தளபதி 66... விஜய்யுடன் ஜோடி சேர போவது இவர் தானா ?

சென்னை : விஜய் தற்போது டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் பீஸ்ட் படத்தின் ஷுட்டிங்கில் பிஸியாக இருந்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பூஜா ஹெக்டே லீட் ரோலில் நடித்து வருகிறார்.

பீஸ்ட் படம் பற்றிய தகவல்களை படக்குழு ரகசியமாக வைத்து வருகிறது. இருந்தாலும் சமீபத்தில் பீஸ்ட் படத்தின் முக்கிய சண்டைக் காட்சிகளின் வீடியோ வெளியாகி வைரலானது. இதனால் படக்குழு மீது விஜய்யின் தீவிர ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

பீஸ்ட் ரிலீஸ் எப்போ

பீஸ்ட் ரிலீஸ் எப்போ

த்ரில்லர், டார்க் காமெடி கலந்த படமான பீஸ்ட் படம் 2022 ம் ஆண்டு பொங்கலுக்கு அல்லது கோடை விடுமுறைக்கு ரிலீஸ் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிலீஸ் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் எதையும் படக்குழு இதுவரை வெளியிடவில்லை. தொடர்ந்து ஷுட்டிங் நடத்தப்பட்டு வருகிறது.

ரசிகர்கள் காத்திருப்பு

ரசிகர்கள் காத்திருப்பு

இதற்கிடையில் தளபதி 66, தளபதி 67 படங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி வருவதால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இதனால் பீஸ்ட் படம் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. எப்போது அடுத்த அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

தளபதி 66 ஹீரோயின் யார்

தளபதி 66 ஹீரோயின் யார்

இந்நிலையில் விஜய்யின் அடுத்த படமான தளபதி 66 படம் பற்றிய அறிவிப்பு சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. டைரக்டர் வம்சி பைடிபள்ளி இயக்கும் இந்த படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க உள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தனா, கியாரா அத்வானி ஆகியோருடன் பேசப்பட்டு வருவதாக ஏற்கனவே கூறப்பட்டது.

இவர் தான் விஜய்க்கு ஜோடியா

இவர் தான் விஜய்க்கு ஜோடியா

டோலிவுட் லேட்டஸ்ட் தகவலின் படி, தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிப்பது ஏறக்குறைய உறுதியாகி விட்டதாம். அவருடனான பேச்சுவார்த்தை அடுத்த கட்டத்திற்கு போய் உள்ளதாம். கியாரா அத்வானி ஏற்கனவே டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் ஆர்சி 15 படத்தில் லீட் ரோலில் நடித்து வருகிறார். தளபதி 66 படத்திற்கு அவர் ஓகே சொல்லி விட்டால் தென்னிந்திய மொழிகளில் கியாரா அத்வானி நடிக்கும் இரண்டாவது மெகா பட்ஜெட் படம் இதுவாக இருக்கும்.

Recommended Video

விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளை நேரில் சந்தித்து பாராட்டிய THALAPATHY VIJAY
விரைவில் அறிவிப்பு

விரைவில் அறிவிப்பு

நம்ப தகுந்த வட்டாரங்கள் வெளியிட்டுள்ள தகவலின் படி, தளபதி 66 படத்தில் விஜய்யின் மகளாக மகேஷ் பாபுவின் மகள் சித்தாரா நடிப்பதும், முக்கிய ரோல் ஒன்றில் பிரகாஷ் ராஜ் நடிப்பதும் உறுதியாகி விட்டதாம். விரைவில் ஹீரோயின் உள்ளிட்ட படக்குழு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X