Thalapathy Vijay, Thalapathy 66...டிரெண்டிங்கில் தெறிக்கவிடும் ரசிகர்கள்...காரணம் யாருன்னு தெரியுமா?

சென்னை : #ThalapathyVijay, #Thalapathy66 ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்விட்டர் டிரெண்டிங்கில் டாப்பில் இருந்து வருகின்றன. இதற்கான காரணம் யார், என்ன என்று தெரிந்ததும், இதற்கே இப்படியா என அனைவரும் அசந்து போய் ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.

ஒரு சின்ன தகவல் தங்களின் ஃபேவரைட் நடிகர் பற்றி வந்து விட்டாலே ரசிகர்கள் அதை டிரெண்டிங் ஆக்கி விடுகிறார்கள். அதிலும் ரஜினி, விஜய், அஜித் என்றால் கேட்கவா வேண்டும். அஜித்தின் வலிமை, ஏகே 61 என பல அப்டேட்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் விஜய் நடிக்கும் பீஸ்ட் பற்றி எப்போதாவது ஒரு தகவல் தான் வருகிறது. அப்படியானால் ரசிகர்களின் கொண்டாட்டத்தை கேட்கவா வேண்டும்.

தளபதி 66 அறிவிப்பு

தளபதி 66 அறிவிப்பு

விஜய் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷுட்டிங் முடிந்து, போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து வருவதாகவும், ஏப்ரல் 14 பீஸ்ட் ரிலீஸ் செய்யப்பட அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் விஜய்யின் அடுத்த படமான தளபதி 66 படத்தின் அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டன. இது விஜய்யின் முதல் தெலுங்கு படம் மற்றும் பைலிங்குவல் படமாக அமைய உள்ளதாம்.

விறுவிறுப்பாக நடக்கும் தேர்வு

விறுவிறுப்பாக நடக்கும் தேர்வு

தளபதி 66 படத்தை தெலுங்கு டைரக்டர் வம்சி பைடபள்ளி இயக்க உள்ளதாகவும், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு படத்தை தயாரிக்க போவதாக கூறினார்கள். இந்த படத்திற்கு அனிருத் அல்லது தமன் இசையமைக்க உள்ளதாகவும், மற்ற நடிகர், நடிகைகள் பற்றிய தேர்வு நடந்து வருவதாகவும் கூறப்பட்டது. விரைவில் படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட உள்ளதாகவும் தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டது. இந்த படத்தில் விஜய்யின் மகளாக முன்னணி தெலுங்கு ஹீரோ மகேஷ் பாபுவின் மகள் சித்தாரா நடிக்க உள்ளதாகவும், பிரகாஷ்ராஜ் முக்கிய ரோலில் நடிக்க உள்ளதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது.

காரணம் இவங்க தானா

காரணம் இவங்க தானா

இந்நிலையில் இன்று திடீரென ட்விட்டரில் #ThalapathyVijay, #Thalapathy66 ஆகிய ஹேஷ்டேக்குகளை ரசிகர்கள் டிரெண்டிங் ஆக்கி உள்ளனர். இதற்கு காரணம் வேறு யாருமல்ல மாஸ்டர் மகேந்திரன் மற்றும் தயாரிப்பாளர் தில் ராஜுவும் தான். நாட்டாமை உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மாஸ்டர் மகேந்திரன், விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் வில்லன் பவானியாக வரும் விஜய் சேதுபதியின் சிறு வயது கேரக்டரில், கிட்டதட்ட குட்டி வில்லனாக என்ட்ரி கொடுத்தார். இந்த கேரக்டர் பெரிய அளவில் பாராட்டப்பட்டது.

அட இதெல்லாம் நடந்ததா

அட இதெல்லாம் நடந்ததா

மாஸ்டர் படம் ரிலீசாகி ஓராண்டிற்கும் மேல் ஆகி விட்டது. இந்நிலையில் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய மாஸ்டர் மகேந்திரன், 2 ஆண்டுகளுக்கு முன் மாஸ்டர் பட செட்டில் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய போட்டோக்களை ட்விட்டரில் பகிர்ந்தார். அதில் மாஸ்டர் ஷுட்டிங் ஸ்பாட்டில் நடிகர் விஜய், மகேந்திரனை கட்டிப்பிடித்து வாழ்த்து சொல்வது, இருவரும் மாறி மாறி கேக் ஊட்டி விடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இதை பார்த்து குஷியான ரசிகர்கள் #ThalapathyVijay ஹேஷ்டேக்கை டிரெண்டிங் ஆக்கி உள்ளனர். இதே போட்டோக்களை விஜய்யின் மகன் சஞ்சய்யும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

செம அப்டேட்டா இருக்கே

செம அப்டேட்டா இருக்கே

இதே போல் சமீபத்தில் தெலுங்கு டிவி சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தயாரிப்பாளர் தில் ராஜு, விஜய்யிடம் நான் கதை சொன்ன போது கடந்த 20 ஆண்டுகளில் இப்படி ஒரு கதையை கேட்டதில்லை என்றார். தளபதி 66 ஷுட்டிங் மார்ச் மாதம் துவங்கப்பட உள்ளது. தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம். கொரோனா இடையூறுகள் ஏதும் இல்லை என்றால் தீபாவளிக்கு ரிலீஸ் செய்வோம். அது முடியாமல் போனால் 2023 சங்கராந்தி (பொங்கல்) அன்று தளபதி 66 ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம் என கூறி இருந்தார். இந்த வீடியோவை அதிகம் பகிர்ந்து #Thalapathy66 ஹேஷ்டேக்கை டிரெண்டிங் ஆக்கி உள்ளனர்.

பக்கா பிளான் ரெடியா

பக்கா பிளான் ரெடியா

ஷுட்டிங் துவங்கும் நாள் முதல் ரிலீஸ் தேதி வரை இப்போதே பிளான் செய்து வைத்துள்ளார்களே என பலரும் ஆச்சரியப்பட்டு வருகின்றனர். இந்த படத்தை மிக பிரம்மாண்டமாக எடுக்க உள்ளதாகவும், இதற்காக விஜய்க்கு ரூ.125 கோடி வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் ஏற்கனவே வெளியாகி பரபரப்பை கிளப்பின.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X