தளபதி 66 லிருந்து ராஷ்மிகா வெளியேறினாரா? வெளியேற்றப்பட்டாரா?...என்ன காரணம்?

சென்னை : தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளதாக பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், திடீரென தளபதி 66 ல் இருந்து அவர் எதற்காக மாற்றப்பட்டார் என்ற காரணம் வெளியாகி உள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் படம் ஏப்ரல் 13ம் தேதி ரிலீசாக உள்ளது. இதைத் தொடர்ந்து விஜய்யின் அடுத்த படமான தளபதி 66 படத்தை தெலுங்கு டைரக்டர் வம்சி பைடபள்ளி, தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்க போவதாக பல மாதங்களுக்கு முன்பே அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டார்கள்.

தளபதி 66 ஷுட்டிங் எப்போ

தளபதி 66 ஷுட்டிங் எப்போ

தில் ராஜு தயாரிக்கும் இந்த படம் வித்தியாசமான கதை என்றும், இந்த படம் 2022ம் ஆண்டு தீபாவளி அல்லது 2023ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்படும் என்றும் தயாரிப்பாளரே பேட்டி ஒன்றில் கூறி விட்டார். ஏப்ரல் முதல் வாரத்தில், அதாவது ஏப்ரல் 2 ம் தேதி யுகாதி நாளில் தளபதி 66 படத்தின் பூஜை நடைபெற உள்ளதாம். அதைத் தொடர்ந்து ஷுட்டிங்கும் துவங்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஹீரோயின் ராஷ்மிகா இல்லையா

ஹீரோயின் ராஷ்மிகா இல்லையா

தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என்று முதலில் சொல்லப்பட்டது. ஆனால் அந்த தகவலை அவரே மறுத்து விட்டார். பிறகு ராஷ்மிகா தான் ஹீரோயின் என்று சொல்லப்பட்டது. விரைவில் அறிவிப்பு வரும் என கூறப்பட்ட நிலையில், திடீரென ராஷ்மிகா இல்லை அவருக்கு பதில் தமன்னா நடிப்பதாக கூறப்பட்டது. புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுடன் ரொமான்ஸ் காட்சிகளில் அசத்திய ராஷ்மிகா, விஜய்யுடனும் ஜோடி சேருவார் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்து, ஏமாற்றம் அடைந்தனர்.

வெளியேறினாரா? வெளியேற்றப்பட்டாரா?

வெளியேறினாரா? வெளியேற்றப்பட்டாரா?

தளபதி 66 படத்தில் இருந்து ராஷ்மிகா வெளியேற்றப்பட்டாரா அல்லது வெளியேறினாரா என்றும் ரசிகர்கள் கேட்க துவங்கினர். இது பற்றி விசாரித்ததில், ராஷ்மிகாவாக தான் தளபதி 66 பட வாய்ப்பை மறுத்தாராம். இந்தியில் மிருகங்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக பரினீதி சோப்ரா நடிப்பதாக இருந்தது. ஆனால் மற்ற படங்களின் தேதியுடன் கால்ஷீட் ஒத்து போகாததால் பரீனிதி சோப்ரா இந்த படத்தில் இருந்து விலகியதால், வழக்கமான நடிகைகளுக்கு பதில் புதிய நடிகை ஒருவரை ரன்பீருடன் ஜோடி சேர்க்க தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

இது தான் காரணமா?

இது தான் காரணமா?

அப்போது புஷ்பா படத்தில் நடித்த ராஷ்மிகாவை நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என நினைத்துள்ளனர். விலங்குகளுடன் நெருக்கமாக பழக கூடியவர் ராஷ்மிகா. அதோடு ரன்பீருடன் அவரது கெமிஸ்ட்ரி சேர்ந்தால் திரையில் அனல் பறக்கும் என தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதே போல் பாலிவுட்டில் மற்றொரு படத்தில் நடிக்கவும் ராஷ்மிகாவிடம் பேசப்பட்டு வருகிறதாம். இதனால் பாலிவுட்டில் தனக்கு நிரந்தரமாக இடம் காத்திருப்பதாக நினைத்த ராஷ்மிகா, தளபதி 66 வாய்ப்பை மறுத்து விட்டாராம்.

விஜய்க்கு ஜோடி இவரா?

விஜய்க்கு ஜோடி இவரா?

இதனால் தான் அவருக்கு பதில் விஜய்க்கு ஜோடியாக பாலிவுட் நடிகையான கீர்த்தி சனோமை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாம். அதே சமயம், இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பதாக சொல்லப்படுவதால் ஒரு கேரக்டருக்கு ஜோடியாக கீர்த்தி சனோமையும், மற்றொரு கேரக்டருக்கு வேறு ஒரு ஹீரோயினையும் நடிக்க வைக்கலாம். தளபதி 66 ல் இரண்டு ஹீரோயின்களை நடிக்க வைக்க திட்டமிடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட உள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X