ஜெயம் ரவியுடன் நடிக்க மறுத்த டாப் நடிகை...இன்று ஓகே சொல்ல இதுதான் காரணமா ?

சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக முக்கியமான படம் ஒன்றில் நடிக்க மறுத்த டாப் நடிகை ஒருவர், தற்போது மற்றொரு படத்தில் நடிக்க ஓகே சொல்லி உள்ளார். இதற்கு காரணம் என்ன என்ற தகவல் வெளியாகி உள்ளதால், அந்த நடிகைக்கு பலரும் தற்போது அட்வைஸ் செய்து வருகிறார்களாம்.

நடிகர் ஜெயம் ரவி அடுத்தடுத்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ள ஜெயம் ரவி, அதைத் தொடர்ந்து அகிலன் உள்ளிட்ட சில படங்களில் நடிக்க வரிசையாக கமிட் ஆகி வருகிறார். அகிலன் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியா பவானிசங்கர் நடித்து வருகிறார்.

அடுத்த காமெடி கலாட்டாவா

அடுத்த காமெடி கலாட்டாவா

இந்நிலையில் காமெடி படம் இயக்குவதில் ஸ்பெஷலிட்டான டைரக்டர் எம்.ராஜேஷ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளார். சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட படங்களை இயங்கி செம ஹிட் கொடுத்தவர் எம்.ராஜேஷ். கடைசியாக வணக்கம் டா மாப்பிள்ளை என்ற படத்தை இயக்கினார். தற்போது ஜெயம் ரவியுடன் கூட்டணி வைக்க உள்ளார். இதுவும் காமெடி படமாக தான் இருக்கும் என சொல்லப்படுகிறது.

ஜெயம் ரவிக்கு நோ சொன்ன நடிகை

ஜெயம் ரவிக்கு நோ சொன்ன நடிகை

கோலிவுட் லேட்டஸ்ட் டாக் என்னவென்றால் இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க போகிறாராம். அவருக்கு கதை பிடித்திருக்கிறது என சொல்லி விட்டாராம். ஆனால் தேதிகள் முடிவான பிறகு பட ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறேன் என சொல்லி விட்டாராம். ஏற்கனவே மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்க முதலில் கீர்த்தி சுரேஷிடம் தான் கேட்கப்பட்டதாம்.

பல படங்கள் மிஸ் ஆகிடுச்சே

பல படங்கள் மிஸ் ஆகிடுச்சே

ஆனால் அப்போது ரஜினிக்கு தங்கையாக அண்ணாத்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததால், ரஜினி பட வாய்ப்பை மிஸ் பண்ண மனமில்லாமல் பொன்னியின் செல்வனுக்கு நோ சொல்லி விட்டாராம். அதற்கு பிறகு தான் அந்த ரோலில் த்ரிஷா நடித்தாராம். இதே போல் அண்ணாத்த படத்தில் நடிப்பதற்காக தெலுங்கில் நானி நடித்த ஷ்யாம் சிங்காராய் படத்தில் நடிக்கவும் கீர்த்தி சுரேஷ் நோ சொல்லி விட்டாராம். ஷ்யாம் சிங்கா ராய் படத்தில் மிஸ் ஆன நானி - கீர்த்தி சுரேஷ் ஜோடியை தற்போது தசரா படத்தில் ஒன்று சேர்த்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்திற்கு பூஜை போடப்பட்டது.

இப்போ ஓகே சொல்ல இது தான் காரணமா

இப்போ ஓகே சொல்ல இது தான் காரணமா

தெலுங்கில் ஓகே. ஆனால் தமிழில், மணிரத்னம் படம், அதுவும் பொன்னியின் செல்வன் போன்ற பெருமை மிகு காவிய படத்திலேயே நடிக்க நோ சொன்னதால், வாய்ப்புக்கள் இல்லாமல் போய் விட்டதாம். தற்போது நடித்து முடிந்துள்ள சாணி காயிதம் படம் மட்டுமே தமிழில் கைவசம் உள்ளது. விஜய்க்கு ஜோடியாக தளபதி 66 படத்தில் நடிக்க ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை நடத்தி, அதுவும் இல்லாமல் போய் விட்டது. இப்படியே போனால் தமிழில் காணாமல் போய்விடுவோமா என்ற நிலைக்கு கீர்த்தி சுரேஷ் வந்து விட்டாராம். பலர் அட்வைஸ் செய்ததால் தற்போது ஜெயம் ரவியின் இந்த படத்திற்கு ஓகே சொல்லி உள்ளாராம்.

செம பிளானா இருக்கே

செம பிளானா இருக்கே

ஜெயம் ரவி - எம்.ராஜேஷ் இணைய உள்ள படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறாராம். நேமிசந்த் ஜாபக் தயாரிக்கிறார். இந்த படத்தில் நடிப்பதற்காக தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியன்கள் பலரிடமும் பேசப்பட்டு வருகிறதாம். மிகப் பெரிய காமெடி படமாக இந்த படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதால் தமிழில் ஹீரோயினாக மீண்டும் ஒரு ரவுண்ட் வர இது நல்ல சான்ஸ் என கீர்த்தி சுரேஷிற்கு நெருக்கமான சிலர் அட்வைஸ் வழங்கி வருகிறார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X