என்னது...ஜென்டில்மேன் 2 இசையமைப்பாளர் இவரா...அப்போ அந்த தங்ககாசு யாருக்கு?

சென்னை : தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ள ஜென்டில்மேன் 2 படத்திற்கு யார் இசையமைக்க போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனால் நேற்று அறிவித்த தங்க காசை யாருக்கு கொடுப்பார்கள் அல்லது கொடுத்தார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

1993 ம் ஆண்டு டைரக்டர் ஷங்கர் இயக்கிய படம் ஜென்டில்மேன். ஷங்கர், டைரக்டராக அறிமுகமான படமும் இது தான். அர்ஜுன், மதுபாலா, கவுண்டமணி, செந்தில், மனோரமா, சரண்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தை குஞ்சுமோன் தயாரித்திருந்தார். மிக பிரம்மாண்டமாக இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசை, அதிரடி ட்விஸ்ட், அதிரடி ஆக்ஷன் காட்சிகள் ஆகியன இந்த படத்திற்கு மிகப் பெரிய பிளசாக அமைந்தன. முதல் படமே பிளாக் பஸ்டர் படமாக அமைந்ததால், டைரக்டர் ஷங்கரும் பிரம்மாண்ட இயக்குனராக அடையாளம் காணப்பட்டார். இதைத் தொடர்ந்து சில படங்களை தயாரித்த குஞ்சுமோன், பல ஆண்டுகளாக படம் ஏதும் தயாரிக்காமல் இருந்தார்.

ஜென்டில்மேன் 2 அறிவிப்பு

ஜென்டில்மேன் 2 அறிவிப்பு

தற்போது ஜென்டில்மேன் 2 படத்தை தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இதற்கான படக்குழுவினர் பற்றிய தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த படத்தையும் ஷங்கரே இயக்க போகிறாரா அல்லது அவருக்கு பதில் யார் அதே பிரம்மாண்டத்தை கொண்டு வர போகிறார், இதிலும் அர்ஜுன் நடிப்பாரா, தற்போதுள்ள டாப் ஹீரோக்களில் யார் நடிப்பார் என்பது தெரியவில்லை. ஆனால் ஆரம்பமே இசையமைப்பாளர் தேர்வில் துவங்கி உள்ளனர்.

யூகித்தால் தங்ககாசு பரிசு

யூகித்தால் தங்ககாசு பரிசு

ஜென்டில்மேன் 2 படத்திற்கு இசையமைக்க போவது யார். உங்களின் யூகம் என்ன என்பதை #G2MusicDirector என்ற ஹாஷ்டேக்குடன் ட்விட்டரில் பகிருங்கள். அவர்களில் சரியாக கணிக்கும் 3 பேர் தேர்வு செய்யப்பட்டு தங்க காசுகள் பரிசு வழங்கப்படும் என நேற்று ஒரு வீடியோவுடன் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த இசை வீடியோ செம டிரெண்ட் ஆனது.

இவர் தான் இசையமைப்பாளரா

இவர் தான் இசையமைப்பாளரா

இந்நிலையில் ஜென்டில்மேன் 2 படத்திற்கு இசையமைக்க எம்.எம்.கீரவாணியை குஞ்சுமோன் தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது. எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய பாகுபலி, ஆர்ஆர்ஆர் ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர் கீரவாணி. அதனால் தான் தயாரிக்க போகும் பிரம்மாண்ட படத்திற்கும் கீரவாணி தான் இசையமைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டாராம் குஞ்சுமோன். சமீபத்தில் இருவரும் சந்தித்து, இது பற்றிய ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டார்களாம்.

மும்முரமான டைரக்டர் தேர்வு

மும்முரமான டைரக்டர் தேர்வு

ஜென்டில்மேன் படம் ஷங்கருக்கு மட்டுமின்றி ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் மாஸ் ஹிட் கொடுத்த படம் என்பதால் குஞ்சுமோனின் முதல் தேர்வும் ஏ.ஆர்.ரஹ்மானாக தான் இருந்ததாம். ஆனால் திடீரென முடிவை மாற்றி கீழவாணியை புக் செய்து விட்டாராம். தற்போது டைரக்டர் யார் என்பதை முடிவு செய்யும் பணியில் இறங்கி உள்ளாராம். டைரக்டரை முடிவு செய்த பிறகு குஞ்சுமோனும், டைரக்டரும் சேர்ந்து படத்தின் ஹீரோவை தேர்வு செய்வார்களாம். புகழ்பெற்ற ஒரு நடிகர் தான் ஹீரோவாக நடிக்க போகிறாராம்.

தங்ககாசு யாருக்கு கொடுப்பீங்க

தங்ககாசு யாருக்கு கொடுப்பீங்க

ஜென்டில்மேன் 2 இசையமைப்பாளர் யார் என்பதை கண்டுபிடிக்க தான் நேற்று போட்டி அறிவித்தார்கள். ஆனால் இன்று, யார் இசையமைக்க போகிறார் என்ற தகவல் வெளியாகி விட்டது. இதனால் இவர்கள் அறிவித்த அந்த தங்க காசு பரிசை யாருக்கு கொடுப்பார்கள் என ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X