இதனால்தான் கமல் வெளியேறினாரா? பிக்பாஸ் அல்டிமேட் வெளியான புது தகவல்

சென்னை : பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக கமல் அறிவித்து விட்டார். இதற்கு அவர் சினிமா, அரசியல் இரண்டிலும் பிஸியாக இருப்பது தான் காரணம் என கூறப்பட்டது. ஆனால் உண்மையான காரணம் என்ன என்பது பற்றிய புது தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்து சீசன்கள் மற்றும் தற்போது ஓடிடி வெர்சனாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் ஆகிய நிகழ்ச்சிகளை கமல் தான் தொகுத்து வழங்கி வந்தார். அரசியல், சினிமா என பிஸியாக இருந்த போதிலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் தான் தொகுத்து வழங்கி வந்தார்.

எந்த ரூபத்திற்கு போனாலும் வருவேன்

எந்த ரூபத்திற்கு போனாலும் வருவேன்

பிக்பாஸ் நிகழ்ச்சி ஓடிடி மட்டுமல்ல வாட்ச் ரூபத்திற்கு சென்றாலும் அதிலும் நான் வருவேன் என்று பிக்பாஸ் அல்டிமேட் துவக்க நாளன்றே சொன்னார் கமல். கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்த சமயத்திலும் வீடியோ கான்ஃபிரன்சிங் மூலம் ரசிகர்களையும், போட்டியாளர்களையும் சந்தித்தார் கமல். ஆனால் தற்போது யாரும் எதிர்பாராத விதமாக பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து விலகுவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார் கமல். இதில் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

பிக்பாஸிலிருந்து விலகிய கமல்

பிக்பாஸிலிருந்து விலகிய கமல்

ஆனால் கொரோனா உள்ளிட்ட காரணங்களால் தான் நடித்து வரும் விக்ரம் படத்தின் ஷுட்டிங் தொடர்ந்து தள்ளி போவதால் மற்ற நடிகர், நடிகைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து கனத்த இதயத்துடன் விலகுவதாகவும், சிறு இடைவேளைக்கு பிறகு பிக்பாஸ் சீசன் 6 ல் மீண்டும் சந்திக்கலாம் என அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார் கமல். ஆனால் உண்மையான காரணம் அது இல்லையாம்.

இது தான் உண்மையான காரணமா

இது தான் உண்மையான காரணமா

கமல் நடித்து வரும் விக்ரம் படத்தை ஹாட்ஸ்டார் தான் மிக அதிக தொகை கொடுத்து வாங்கி உள்ளதாம். இந்த படம் திட்டமிட்ட நேரத்தில் முடிக்க முடியாமல் தள்ளி போய் கொண்டிருக்கிறதாம். இதனால் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் கமலுக்கு நெருக்கடி கொடுக்க துவங்கி விட்டதாம். படத்தின் தாமதத்திற்கு கமல் தான் காரணம் என குற்றம்சாட்டப்பட்டு வருகிறதாம். ஹாட்ஸ்டார் கொடுத்த நெருக்கடி காரணமாக தான் பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து விலகும் முடிவை எடுத்தாராம் கமல்.

கமலுக்கு பதில் சிம்பு

கமலுக்கு பதில் சிம்பு

இதனால் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து கமல் விலகுவதாக அறிவித்ததால், நிகழ்ச்சிக்கு இருக்கும் வரவேற்பு குறைந்து விட கூடாது என்பதால் அவரை இடத்தை நிரப்புவதற்காக தான் சிம்புவை பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வைக்க முடிவு செய்திருக்கிறார்களாம். டாப் ஹீரோ ஒருவர் தொகுத்து வழங்கினால் தொடர்ந்து நிகழ்ச்சியை ரசிகர்கள் பார்ப்பார்கள் என நினைத்து தான் இந்த முடிவை எடுத்தார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X