»   »  ஹாலிவுட் படத்தில் தனுஷுக்கு இந்த வேடமா?

ஹாலிவுட் படத்தில் தனுஷுக்கு இந்த வேடமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழ் சினிமாவில் அரிதாகப் பயன்படுத்தப்படும் கதாபாத்திரம் தான் மேஜிக் மேன் கதாபாத்திரம். ஒரு சிலரைத் தவிர கண்ணுக்கெட்டிய வரையில் பிரபல நடிகர்கள் யாரும் மேஜிக்மேன் கதாபாத்திரத்தில் நடித்ததாகத் தெரியவில்லை.

இந்நிலையில் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் 'மெர்சல்' படத்தில் கிராமத்து இளைஞர், மேஜிக் நிபுணர் மற்றும் டாக்டர் என மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் விஜய்.

இதில் மேஜிக் நிபுணர் கதாபாத்திரத்துக்காக விஜய்க்குப் பயிற்சி அளிப்பதற்காக வெளிநாட்டு மேஜிக் கலைஞர் கோகோ ரெக்கியூம் சென்னைக்கு வரவழைக்கப்பட்டார். இங்கே தங்கியிருந்து சில அடிப்படையான மேஜிக் வித்தைகளைக் கற்றுக் கொடுத்திருக்கிறார்.

தனுஷும் மேஜிக் மேன் :

தனுஷும் மேஜிக் மேன் :

நடிகர் தனுஷும் தற்போது ஒரு படத்தில் மேஜிக்மேன் கேரக்டரில் நடித்துள்ளார் எனும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அந்தப் படம் தமிழில் அல்ல... ஹாலிவுட்டில்.

ஹாலிவுட்டில் மேஜிக் கலைஞர் :

ஹாலிவுட்டில் மேஜிக் கலைஞர் :

'தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்' என்கிற பெயரில் கனடா நாட்டைச் சேர்ந்த மர்ஜான் சத்ராபி இயக்கத்தில் உருவாகியுள்ள படத்தில்தான் மேஜிக் கலைஞராக நடித்திருக்கிறார் தனுஷ்.

அஜாதசத்ரு :

அஜாதசத்ரு :

ரொமான்டிக் காமெடி படமாக உருவாகி வரும் இப்படத்தில் 'அஜாதசத்ரு' எனும் கேரக்டரில் தனுஷ் நடிக்கிறார். தனுஷுக்கு தெருவில் மேஜிக் நிகழ்ச்சி நடத்தும் மேஜிக் கலைஞர் வேடமாம்.

கடவுளின் அருள் :

கடவுளின் அருள் :

இந்தக் கதாபாத்திரம் பற்றி தனுஷ், 'இது கடவுளின் அருளால் கிடைத்த வாய்ப்பு. எனக்கு மூன்று ஹாலிவுட் படங்களில் சான்ஸ் கிடைத்தாலும் மிக மகிழ்ச்சியாக ஒப்புக்கொண்டது இந்த வேடத்துக்குத்தான். இது மிக வலுவான கேரக்டர்' எனத் தெரிவித்திருக்கிறார்.

இதையே ட்ரெண்ட் ஆக்குவாங்களே :

இதையே ட்ரெண்ட் ஆக்குவாங்களே :

முன்னணி நடிகர்களான விஜய், தனுஷ் ஆகியோர் மேஜிக் கலைஞராக நடிப்பதால் இனி பலரும் இந்த வேடத்தில் நடிக்க வாய்ப்பிருக்கிறது. பேய்ப்பட சீசன், அரசியல்பட சீசன் என நாம தான் சினிமாவுக்கே சீசன் தொடங்கினவங்களாச்சே..!

English summary
Dhanush has acted as a magic artist in the hollywood film 'The Extraordinary Journey of Fakir' directed by Marjane Satrapi.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X