என்ன மகாலி இப்படி பண்ணிட்டீங்களே.. கேமராவை குறுகுறுவென பார்த்த சுனில் ரெட்டி.. பீஸ்ட் பரிதாபங்கள்!

சென்னை: இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி உள்ள பீஸ்ட் படத்தின் புதிய ஸ்டில் ஒன்றை சன் பிக்சர்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது.

அந்த பிரத்யேக ஸ்டில்லில் மற்ற நடிகர்கள் அனைவரும் கேஷுவலாக எதையோ பார்த்து பயப்பட, நம்ம டாக்டர் மகாலி நடிகர் சுனில் ரெட்டி ஸ்ட்ரெயிட்டா கேமராவை பார்த்து லுக் விடுவது ஜூம் போட்டு நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

டாக்டர் படத்தை போல பீஸ்ட் படத்திலும் சுனில் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளி இணைந்து செம காமெடி செய்யப் போகிறார்கள் என்பது இப்பவே கன்ஃபார்ம் ஆகிவிட்டது.

வைபவ் அண்ணன்

வைபவ் அண்ணன்

நடிகர் வைபவ்வின் அண்ணன் தான் சுனில் ரெட்டி. விஜய்சேதுபதியின் சீதக்காதி படத்தில் நகைச்சுவை கலந்த வில்லன் ரோலில் நடித்து அசத்தினார். சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் மகாலி கதாபாத்திரத்தில் நடித்து அர்ச்சனாவை ஜொள்ளு விடும் காட்சிகளில் அசத்தி இருப்பார் சுனில் ரெட்டி.

மகாலி

மகாலி

டாக்டர் படத்தில் லோக்கல் ரவுடி மகாலியாக நடித்திருக்கும் சுனில் ரெட்டியை ஏமாற்றி தங்கள் மிஷனில் அவருக்கே தெரியாத அளவுக்கு ஈடுபட வைத்திருப்பார் சிவகார்த்திகேயன். சீதக்காதி படத்தை விட மகாலி கதாபாத்திரத்தில் செம பர்ஃபார்மன்ஸ் கொடுத்த சுனில் ரெட்டியை அப்படியே பீஸ்ட் படத்திற்கும் அழைத்து வந்திருக்கிறார் இயக்குநர் நெல்சன்.

பீஸ்ட் படத்திலும்

பீஸ்ட் படத்திலும்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன் நடிப்பில் உருவாகி உள்ள பீஸ்ட் படத்திலும் டாக்டர் படத்தில் காமெடியில் கலக்கிய ரெட்டின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். கூடுதலாக விடிவி கணேஷும் இந்த படத்தில் காமெடியில் கலக்கப் போகிறார்.

கேமராவை பார்த்து

கேமராவை பார்த்து

பூஜா ஹெக்டே முதல் விஜய் வரை எல்லாருமே கேமராவை பார்க்காமல் கேஷுவலாக காட்சிக்கு ஏற்றார் போல நடித்துக் கொண்டிருக்கையில், நம்ம மகாலி மட்டும் கேமராவை எப்படி குறுகுறுவென பார்க்கிறார் பாருங்க என நெட்டிசன்கள் ஜூம் போட்டு அவரை பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

யாரு சாமி இவர்

யாரு சாமி இவர்

சுனில் ரெட்டி டைரக்ட்டா கேமராவை பார்த்தது போல இருக்கும் போட்டோவை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து போட்டு நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். காமெடி படம் என்பதால், இயக்குநர் நெல்சன் இதை அப்படியே கண்டு கொள்ளாமல் விட்டு விட்டாரா என ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

நல்லா போஸ் கொடுக்கிறாப்ல

நல்லா போஸ் கொடுக்கிறாப்ல

நடிகர் சுனில் ரெட்டியின் மண்டையில் ரெண்டு கொம்பு போட்டு அவரை தனியாக மார்க் செய்து, நல்லா போஸ் கொடுக்கிறாப்ல என கிண்டல் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள். பீஸ்ட் படத்தின் அப்டேட் போஸ்டரையே இப்படி ட்ரோல் செய்கிறார்களே இன்னும் என்னவெல்லாம் பரிதாபங்கள் படத்தில் இருக்கப் போகிறதோ என ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

ரெட்டின் கிங்ஸ்லி எங்கடா

ரெட்டின் கிங்ஸ்லி எங்கடா

ஒரு பக்கம் விஜய் மற்றும் பூஜா ஹெக்டேவை ரசிகர்கள் ரசித்துக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் சுனில் ரெட்டியை ஜூம் செய்து ட்ரோல் செய்ய இந்த ரசிகரோ, ரெட்டின் கிங்ஸ்லி எங்கடா? இந்த போஸ்டரில் என அண்ணாத்த போட்டோ மீமை போட்டு கேட்டு இருக்கிறார். பீஸ்ட் டிரைலரில் என்னவெல்லாம் டீகோடிங் செய்ய ரசிகர்கள் காத்திருக்கிறார்களோ வெயிட் பண்ணி பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X