அதர பழசான கதையிலா விஜய் நடிக்கிறார்...வாரிசு படத்தின் கதை இது தானா?

சென்னை : விஜய் தற்போது வம்சி பைடபள்ளி இயக்கும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் நான்காம் கட்ட ஷுட்டிங் ஐதராபாத்தில் துவங்கி நடந்து வருகிறது.

Recommended Video

SA Chandhrasekar சதாபிஷேகம் | Vijay பெயரில் அர்ச்சனை! *TamilNadu | Oneindia Tamil

இந்த ஷுட்டிங் ஒரு வாரம் வரை நடைபெற உள்ளதாம். இதற்காக தான் விஜய் தற்போது ஐதராபாத் சென்றுள்ளார். நான்காம் கட்ட ஷுட்டிங்கில் குடும்பசென்டிமென்ட் சீன்கள் படமாக்கப்பட உள்ளதாம்.

வாரிசு படம் 2023 ம் ஆண்டு பொங்கல் ரிலீஸ் என ஏற்கனவே சொல்லி விட்டார்கள். வாரிசு படத்துடன் 3 பெரிய படங்கள் பொங்கல் ரேசில் பங்கேற்க உள்ளதாக லேட்டஸ்ட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரெஞ்சு படத்தின் கதையா

பிரெஞ்சு படத்தின் கதையா

இந்நிலையில் வாரிசு படத்தின் கதை பற்றி வெளியாகி உள்ள தகவல்கள் விஜய் ரசிகர்களை மட்டுமல்ல அனைவரையும் அதிர வைத்துள்ளது. இதுவரை கிடைத்த தகவலின்படி, வாரிசு படத்தின் கதை, 'Largo Winch'என்ற பிரெஞ்சு படத்தின் கதை தான் என்பது தெளிவாகி உள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியிடப்பட்ட போதே இந்த தகவல் வெளியாகி பரபரப்பை கிளப்பியது.

 இதுதான் வாரிசு பட கதையா

இதுதான் வாரிசு பட கதையா

கோடீஸ்வர தொழிலதிபர் ரகசியமாக ஒரு மகனை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். யாருக்கும் தெரியாமல் வெளிநாட்டில் வளர்க்கப்படும் அந்த மகன், தனது தந்தை கொலை செய்யப்பட்ட பிறகு, அவரின் நிதி சாம்ராஜ்யம் தவறானவர்களின் கைகளில் சென்று விடாமல் தடுக்கிறார். எதிர்ப்புக்களை எவ்வாறு சமாளிக்கிறார், தனது தந்தையின் கொலைக்கான காரணத்தை கண்டுபிடித்து, சொத்துக்களின் வாரிசு தான் தான் என்பதை எவ்வாறு நிருபிக்கிறார் என்பது தான் கதை.

டிவி தொடராவும் வந்துடுச்சா

டிவி தொடராவும் வந்துடுச்சா

Jean Van Hamme, 1970 களில் இறுதியில் பெல்ஜியம் மொழியில் நாவலாக எழுதியது தான் 'Largo Winch' கதை. பிறகு இதே கதையை Philippe Francq காமிக் புத்தகமாக வெளியிட்டார். 2001 ல் இந்த கதை டிவி தொடராக எடுக்கப்பட்டு, ஒளிபரப்பப்பட்டது. 2009 ல் 'Largo Winch' படம் பிரெஞ்சு மொழியில் படமாக எடுக்கப்பட்டது. 2011 ல் இதன் இரண்டாம் பாகமும் எடுக்கப்பட்டது.

பவன் கல்யாணும் நடிச்சிருக்காரா

பவன் கல்யாணும் நடிச்சிருக்காரா

'Largo Winch: Empire Under Threat' என்ற பெயரில் ஆக்ஷன் சாகச வீடியோ கேம் 2002 ம் ஆண்டு ஐரோப்பாவில் மட்டும் வெளியிடப்பட்டது. இதே கதை 2018 ல் தெலுங்கில் 'Agnyaathavaasi' என்ற பெயரில் எடுக்கப்பட்டுள்ளது. இதில் பவன் கல்யாண் நடித்திருந்தார். இதன் ரீமேக் உரிமத்தை டி சீரிஸ் நிறுவனம் பெற்றிருந்தது.

அதுவும் ரீமேக் படம் தானா

அதுவும் ரீமேக் படம் தானா

டைரக்டர் வம்சி பைடபள்ளி ஏற்கனவே Olivier Nakache & Éric Toledano என்ற பிரெஞ்சு படத்தை தழுவி தான் தெலுங்கில் ஒபேரி, தமிழில் தோழா ஆகிய படங்களை இயக்கினார். நாகர்ஜுனா, கார்த்தி நடித்த இந்த படம் செம ஹிட் ஆனது. இதே போல் தற்போது வாரிசு படத்தின் கதையையும் இந்திய ஆடியன்சின் விருப்பத்திற்கு ஏற்ப சற்று மாற்றி அமைத்துள்ளாராம் வம்சி பைடபள்ளி.

உறுதியான தகவல் இல்லையே

உறுதியான தகவல் இல்லையே


'Largo Winch' கதையை செம சுவாரஸ்யமான கதையாக வம்சி மாற்றி அமைத்து, வாரிசு படமாக இயக்கி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் 'Largo Winch'கதையை தான் அவர் ரீமேக் செய்து வருகிறார் என்பதற்கு எந்த விதமான அதிகாரப்புர்வமான உறுதியான தகவலும் இல்லை.

இவ்வளவு பழைய கதையில் விஜய்யா

இவ்வளவு பழைய கதையில் விஜய்யா

ஆனால் இந்த தகவல் கசிந்ததில் இருந்தே, பல ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட நாவலின் கதையை டிவி தொடராக எடுத்து, பிறகு பிரெஞ்சு, தெலுங்கு மொழிகளில் படமாக எடுக்கப்பட்ட இவ்வளவு பழைய கதையிலா விஜய் நடித்து வருகிறார் என கேட்டு கிண்டல் செய்து வருகின்றனர். பீஸ்ட் தான் போச்சு. வாரிசு படமாச்சும் காப்பாத்தும் என நம்பிக்கையில் இருந்தால், இப்போது அதுவும் போச்சா என ரசிகர்கள் கடுப்பாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X