ரஜினி எதிர்பார்ப்பது வேற...தலைவர் 169 ஷுட்டிங் தாமதத்திற்கு இது தான் காரணமா?

சென்னை : பீஸ்ட் படத்திற்கு கிடைத்த விமர்சனங்களையும் தாண்டி தலைவர் 169 படத்தை எப்படியாவது மெகா ஹிட்டாக்கி தன்னை யாரென்றே நிரூபித்து ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் நெல்சன் திலீப்குமார். இதற்காக அவர் தீவிரமாக வேலை செய்வதாக சொல்லப்படுகிறது.

தலைவர் 169 படத்திற்கான வேலைகள் சீரியசாக நடந்து வருவதாக கூறப்பட்டாலும் படத்தின் ஷுட்டிங் துவங்கப்படுவது தொடர்ந்து தாமதமாகி வருகிறது. தமிழ் புத்தாண்டிற்கு தலைவர் 169 படத்திற்கான பூஜை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் தற்போது வரை அப்படி எதுவும் நடக்கவில்லை.

ரஜினி அமெரிக்கா சென்று திரும்பியதும் துவங்கப்படும், ஜுன் மாதம் துவங்கப்படும், ஜுலை மாதம் துவங்கப்படும் என அடுத்தடுத்து பல தகவல்கள் வெளியாகின. கடைசியாக இப்போது ஆகஸ்ட்டில் தலைவர் 169 ஷுட்டிங் துவங்கப்படும் என கூறி இருக்கிறார்கள்.

தலைவர் 169 அறிவிப்பு

தலைவர் 169 அறிவிப்பு

மற்றொரு புறம் தலைவர் 169 படம் பற்றி அடுத்தடுத்து பல தகவல்கள் வெளிவந்தாலும், அவை அனைத்தும் பொய் என்றும் கூறப்பட்டு வருகிறது. இதனால் எது உண்மை, எது பொய் என தெரியாமல் ரசிகர்கள் குழம்பி வருகிறார்கள். நெல்சன் இயக்கும் தலைவர் 169 படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது என்பது மட்டும் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட தகவலாக உள்ளது.

அப்போ எல்லாமே பொய்யா

அப்போ எல்லாமே பொய்யா

தலைவர் 169 படத்தின் திரைக்கதை உருவாக்கத்திற்கு உதவ கே.எஸ்.ரவிக்குமாரை ரஜினி அழைத்து வந்திருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அது வெறும் வதந்தி தான். கே.எஸ்.ரவிக்குமாருக்கும் தலைவர் 169 படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என நெல்சனுக்கு மிக நெருக்கமான காமெடி நடிகர் கிங்ஸ்லீ தெரிவித்துள்ளார். கதை, டைட்டில் பற்றி பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கையில், ஃபர்ஸ்ட் ஆஃப் கதை எழுதுவதில் நெல்சன் கவனம் செலுத்தி வருவதாக கூறி உள்ளார்.

ரஜினி மனசு மாறிவிட்டாரா

ரஜினி மனசு மாறிவிட்டாரா

இதற்கிடையில் புதிய தகவலாக, தலைவர் 169 படத்திற்காக நெல்சன் தனது கதையில் சில மாற்றங்களை செய்து, அதை ரஜினியும் கிட்டத்தட்ட ஓகே செய்து விட்டாராம். இந்த சமயத்தில் கமல் நடித்த விக்ரம் படம் ரிலீசானதால் அதை பார்த்த பிறகு ரஜினியின் ஐடியா மாறி உள்ளதாம். கமலின் விக்ரம் படம், கமலுக்கு வயதானாலும் அது கொஞ்சமும் தெரியாமல் கமலுக்கு ஏற்றாற் போல் ஆக்ஷன் காட்சிகள் போன்றவற்றை அமைத்திருந்தது ரஜினியை மிகவும் கவர்ந்து விட்டதாம்.

வேற எதிர்பார்க்கிறாரா

வேற எதிர்பார்க்கிறாரா

அதனால் விக்ரம் மிரட்டலுக்கு இணையான ஒரு கதை தலைவர் 169 படத்தில் இருந்தால் நன்றாக இருக்கும் என ரஜினி நினைக்கிறாராம். இதனால் கதையில் மேலும் சில மாற்றங்களை செய்யலாம் என நெல்சனிடம் கூறி இருக்கிறார் ரஜினி. தொடர்ந்து கதையில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதால் தான், கதை முழு வடிவம் பெறாமல் எப்படி ஷுட்டிங்கை துவக்குவது என்ற குழப்பத்தில் தான் தலைவர் 169 படத்தின் ஷுட்டிங் தொடர்ந்து தள்ளி போய் கொண்டிருக்கிறதாம்.

படத்திற்கு மாஸ் டைட்டில்

படத்திற்கு மாஸ் டைட்டில்

தலைவர் 169 படத்திற்கு சாம்ராட், ஜெயிலர், கிரிமினல், பாஸ் என டைட்டில்கள் வைக்க உள்ளதாக சோஷியல் மீடியாவில் தகவல் பரவி வருவதும் உண்மையில்லையாம். தலைவர் 169 படத்திற்கு இதுவரை எந்த டைட்டிலும் முடிவு செய்யப்படவில்லையாம். அதே சமயம் படத்திற்கு மாஸாக ஒரு டைட்டிலை வைக்க தான் நெல்சன் முடிவு செய்திருக்கிறாராம்.

தீவிர யோசனையில் நெல்சன்

தீவிர யோசனையில் நெல்சன்

ஆனால் தலைவர் 169 படத்திற்கு கிட்டத்தட்ட 30 டைட்டில் வரை நெல்சன் தயார் செய்து கொண்டு போனதாகவும், அவை அனைத்தையும் ரஜினி ரிஜக்ட் செய்து விட்டதாகவும் ஒரு தகவல் சொல்லப்படுகிறது. கதை, டைட்டில் என அனைத்திலும் ரஜினியின் எதிர்பார்ப்பு வேறாக உள்ளதாம். அவருக்கு பிடித்த மாதிரி, அவரை திருப்திப்படுத்தி, கவரும் வகையில் ஒவ்வொரு விஷயத்தையும் அமைக்க வேண்டும் என்று தான் நெல்சன் தீவிர முயற்சி செய்து வருகிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X