தில் அதிகமானவர்கள் நடிப்பதால் விரைவில் படத்தில் நடிப்பவர்கள் பற்றிய லிஸ்ட் விரைவில் வெளியிடப்பட உள்ளதாம்.

தமன் கொடுத்த அப்டேட்
ஏப்ரல் 6 ம் தேதி சென்னையில் பூஜையுடன் துவங்கிய தளபதி 66 படத்தில் முதல் கட்ட ஷுட்டிங் சென்னையிலும், இரண்டாம் கட்ட ஷுட்டிங் ஐதராபாத்திலும் நடந்தது. மூன்றாம் கட்ட ஷுட்டிங் தற்போது ஐதராபாத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பாலான நடிகர் கலந்து கொண்டுள்ளனர். இதற்கிடையில் தளபதி 66 படத்தில் 6 பாடல்கள் இடம்பெற்று உள்ளதாக தமன் அப்டேட் வெளியிட்டுள்ளார்.

போலீஸ் ரோலில் நடிக்கிறாரா சரத்குமார்
இந்த படத்தில் சரத்குமார், விஜய்யின் அப்பா ரோலிலும், ஜெயசுதா அம்மா ரோலிலும், ஷாம் மற்றும் ஸ்ரீகாந்த் விஜய்யின் அண்ணன்கள் ரோலில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதை படக்குழுவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்று ஷுட்டிங் ஸ்பாட்டில் சரத்குமார், மனோபாலா ஆகியோர் அமர்ந்திருக்கும் போட்டோ ஒன்று வெளியானது. இதனால் தளபதி 66 படத்தில் சரத்குமார் போலீஸ் ரோலில் நடிக்கிறார் என தகவல் பரவியது.

ஒரு போட்டோவால் வெடித்த குழப்பம்
சரத்குமார் போலீஸ் தோரணையில் அமர்ந்திருப்பதாலும், அவர் அருகில் அமர்ந்திருப்பவரும் போலீஸ் டிரெசில் இருப்பதாலும் சரத்குமார் போலீஸ் ரோலில் தான் நடிக்கிறாரா என கேள்வி எழுந்துள்ளது. இந்த போட்டோவை நடிகர் மனோபாலா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதனால் தளபதி 66 போட்டோ தான் இது என முடிவு செய்து வைரலாக்கப்பட்டது. ஆனால் இது தளபதி 66 பட செட்டில் எடுக்கப்பட்ட போட்டோ கிடையாது என மனோபாலா தெளிவுபடுத்தி உள்ளார். இது மற்றொரு படத்தின் ஸ்டில் என்றும் கூறி உள்ளார்.

அடுத்த அப்டேட் என்ன
தற்போது தளபதி 66 ஷுட்டிங்கில் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறதாம். இந்த ஷுட்டிங் ஜுன் மாத கடைசி வரை நடைபெற உள்ளதாம். அதற்கு பிறகு சென்னை வந்து அடுத்தக்கட்ட ஷுட்டிங் நடத்தப்பட உள்ளதாம். இதற்காக சென்னையில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு வருகிறதாம்.


Click it and Unblock the Notifications











