தளபதி 67 இவர் நடிக்க வேண்டிய கதையா... லோகேஷை விஜய் ஓகே செய்ய இது தான் காரணமா?

சென்னை : லோகேஷ் கனகராஜ், தளபதி 67 படத்தின் கதையை விஜய்க்காக தயார் செய்யவில்லை. வேறு ஒரு ஹீரோவை மனதில் வைத்து உருவாக்கியது என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. தளபதி 67 படத்திற்கு லோகேஷை விஜய் ஓகே செய்ததற்கு கூட இது தான் காரணம் என கூறப்படுகிறது.

ஆரம்பத்தில் குறும்படங்களை இயக்கி வந்த டைரக்டர் லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்பராஜ் கொடுத்த நம்பிக்கையால் மாநகரம் படத்தை இயக்கினார். முதல் படத்திலேயே தனது வெற்றியை பதிவு செய்து, அனைவரின் கவனத்தையும் ஈரத்து விட்டார்.

இப்படி கூட படம் எடுக்கலாம்

இப்படி கூட படம் எடுக்கலாம்

இரண்டாவதாக கார்த்தியை வைத்து இவர் இயக்கிய கைதி படம் பிளாக் பஸ்டர் படமானது. ஹீரோயின், பாட்டு, ஹீரோவின் மாஸ் என்ட்ரி, பில்டப், வெளிநாட்டு லொகேஷன், பிரம்மாண்டம் எதுவும் இல்லாமல் ஒரு படத்தை கடைசி வரை த்ரில்லிங்காக, அனைவரும் ரசிக்கும் படி எடுக்க முடியும் என்பதை நிரூபித்து காட்டினார் லோகேஷ் கனகராஜ். இதே எதிர்பார்ப்பை விஜய்யின் மாஸ்டர் படத்திலும் ஏற்படுத்தி, கொரோனாவை தாண்டி மீண்டும் ஒரு மாஸ் ஹிட் கொடுத்தார்.

எப்படிங்க இதை எடுத்தீங்க

எப்படிங்க இதை எடுத்தீங்க

தற்போது கமலை வைத்து விக்ரம் படத்தையும் எடுத்து முடித்துள்ளார். இந்த படமும் ரிலீஸ் ஆவதற்கு முன்பே பல ஆச்சரியங்களை ஏற்படுத்தி உள்ளது. எப்படி இவர் இந்த படத்தை எடுத்தார் என அனைவரையும் கேட்க வைத்துள்ளது. அந்த அளவிற்கு தொழில்நுட்பங்களை மிக கச்சிதமாக பயன்படுத்தி, இளமையான கமலை மீண்டும் ரசிகர்கள் கண் முன்னே கொண்டு வந்துள்ளார். விக்ரம் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் யாரை இயக்க போகிறார் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

கன்ஃபார்ம் ஆன தளபதி 67

கன்ஃபார்ம் ஆன தளபதி 67

இதே போல் தளபதி 67 படத்தை யார் இயக்க போகிறார் என பல குழப்பங்கள் நிலவி வந்த நிலையில், தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் தான் இயக்குகிறார். மாஸ்டர் கூட்டணி மீண்டும் இணைய உள்ளது. தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் தளபதி 67 படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார். வரும் அக்டோபர் மாதம் முதல் ஷுட்டிங் துவங்க உள்ளது என அப்டேட் வெளியானது.

இது இவர் நடிக்க வேண்டிய கதையா

இது இவர் நடிக்க வேண்டிய கதையா

தளபதி 67 படத்திலும் ஹீரோயின், பாட்டு என எதுவும் கிடையாது. இது வித்தியாசமான விஜய் படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் மற்றொரு லேட்டஸ்ட் தகவலாக, தளபதி 67 படத்தின் கதை விஜய்க்காக எழுதப்பட்டது கிடையாதாம். ரஜினியை மனதில் வைத்து தான் லோகேஷ் இந்த கதையை உருவாக்கினார். அதாவது தலைவர் 169 படத்திற்காக உருவாக்கப்பட்ட கதையாம். ஆனால் தலைவர் 169 படத்திற்காக நெல்சனை, ரஜினி ஓகே செய்ததால் இந்த கதையை அப்படியே விஜய்யின் தளபதி 67 படத்திற்கு பயன்படுத்த போகிறாராம் லோகேஷ்.

விஜய்க்கு முன்னாடியே தெரியுமா

விஜய்க்கு முன்னாடியே தெரியுமா

ரஜினிக்காக தயார் செய்யப்பட்ட கதையில் விஜய் நடிக்க உள்ளதால், தற்போது விஜய்க்கு ஏற்றாற் போல் கதையில் மாற்றம் செய்து வருகிறாராம் லோகேஷ். பீஸ்ட் படம் முடிவதற்கு முன்பே தளபதி 66 அறிவிப்பு வெளியாகி விட்டது. தளபதி 67 படத்திற்காக விஜய் கதை கேட்டும் வந்துள்ளார். பீஸ்ட் படத்தின் இறுதிக்கட்ட ஷுட்டிங் நடக்கும் போதே அவுட்புட் எப்படி இருக்கும் என விஜய் ஓரளவிற்கு கணித்து விட்டாராம். அதனால் தான் பீஸ்ட் படத்திற்கு கிடைத்த நெடிவ் விமர்சனங்களை சரி கட்ட தளபதி 67 படத்திற்கு லோகேஷிடம் கதை கேட்டு ஓகே செய்தாராம் விஜய்.

Recommended Video

Beast | Vijayயின் தந்தை S.A.Chandrasekarரின் Open talk | அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்
இதனால் தான் விஜய் ஓகே சொன்னாரா

இதனால் தான் விஜய் ஓகே சொன்னாரா

தியேட்டர்களில் 50 சதவீதம் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்ட போதே 100 கோடி வசூலித்த படம் மாஸ்டர். பாடல், டிரைலர், டீசர் என வெளியிட்ட அத்தனையும் மாஸ் ஹிட் ஆனது. இதனால் தளபதி 67 படத்தை மாஸ் ஹிட் படமாக தந்து, தனது இமேஜ் பாதிக்காமல் இருக்க லோகேஷ் தான் சரியான ஆள். அதுவும் ரஜினிக்கான கதை என்றால் நிச்சயம் மாஸாக தான் இருக்கும். அதில் தான் நடித்தால் கண்டிப்பாக படம் வேற லெவல் ஹிட் அடிக்கும் என விஜய் நினைப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X