இருவரில் ஒருவர்...இந்த வாரம் வெளியேற போகிறவர் தாமரையா? பாவனியா?

சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சி கடைசி வாரத்தை எட்ட உள்ளது. 106 நாட்களை கொண்ட இந்த நிகழ்ச்சி 100 நாட்களை நெருங்கி வருகிறது. இதனால் ஃபைனலுக்கு யாரெல்லாம் போக போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

ஒவ்வொரு வாரமும் குறைந்த ஓட்டுக்களை பெற்றவர்கள் என்ற அடிப்படையில் போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வந்தனர். ஆனால் தற்போது எதிர்பாராத விதமாக அதிக ஓட்டு பெற்றவர்களும் கூட வெளியேறி வருவது அனைவருக்கும் அதிர்ச்சியையும், குழப்பத்தையும் தந்து வருகிறது.

டிக்கெட் வென்ற அமீர்

டிக்கெட் வென்ற அமீர்

கடந்த வாரம் எவிக்ஷன் மூலம் சஞ்சீவ் வெளியேற்றப்பட்ட நிலையில், அமீர் டிக்கெட் டு ஃபினாலேவை வென்று நேரடியாக இறுதிப் போட்டிக்கு சென்று விட்டார். இந்த வாரம் அனைவரும் நாமினேட் செய்யப்பட்டுள்ளதால் இந்த வாரம் யார் வெளியே போவார்கள் என ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்கையில், பணப்பெட்டி டாஸ்க் நடத்தப்பட்டது.

பணப்பெட்டியை எடுத்த சிபி

பணப்பெட்டியை எடுத்த சிபி

ரூ.3 லட்சத்துடன் துவங்கப்பட்ட பணப்பெட்டி டாஸ்கில் தொகை படிப்படியாக உயர்த்தப்பட்டு 12 லட்சம் வரை உயர்த்தப்பட்டது. தாமரை, நிரூப், பாவனி ஆகியோரில் ஒருவர் தான் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக சிபி, அந்த பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேறினார்.

ஃபைனலுக்கு சென்ற நிரூப்

ஃபைனலுக்கு சென்ற நிரூப்

இந்த வாரம் சிபி எலிமினேட் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் 12 லட்சத்துடன் சென்று விட்டார். இவரைத் தொடர்ந்து மக்களிடம் குறைந்த ஓட்டுக்களை பெற்று, வெளியேற்ற பட்டியலில் இருந்தவர் நிரூப். ஆனால் Dare, Sacrifice டாஸ்க்கில் வீட்டில் உள்ளவர்கள் தேர்வு செய்ததன் அடிப்படையில் நிரூப், இரண்டாவது ஆளாக ஃபைனலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

வெளியேற போவது யார்

வெளியேற போவது யார்

வெளியேறுவார் என நினைத்தவர் ஃபைனலுக்கு சென்றுள்ளது அனைவருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இந்த வாரம் வெளியேற போகிறவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அமீர், நிரூப் பைனலுக்கு சென்று விட்டார்கள். ராஜு மற்றும் பிரியங்கா அதிக ஓட்டுக்கள் பெற்று டாப் லிஸ்டில் உள்ளனர். மீதம் இருப்பது தாமரை மற்றும் பாவனி தான். இவர்களில் ஒருவர் தான் இந்த வாரம் வெளியேற்றப்படுவார் என்பது உறுதியாகி விட்டது.

Recommended Video

Niroop Vera Level Strategy in BIGG BOSS TAMIL | Niroop in FINALS Top 5
இவர் தான் போக போகிறாரா

இவர் தான் போக போகிறாரா

இவர்கள் இருவரையும் ஒப்பிடுகையில், பாவனியை விட தாமரைக்கு தான் மக்களின் ஆதரவு அதிகம் உள்ளது. போட்டிகள் பலவற்றிலும் முழு பங்களிப்பை கொடுத்துள்ளார். அந்த அடிப்படையில் பார்த்தால் பாவனி வெளியேற்றப்பட வாய்ப்புள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X