பிக்பாஸ் அல்டிமேட்...ஓவியா கலந்து கொள்ளாததற்கு இது தான் காரணமா ?
சென்னை : பிக்பாஸ் அல்டிமேட்டில் நடிகை ஓவியா கலந்து கொள்ளாமல் போனதால் அவரது ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். தற்போது ஓவியா ஏன் கலந்து கொள்ளவில்லை என்பதற்கான காரணம் வெளியாகி உள்ளது.
Recommended Video
பிரபலமான மாடலும், நடிகையுமான ஓவியா தமிழ், மலையாள படங்கள் பலவற்றிலும், சில கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் களவாணி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். மதயானை கூட்டம், கலகலப்பு போன்ற படங்கள் ஓவியாவிற்கு பெரிய அளவில் பெரிய வாங்கிக் கொடுத்தன. பிறகு பல படங்களில் கிளாமர் ரோல்களிலும் நடித்தார்.

பரபரப்பை கிளப்பிய ஓவியா
பிறகு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். தனது க்யூட்டான செய்கைகளாலும் நேர்மையான குணத்தாலும் ஆயிரக்கணக்கான ரசிகர்களின் மனங்களை கவர்ந்தார். அந்த சீசனில் நடிகர் ஆரவை காதலிப்பதாக கூறியது, தற்கொலைக்கு முயன்றது போன்றவற்றால் அந்த சீசனையே பரபரபாக்கினார் ஓவியா. இதனால் பாதியிலேயே நிகழ்ச்சியில் இருந்தும் வெளியேற்றப்பட்டார். இருந்தாலும் ஆர்மியே துவங்கும் அளவிற்கு ஓவியாவிற்கு தீவிர ரசிகர்கள் கிடைத்தனர்.

பிக்பாஸ் அல்டிமேட் ஆரம்பம்
சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியின் ஃபினாலே மேடையிலேயே ஓடிடி வெர்சனான பிக்பாஸ் அல்டிமேட் துவங்கப்பட உள்ளதாக டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் அறிவித்தது. ஜனவரி 30ம் தேதி இந்த நிகழ்ச்சியின் துவக்க விழா நடக்கும். இதையும் கமலே தொகுத்து வழங்குவார் என அறிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாம்.

ஓவியா இருக்காரா, இல்லையா
கடந்த ஒரு வாரமாக போட்டியாளர்கள் பற்றிய விபரங்களை சோஷியல் மீடியாவில், ஹாட்ஸ்டார் வெளியிட்டு வந்தது. இதில் 14 போட்டியாளர்கள் பங்கேற்க போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் ஓவியாவிற்கு லேசான காய்ச்சல், இருமல் போன்ற பிரச்சனைகள் இருப்பதால் அவர் பங்கேற்கவில்லை என்றார்கள். பிறகு துவக்க விழா ஷுட்டிங்கில் ஓவியா கலந்து கொண்டார். அதனால் அவர் பிக்பாஸ் அல்டிமேட் போட்டியாளர்களில் ஒருவராக இடம்பெற போகிறார் என சொல்லப்பட்டது.

ஓவியா பெயர் இல்லையே
ஆனால் இதுவரை வெளியான தகவலின் படி, சுரேஷ் சக்கரவர்த்தி, அபினய், வனிதா விஜயக்குமார், தாடி பாலாஜி, ஜுலி, சுஜா வருணி, அனிதா சம்பத், பாலாஜி முருகதாஸ், தாமரை, சினேகன், அபிராமி ஆகியோர் போட்டியாளர்களாக கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் போட்டியாளர்கள் பட்டியலில் ஓவியா இடம்பெறாததால் அவரின் ரசிகர்கள் சோஷியல் மீடியாக்களில் கவலை தெரிவித்து வருகிறார்கள்.

ஓவியா இல்லாததற்கு இதுதான் காரணமா
முதலில் ஓவியா தாமதமாக வந்து பங்கேற்பார் என கூறப்பட்டது. ஆனால் சில உடல்நிலை குறைபாடுகளால் தான் ஓவியா பிக்பாஸ் அல்டிமேட்டில் பங்கேற்கவில்லையாம். ஓவியா பங்கேற்பாரா, இல்லையா என்பது கடைசி வரை குழப்பத்திலேயே இருந்ததால் தான் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லையாம். இதனால் ரசிகர்களை ஏமாற்ற விரும்பாமல், ஓவியாவிற்கு பதில் மற்றொரு பிரபலமான போட்டியாளரை களமிறக்க பிக்பாஸ் அல்டிமேட் டீம் முயற்சி செய்து வருகிறதாம். அதனால் தான் 14 போட்டியாளர்களில் ஒரு சிலரை மட்டும் சஸ்பென்சாக வைத்துள்ளார்களாம்.


Click it and Unblock the Notifications











