நமீதா வெளியேறியதற்கு தாமரை தான் காரணமா... புதிதாக கிளம்பிய சர்ச்சை

சென்னை : அக்டோபர் 3 ம் தேதி பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி துவங்கப்பட்டது. இந்த சீசனையும் கமலே தொகுத்து வழங்கி வருகிறார். இதில் முதல் முறையாக பல்வேறு துறைகளைச் சேர்ந்த 18 பேர் போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

Recommended Video

Namitha Marimuthu BIGG BOSS விட்டு வெளியான அதிர்ச்சி காரணம்

பிக்பாஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக திருநங்கையான நமீதா மாரிமுத்துவும் போட்டியாளராக கலந்து கொண்டார். கடந்த சில நாட்களுக்கு முன் போட்டியாளர்கள் தங்கள் வாழ்க்கை பற்றி பகிர்ந்து கொண்டனர். அதில் நமீதா மாரிமுத்துவும் தனது வாழ்க்கையில் சந்தித்த கஷ்டங்கள், போராட்டங்கள் குறித்து வெளிப்படையாக பேசினார்.

மனதை கவர்ந்த நமீதா

மனதை கவர்ந்த நமீதா

ஒட்டுமொத்த திருநங்கைகளின் குரலாக ஒலித்த நமீதாவின் பேச்சு ஹவுஸ்மேட்கள் மட்டுமின்றி, பார்ப்பவர்கள் அனைவரின் மனதையும் கவர்ந்து, கண்களில் கண்ணீரை வரவழைத்தது. நேற்றைய எபிசோடில் பேசிய கமலும் இதையே தெரிவித்தார். அவரின் கதை தன்னையும் நெகிழ வைத்ததாக கூறினார் கமல்.

வெளியேறிய நமீதா

வெளியேறிய நமீதா

நமீதா இறுதி போட்டி வரை செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக அவர் பிக்பாஸ் போட்டியில் இருந்து வெளியேறியதாக அறிவிக்கப்பட்டது. தவிர்க்க முடியாத காரணங்களாலும், மருத்துவ காரணங்களாலும் நமீதா வெளியேறியதாக கூறப்பட்டது. இந்நிலையில் நமீதா பிக்பாஸ் போட்டியில் இருந்து வெளியேறியதற்கு தாமரை செல்வி உடன் ஏற்பட்ட பிரச்சனை தான் காரணம் என பத்திரிக்கை ஒன்றில் செய்தி வெளியாகி உள்ளது.

இது தான் காரணமா

இது தான் காரணமா

அந்த செய்தியில், தாமரை பேசியதை தவறாக புரிந்து கொண்ட நமீதா, தாமரையை கடுமையாக திட்டி உள்ளார். தொடர்ந்து வீட்டில் இருந்த பொருட்களையும் தூக்கி போட்டு உடைத்து, ரகளை செய்ததாகவும், அவரை பிக்பாஸ் டீம் சமாதானப்படுத்த முயன்றும் நமீதா சமாதானம் ஆகவில்லையாம். இதனால் அவருக்கு ரெட் கார்டு போடப்பட்டு, அவரே முன் வந்து நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதாக அறிவிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

போட்டியாளர்கள் காரணமில்லை

போட்டியாளர்கள் காரணமில்லை

இந்த தகவல் உண்மை தானா என விஜய் டிவி தரப்பிலும், நமீதாவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் இடமும் விசாரிக்கப்பட்டது. அப்போது இந்த தகவலில் கொஞ்சமும் உண்மையில்லை. நமீதா, பிக்பாஸ் போட்டியில் இருந்து வெளியேறியதற்கும் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதற்கு அவர்கள் யாரும் காரணம் இல்லை என தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லாமே பொய்

எல்லாமே பொய்

பிக்பாஸ் வீட்டிற்குள் நள்ளிரவில் நமீதாவால் மிகப் பெரிய ரகளை ஏற்பட்டதாக கூறப்படுவதும் பொய்யான தகவல் என கூறப்பட்டுள்ளது. தான் வெளியேறியதற்கு என்ன காரணம் என நமீதா கூறும் வரை இது போன்ற பல தகவல்கள் வந்து கொண்டே இருக்கத் தான் செய்யும் என கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X